Thursday, 15 September 2011

உணர்வு வார இதழின் விமர்சனங்கள்


மற்ற இயக்கங்களைப் பற்றிய உணர்வு வார இதழின் விமர்சனங்கள் மார்க்க அடிப்படையில் அமைந்தவைகளா?


RASMIN M.I.Sc



கேள்வி :

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ரஸ்மின் நீங்கள் ஸ்ரீலங்கா வை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு கேள்வி கேட்கிறேன் அது சம்பந்தமாக மார்க்கத்தில் தீர்வு என்ன? கேள்வி : தமிழ்நாட்டில் இல்ல TNTJ வின் உணர்வு வார இதழில் மற்ற நம் சமுதாய இயக்கத்தை பற்றி குற்றம் குறை கூறி செய்திகள் இல்லாத நாட்களே இல்லையே! அவர்கள் செய்வது மார்க்க அடிப்படையில் சரிதானா? 

sharfudeen abudhabi, uae

பதில் : அன்பின் சகோதரர் ஷர்புதீன் அவர்களுக்கு !

உங்கள் கேள்வி விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ் நாட்டில் ஏகத்துவப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகளில் முன்னனியில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தனது சேவைகள் மற்றும் செய்திகளை வெளிக்கொணரும் முகமாக உணர்வு என்ற சமுதாயப் பத்திரிக்கை ஒன்றை நடத்திவருகிறது. அப்பத்திரிக்கையில் மற்ற அமைப்புக்களை விமர்சித்து எழுதுவது சரியா என்பதுதான் உங்கள் கேள்வி.

எந்த ஒரு அமைப்பானாலும் இஸ்லாமிய அமைப்பாக தன்னை இனங்காட்டிக் கொள்ளும் போது அவ்வமைப்பு தனது செயல்பாடுகளையும் இஸ்லாமிய கொள்கைக்குற்பட்டதாகத் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. இதை இந்தியாவைப் பற்றியோ அல்லது தமிழகத்தைப் பற்றியோ அறியாமல் எழுதவில்லை. கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவுடன் அதிலும் குறிப்பாக தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவன் நான்.

அங்கு நான் வசித்த காலங்களில் இஸ்லாமியப் பெயர் தாங்கி இயக்கங்கள் இஸ்லாத்திற்கு மாற்றமாக எப்படியெல்லாம் நடக்கிறார்கள் என்பதையும் இதைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா என்றும் நினைத்து பல முறை ஆதங்கப்பட்டதுண்டு.

ஆனால் இன்று அந்த வேலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மிகவும் வீரியமாகவும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலும் தெளிவாக செய்துவருகிறது.

உதாரணத்திற்கு

தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுவாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கியது.

காதர் மொஹிதீன் போன்றவர்கள் சாமியார்களின் கால்களில் வீழ்ந்தது.

ஜாக்கின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்திக் கொண்டது.

எம்.என்.பி அல்லது பாப்புலர் பிரன்ட் (அனைத்து ஆங்கில எழுத்துக்களிலும் இவர்களுக்கு இயக்கம் இருக்கும் போலுள்ளது) போன்றவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு என்ற பெயரில் கொடி வணக்கம் செய்வது.

கடந்த தேர்தலில் ஜெயித்த ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இயேசுநாதரின் புனிதம் பற்றிப் பாடப்பட்ட சி.டி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டமை.

கடந்த சில வருடங்களுக்கு முன் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பாக்கர் உள்ளிட்டவர்கள் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டமை.

இலங்கை முஸ்லீம்களை அழித்து முஸ்லீம் சமுதாயத்தை நடுத்தெருவில் நிறுத்திய விடுதலைப் புலி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தமுமுக, பாக்கர் பாப்புலர் பிரன்ட் போன்ற அமைப்புக்கள் செயல்படுகின்றமை. (இது தொடர்பாக நான் உணர்வு பத்திரிக்ககையில் எழுதிய ஆக்கத்தைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள் )

இப்படி தமிழகத்தை சேர்ந்த பல அமைப்புக்கள் தங்கள் சுய நலத்திற்காக இஸ்லாத்தை தூக்கியெறிந்துவிட்டதை நாம் கண்முன்னால் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

ஒருவர் அல்லது ஒரு அமைப்பு முன்வைக்கும் கருத்து அல்லது கொள்கை தவறானது என்று உறுதியாகத் தெரிந்தால்,அதை மக்கள் சரிகண்டு அதன் வழியில் சென்று வழிகேட்டில் வீழ்ந்து விடாமல் அவர்களை தடுப்பதாக இருந்தால், அக்கொள்கையின் விபரீதத்தை மக்களுக்கு விளங்கப் படுத்தும் விதமாய் விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்க முடியும்?

இதைக்கூட நாமாகக் கற்பனை செய்து கூற வில்லை. திருக்குர்ஆனும் நபி மொழிகளும் மக்களை ஏமாற்ற முனையும் பேர்வழிகளை விமர்சிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்குமாறு எம்மை பணிக்கின்றது.

இதற்கான சான்றுகள் இதோ :

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கல்லெறிந்து கொல்லுதல் பற்றி தவ்ராதில் கூறப்பட்டுள்ளது என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் ‘அவர்களுக்கு கசையடி கொடுத்து இழிவு படுத்துவோம்’ என்று விடையளித்தனர். அப்போது, அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் யூதர்களை நோக்கி ‘நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள். தவ்ராதில் கல்லெறிந்து கொல்லுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது’ என்றார். உடனே அவர்கள் தவ்ராதை எடுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்வது சம்பந்தமான வசனத்தைக் கையால் மறைத்துக் கொண்டு, அதற்கு முன் பின் வசனங்களை படித்தார். ‘கையை எடுப்பீராக!’ என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறியதும் அங்கே அந்த வசனம் காணப்பட்டது என்ற செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

அவர்கள் புண்படுவார்களே என்று எண்ணி அவர்களின் தவறை சுட்டிக்காட்ட நபித்தோழர் தயங்க வில்லை. நபியவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.‘தங்கள் கைகளால் புத்தகத்தை எழுதிக் கொண்டு, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறியோருக்குக் கேடு உண்டாகட்டும்’ (2:79) என்று இறைவன் கூறுகிறான். அவர்கள் வேதத்தில் சுயமாகச் சேர்த்துக் கொண்டவைகளை இங்கே இறைவன் விமர்சனம் செய்கிறான்.

இன்ஜீல் என்பது ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் மக்களுக்குப் போதித்ததாகும் (5:110). ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்றை இன்ஜீல் என்று கூறி, மக்களை ஏமாற்றும் போக்கை விமர்சனம் செய்வது தவறு என்று யாராவது கூறுவார்களா?

ஒட்டகம் உண்பதைத் தங்களுக்கு இறைவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பொய் கூறிய போது, தவ்ராத்தைக் கொண்டு வந்து, அதை நிரூபியுங்கள் (3:93) என்று நபியவர்களை சவால் விடச் செய்தது பிழையா?

வேதத்திற்கு தவறான விளக்கம் கூறி ஏமாற்றி வந்ததையும் இறைவன் கண்டிக்கத்தவறவில்லை (3:78).

நபியவர்கள் பற்றிய முன்னறிவிப்பைத் திட்டமிட்டு அவர்கள் மறைத்து வந்ததையும் இறைவன் அடையாளம் காட்டாமல் விடவில்லை (2:146).

வேதத்தில் நீங்கள் மறைத்து வைத்த அனேக வசனங்களை அம்பலப்படுத்தவே நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூறி, அவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்திற்காகவே நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதாக இறைவன் பிரகடனம் செய்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள், யூத மார்க்கத்தவராக இருந்தார்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போது, இப்றாஹீம் காலத்தில் தவ்றாத் அருளப்படவில்லையே! அவருக்குப் பின்னர்தானே தவ்ராத் அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூறி, அவர்களை இறைவன் வாயடைக்கச் செய்தான்.

மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஒருவர் தவறு விடும் போது அல்லது சத்தியத்தை மறைக்கும் போது அதனை வன்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாகும்.

பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?

ஒரு தவறை சுட்டிக் காட்டும் போது, தவறிழைத்தவனுக்கு தான் செய்வது தவறு தான் என்று விளங்கும் விதத்திலும், இது எனக்குத் தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும், உள்ளத்தை உழுக்கும் விதத்திலும் மழுப்பலோ, மறைத்தலோ, சுற்றி வளைப்போ இன்றி சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இது எப்போது சாத்தியம்?
இயக்கத்தின் பெயரைக் குறிப்பிட்டு தவரை சுட்டிக் காட்டி விமர்சிக்கும் போதுதான் இது சாத்தியமாகும். இதையும் கூட நாமாகக் கூற வில்லை. யூத கிறிஸ்தவர்கள் (2:120), இஸ்ரவேலர்கள் (2:79), மஜூஸிகள் (22:17),முனாபிக்குகள் (2:8, 4:108), தவறிழைக்கும் ஒவ்வொரு கணமும் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டார்கள்.

தவறுகளை விமர்சிக்கும் போது அதைச் சொன்னவரையும் அதைப்பின்பற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சிக்க வேண்டும். இதுவும் அல் குர்ஆனின் வழி முறை தான். ஆது கூட்டம் (7:71), ஸமூது கூட்டம் (27:47), யானைப்படை (105:1), யஃஜூஜ் மஃஜூஜ் (18:94), அபூ லஹப் (111:1-3), இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர் (6:74), ஃபிர்அவ்ன் (2:49), சாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகியோர் அல்லாஹ்வால் விமர்சிக்கப்பட்டதும் இந்த அடிப்படையில் தான்.

இது போல், இன்னும் அனேக இடங்களில் வேதமுடையவர்களையும் பல தெய்வக் கொள்கையுடையோரையும் அல்லாஹ் விமர்சனம் செய்துள்ளான். ‘வேத முடையோரே!’ என்று பல இடங்களில் அவர்களை அழைத்து, அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் உள்ளான். பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறுதான் என்றால் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின் குறைகளை அக்குவேர் ஆணிவேராக விமர்சிக்கும் ‘இல்முல் ஜரஹ் வத்தஃதீல்’ எனும் கலையை இவர்கள் பண்பாடற்ற கலை என்று கூறத்துணிவார்களா?

ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்தோழர் ஸகாத் பணத்துடன் இணைத்து வழங்கப்பட்ட அன்பளிப்பை ‘இது எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என்று கூறியதைக் கேட்ட நபிகளார், முகம் சிவந்தவராய் மிம்பரில் ஏறி, அனைத்து தோழர்களையும் ஒன்று கூட்டி ‘இவர் தனது தாயின் வீட்டில் இருந்திருந்தால் இது இவருக்குக் கிடைத்திருக்குமா?’ என்று கடிந்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் ஒரு நபித்தோழரை நபிகளார் விமர்சித்ததையும் பண்பாடற்ற விமர்சனம் என்று குறை காணப்போகிறார்களா?

காரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு முரணா? நாம் எமது பேச்சுகளிலும், எழுத்துகளிலும் தவறிழைப்பவரை விமர்சிப்பதில் உள்ள கடுமையை விட, காரத்தை விட அல்லாஹ் தவறிழைப்பவர்களை விமர்சிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் மிகுந்த கடுமையும் காரமும் மிக்கதாக உள்ளது.

அல் குர்ஆனின் வசனங்களை ஏற்க மறுப்பவனை, அதன் போதனைகளை மறுப்பவனை விமர்சிக்கும் போது “அவனுக்குறிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது.” (7:176) ‘நாய்’ என்று விமர்சிக்கிறான்.

இஸ்லாத்தை கற்பதற்கு முன்வராத அறிவிலிகளை விமர்சிக்கும் போது “அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.” (7:179)

‘கால் நடைகள்’ என்கிறான்.வேதத்தைக் கற்று அதன் படி ஒழுகாதவர்களை விமர்சிக்கும் போது“தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.” (62:5) ‘கழுதை’ என்று பொறிந்து தள்ளுகிறான்

.அல் குர்ஆனும், சுன்னாவும் ஒன்றை சொல்லும் போது அதனை புறக்கணித்து, அதற்கு மாற்றமாக நடப்பவர்களை விமர்சிக்கும் போது “அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.” (74:50-51) ‘கழுதை’ என்று காட்டமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம். உணர்வு பத்திரிக்கையின் விமர்சனம் தவறு என்றால், வார்த்தை கடுமையானது என்றால், இவ்வாறு விமர்சிப்பது பண்பாடற்ற வழிமுறை என்றால், இவர்கள் முதலில் இவ்விமர்சனத்தைச் செய்த அல்லாஹ்வையும், அதனை அப்படியே ஏற்று, அவ்விமர்சன வார்த்தைகளை அந்தத் தவறுகளை செய்த மக்களின் முகத்துக்கு முன் அப்படியே ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்தையும் நோக்கித் தான் தங்கள் சுட்டு விரலை முதலில் நீட்ட வேண்டும்.

உங்கள் வாதப்படி அல்லாஹ் ‘நாய்’ என்றும், ‘கழுதை’ என்றும்,‘மிருகம்’ என்றும் நாகரீகம் இல்லாமல்: பண்பாடு தெரியாமல்: நளினம் தெரியாமல் விமர்சித்திருக்கிறான் என்று கூறவேண்டி வரும். ஒருவர் குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக நடக்கும் போது அவரை நாம் விமர்சித்தால், அதனால் அவர்கள் ‘புண்படுவார்கள்’ என்பதெல்லாம் அறிவுடையோர் கூறும் பதிலாக முடியாது.

எதைப் பிரச்சாரம் செய்தாலும் பாதிக்கப்படுவோர் புண்படவே செய்வார்கள். இவர்கள் சொல்வதை ஏற்றால் மத்ஹபுகளை, கல்லறை வணக்கத்தை, தரீக்காக்களை, பித்அத்துவாதிகளை மற்றும் எதையுமே விமர்சிக்க முடியாமல் போய்விடும். அத்தோடு, அல்லாஹ்வும் அவன் தூதரும் நளினம் தெரியாமல், மென்மை புரியாமல் அநாகரிகமாக விமர்சித்து விட்டார்கள் என்ற தப்பான கருத்தும் வந்து விடும். நஊது பில்லாஹ்.

ஆக அன்பின் சகோதரரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உணர்வுப் பத்திரிக்கை மற்ற அமைப்புக்களைப் பற்றி விமர்சிக்கும் போது பொய்யான தகவல்களை வெளியிட்டால் அதனை சுட்டிக்காட்டலாம், தட்டிக் கேட்க்களாம் ஆனால் இறைவனின் அருளால் உணர்வு செய்யும் சேவையினால் தமிழகத்தின் பல இயக்கங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை நினைத்து நாம் சந்தோஷப் பட்டு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 09)


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 09)
உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்.

உஸ்மான் (ரலி) அவர்கள் உறவினர்களைப் பதவியிலமர்த்தினார் என்ற குற்றச்சாட்டிற்கு உதாரணமாக, பெரிய பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் பற்றியும், அவர்களது தகுதிகளைப் பற்றியும் அதுவே மக்களிடம் பெரும் அதிருப்தியைத் தோற்றுவிக்கக் காரணமானது என்பதையும் மேலே ஒரு சில உதாரணங்களின் மூலம் பார்த்தோம்.

பொதுவாக அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் குணநலன்களுக்கும், உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்களுக்கும் அடிப்படையிலேயே பெரிய வித்தியாசம் உண்டு. உஸ்மான் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை மிகவும் இரக்க குணம், வெட்க குணம், எளிதில் யாரையும் நம்பி விடக் கூடிய சுபாவமும் உடையவர்கள்.

அவர்களின் இத்தகைய வெள்ளை உள்ளம் தான் உறவினர்கள் விஷயத்திலும் அக்கறைக் காட்ட வைத்தது. அதுவும் அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களை தகுதியற்றவர்கள் என்று தெரிந்து பதவியில் அமர்த்தவில்லை. அவர்கள் சிறப்பானவர்கள், தகுதியானவர்கள் என்று நினைத்தே அமர்த்தினார்கள். தகுதியற்றவர்கள் என்று தெரிந்த பின் அவர்களைப் பதவியிலிருந்து நீக்கவும் செய்தார்கள், தண்டிக்கவும் செய்தார்கள் என்பதை "வலீத் பின் உக்பா'வின் சம்பவம் எடுத்துரைக்கிறது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களில் பெரும்பாலோர் மக்கா வெற்றி வரை இஸ்லாத்தை ஏற்காமல், முஸ்லிம்களை எதிர்த்து விட்டு, மக்கா வெற்றியின் போது பெருமானார் (ஸல்) அவர்களால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினருமே (உதாரணம் : முஆவியா (ரலி), வலீத் பின் உக்பா, மர்வான் பின் ஹகம்) என்பதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். மூத்த நபித்தோழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாததை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

எகிப்திலிருந்து ரகசியப் படை கிளம்புதல்.

எகிப்தின் ஆளுநர் பதவியிலிருந்து அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களை நீக்கியதை ஏற்றுக் கொள்ளாத சிலர், உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஒரு கூட்டத்தைத் திரட்டுகிறார்கள். ஆட்சிக்கு எதிராக திட்டம் வகுத்து ரகசியமாக செயல்பட "பைஅத்' (உறுதிமொழி) செய்த 600 பேர் தயாராகிறார்கள்.

இந்த ரகசிய பைஅத் செய்த 600 பேர் கொண்ட கூட்டம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய - புனித நகரமான - சண்டையிடுவதற்குத் தடை செய்யப்பட்ட இடமான - மதீனாவுக்குள் நுழைந்து தலைநகரையே கைப்பற்றுவதற்கான திட்டத்தில் - அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டது.

600 பேரும் மதீனாவுக்குள் ஒட்டுமொத்தமாக நுழைவது கடினம். அது இயலாத காரியம் என்றெண்ணி உம்ராவுக்குச் செல்வதாகக் கூறிக் கொண்டு இஹ்ராம் கட்டிய நிலையில் ஹிஜ்ரி 35-ம் ஆண்டு ரஜப் மாதத்தில் மதீனாவுக்குச் செல்கிறது.

உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிரான இந்த அதிரடி ரகசிய நடவடிக்கைகளை தனது உளவாளிகள் மூலம் அறிந்த எகிப்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற அப்துல்லாஹ் பின் ஸஃத் அவர்கள், உடனடியாக உஸ்மான் (ரலி) அவர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். தகவலைப் பெற்ற உஸ்மான் (ரலி) அவர்கள், தலைநகரைக் கைப்பற்ற எகிப்திலிருந்து ரகசியப் படை வரும் தகவலைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, அதை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தும் பொறுப்பை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்ற அலீ (ரலி) அவர்கள், தம்முடன் ஒரு சிறு கூட்டத்தை அழைத்துக் கொண்டு மதீனாவின் நுழைவாயிலுக்குச் சென்று, எகிப்திலிருந்து வந்த ரகசியப் படையினருடன் சமரச முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிராக அவர்கள் படை திரட்டி வந்ததற்கான காரணங்களையும், அவர்களின் கோரிக்கைகளையும் அலீ (ரலி) அவர்களிடம் எடுத்துரைக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள்,  அவர்களின் வாதங்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, ஒவ்வொன்றுக்கும் உஸ்மான் (ரலி) அவர்கள் பக்கம் நியாயம் உள்ளது போன்றே பதிலளித்து, அவர்களை ஓரளவு திருப்திப்படுத்தி, திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

உஸ்மான் (ரலி) மீதான குற்றச்சாட்டுக்கு அலீ (ரலி) விளக்கம்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்புக்கும், அவர்களுக்கெதிரான புரட்சிக்கும் மிகமுக்கியக் காரணமான உறவினர்களுக்கு சலுகை அளித்தார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்த வரலாற்று ஆதாரங்களை மேலே பார்த்தோம்.

அவர்கள் தங்களின் புரட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மேலும் பல குற்றச்சாட்டுக்களையும் வைத்தார்கள். எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த புரட்சியாளர்ளை அலீ (ரலி) அவர்கள் மதீனா எல்லையில் தடுத்து நிறுத்திய போது, நாம் மேலே குறிப்பிட்டபடி மூத்த ஸஹாபாக்களையெல்லாம் புறக்கணித்து விட்டு இளைஞர்களையே உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்துகிறார் என்ற பிரதான குற்றச்சாட்டுடன் மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அலீ (ரலி) அவர்களிடம் முன்வைத்தார்கள். அவற்றுக்கு அலீ (ரலி) அவர்கள் என்ன பதில் சொல்லி அவர்களைத் திருப்திபடுத்தினார்கள் என்பதை பார்ப்போம்.

1. மூத்த ஸஹாபாக்களை விட்டு விட்டு இளைஞர்களுக்குப் பதவி.

உஸ்மான் (ரலி) அவர்கள் இளைஞர்களுக்குப் பதவியளித்தார்கள் என்பதை குற்றமாகக் கருத முடியாது. நபி (ஸல் அவர்களும் கூட மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற இளைஞர்களுக்குத் தகுதி அடிப்படையில் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறி அதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார்கள். அவை யாவன :

• அத்தாப் பின் உஸைது என்பவர் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவியவர், அவருக்கு 20 வயதிலேயே பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் நிர்வாகியாக பதவியளித்தார்கள்.

• உஸாமா பின் ஜைத் அவர்களை ஒரு போருக்குத் தளபதியாக பெருமானார் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள்.

• தன்னை நபி என்று சொல்லிக் கொண்டு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த முஸைலமா என்பவனுக்கு எதிராக போருக்குப் புறப்பட்ட படையின் தளபதியாக இளைஞர் உஸாமா அவர்களை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மீண்டும் அனுப்பினார்கள் என்று விளக்கமளித்தார்கள்.

2. கோத்திரத்தாருக்கு முன்னுரிமை.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து குடியேறி அங்கு ஆட்சி அமைத்த பிறகு எல்லாத் துறைகளிலும் மதீனா வாசிகளான அன்சாரிகளை விட மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளைப் புறக்கணித்து விட்டார்கள். மக்கா வாசிகள் என்பதற்காக முன்னுரிமையளித்து விட்டார்கள் என்று குற்றமாக எடுத்துக் கொள்ள முடியுமா? எனவே இது ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக படை திரட்டக் கூடிய அளவுக்கு பெரிய குற்றமாகாது என பதிலளித்தார்கள்.

3. குர்ஆனை எரித்தார்.

அடுத்து அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உஸ்மான் (ரலி) குர்ஆனை எரித்து விட்டார். எனவே குர்ஆனை எரித்தவர்களுக்கு எதிராக போர் செய்யலாம் என்ற வாதத்தை வைத்தார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு ஏன் உருவானது?

நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப 23 ஆண்டுகள் இறக்கப்பட்டது. அவ்வப்போது அவர்களுக்கு அருளப்படும் வசனங்களை எழுதிக் கொள்வதற்காக "காத்திபுல் வஹீ' - வஹீயை எழுதுபவர்கள் என்று சில நபித்தோழர்கள் இருந்தார்கள்.

திருக்குர்ஆனை எழுதி வைத்திருந்த நபித்தோழர்கள் அனைவரிடத்திலும், முழுக்குர்ஆனும் இருந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் பல பகுதிகளுக்கும் சென்ற அந்த நபித்தோழர்கள் தங்களிடமிருந்த வசனங்களைக் கொண்டு மட்டுமே மக்களிடம் போதனை செய்து வந்தார்கள். இந்த நிலையை மாற்றுவதற்காக தமது ஆட்சியின் போது எல்லா நபித்தோழர்களிடமும் இருந்த கையெழுத்துப் பிரதியை சேகரித்து, முழுக் குர்ஆனையும் தொகுக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். இதனால் தான் அவர்களுக்கு "ஜாமிஉல் குர்ஆன்' (குர்ஆனை ஒன்று சேர்த்தவர்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

அவ்வாறு முழுக் குர்ஆனையும் தொகுத்த பின் துண்டு துண்டாக இருந்த வசனங்களை - அவை மட்டும் தான் குர்ஆன் என்ற நிலை பிற்காலத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக எரித்து விட்டார்கள். (உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த குர்ஆனின் கையெழுத்துப் பிரதி இன்று உலகிலேயே இரண்டு தான் உள்ளது. அவற்றில் ஒன்று ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்ட் மியூசியத்திலும், மற்றொன்று துருக்கியில் இஸ்தான்புல் மியூசியத்திலும் உள்ளது)

அவ்வாறு நல்ல நோக்கத்திற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் அத்தகைய குர்ஆன் பிரதிகளை எரித்ததை, காரிஜியாக்களும், முனாபிக்குகளும் பெரிதுபடுத்தி, உஸ்மான் குர்ஆனை எரித்து விட்டார். எனவே அவருக்கு எதிராக ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற கருத்தை முஸ்லிம்களிடம் பரப்பி விட்டார்கள். இந்த விளக்கத்தை அலீ (ரலி) அவர்கள் சொன்ன பிறகு அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

4. ஹஜ்ஜின் போது தொழுகையில் மாறு செய்தார்.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது தொழுகையில் கஸர் (குறைத்துத் தொழுதல்) செய்ய வேண்டும் என்றே வழிகாட்டி இருக்கிறார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் கஸர் செய்யாமல் தொழுதார் என்பது அவர்கள் அடுத்து வைத்த குற்றச்சாட்டு.

இதற்குப் பதிலளித்த அலீ (ரலி) அவர்கள், மக்காவை அவர் தனது சொந்த ஊராகக் கருதியதால் சொந்த ஊரில் கஸர் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தால் அவர் அப்படி தொழுதார் என்று விளக்கமளித்தார்கள்.

5. விளை நிலங்களை அரசுடமை ஆக்கினார்.

(அக்காலத்தில் உரிமை கொண்டாடப்படாத விளைநிலங்கள் இருந்தன. அவற்றை யாரெல்லாம் தங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்கிறார்களோ அது அவர்களுக்குச் சொந்தம் என்ற நிலை இருந்து வந்தது. அதை மாற்றி அத்தகைய) நிலங்கள் யாவும் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் சட்டமியற்றினார்கள். இது மக்கள் விரோதச் செயல் என்று குற்றச்சாட்டை வைத்தார்கள்.

இதற்குப் பதில் அளித்த அலீ (ரலி) அவர்கள், உரிமை கோரப்படாத விளைநிலங்களை அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கியதற்குக் காரணம், ஜகாத் ஒட்டகங்கள் அரசாங்கத்திடம் உள்ளன. அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவற்றின் மேய்ச்சலுக்காக நிலங்கள் தேவைப்படுகிறது. எனவே அதைக் கருத்தில் கொண்டு தான் உஸ்மான் (ரலி) இந்தச் சட்டத்தை இயற்றினார். இது ஒரு குற்றமாகாது. மேலும் ஏற்கனவே உமர் (ரலி) அவர்களும் இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று விளக்கமளித்தார்கள்.

ஆட்சித் தலைவருக்கு அலீ (ரலி)யின் அறிவுரை.

அதன்பிறகு அலீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் "உங்களின் ஆட்சி முறையில் மக்களின் அதிருப்தி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நீங்கள் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் நடத்திய ஆட்சி முறையைப் பின்பற்றிச் செல்லுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது'' என்று அறிவுரை கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு ஜும்ஆ குத்பாவின் போது, தனது ஆட்சியில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளுக்காக மனந்திருந்தி மக்களிடம் அழுது மன்னிப்புக் கேட்டார்கள்.

தான் இது நாள் வரை ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து சற்று விலகி இருந்து விட்டதாகவும், இனி அது போல இருக்க மாட்டேன், எந்த நேரமும் மக்கள் என்னை வந்து சந்தித்து தங்கள் குறைகளை முறையிடலாம். இனி சிறந்த முறையில் ஆட்சி செய்வேன் என்று உத்தரவாதமளித்தார்கள். அந்த குத்பாவின் போது, உஸ்மான் (ரலி) அவர்கள் தங்களின் நிலையை விளக்கி அழுததைப் பார்த்த மக்களும் அழுதார்கள்.

அதன் பிறகு சிலகாலம் மக்கள் ஜனாதிபதியை எந்நேரமும் சந்திக்கக் கூடிய, குறை நிறைகளைப் பற்றி பேசக் கூடிய, ஆலோசனைகள் வழங்கக்கூடிய நிலை சிறிது காலம் தொடர்ந்தது. 

மர்வானின் அடாவடி.

உஸ்மான் (ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பின் மீது அதிக கவனம் செலுத்தி, குறைகளைக் களைந்து, நடவடிக்கை எடுத்து வருவதை ஜீரணிக்க முடியாத மர்வான் பின் ஹகம் (தலைமைச் செயலர்), ஜனாதிபதிக்குத் தெரியாமலேயே பல காரியங்களைச் செய்யத் துவங்கினார். அவரது செயல்களுக்கான பழியை உஸ்மான் (ரலி) அவர்களே சுமக்க வேண்டியதாயிற்று. ஏனைய சஹபாக்களுக்கும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் இடையேயான தொடர்புகளைத் துண்டிக்க முற்பட்டார். தன்னை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினார். 

மஜ்லிஸ் ஷுராவில் சஹாபாக்களைக் கண்டித்துப் பேசவும் ஆரம்பித்தார். இதைப் பெரும்பாலான சஹாபாக்கள் விரும்பவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்களின் துணைவியார் நாயிலா (ரலி) அவர்களுக்குக் கூட மர்வானின் செயல் பிடிக்கவில்லை. ஒரு முறை தனது கணவரிடம், "நீங்கள் மர்வானின் பேச்சைக் கேட்டு நடந்தால் உங்களைக் கொலை செய்யாமல் விடமாட்டார். அவருக்கு அல்லாஹ்வின் மீது அச்சமோ, அன்போ, மதிப்போ இல்லை'' என்று நேரடியாகவே எச்சரிக்கவும் செய்தார்.

மக்களெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்களை மர்வான் தன் கையில் போட்டுக் கொண்டு ஆட்டிப் படைக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மீண்டும் அதிருப்தியும், குழப்பமும் தலைதூக்குகிறது. அலீ (ரலி) அவர்களும் மீண்டும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கண்டிக்கிறார்கள்.

ஜிஹாத் (கிதால்) பிரகடனம்.

இந்நிலையில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் - ஜிஹாத் என்ற பெயரில் செய்யப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால், "உஸ்மானை எதிர்ப்பது தான் மிகப்பெரிய ஜிஹாத் (அக்பருல் ஜிஹாத்)'' என்ற கருத்து மக்களிடம் உருவாக்கப்படுகிறது.

முன்னர் எகிப்திலிருந்து மட்டுமே ஒரு ரகசியக் கூட்டம் மதீனாவைக் கைப்பற்ற வந்த நிலை மாறி, இப்போது பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் அடங்கிய கூட்டம் ஆயுதங்களுடன் மதீனாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றக் கிளம்பி விட்டது.

அக்கூட்டத்தினரில் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் அலீ (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு எகிப்திலிருந்து வந்த கூட்டமும், ஜுபைர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் கூஃபாவிலிருந்து வந்த கூட்டமும், தல்ஹா (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஸராவிலிருந்து வந்த கூட்டமும் மதீனாவை முற்றுகையிட்டன. ஆனால் அம்மூவருமே இவர்களின் செயலை அங்கீகரிக்கவுமில்லை. ஆதரவளிக்கவுமில்லை.

மேலும் "ஜிஹாத்' என்று சொல்லிக் கொண்டு படைதிரட்டி வந்தவர்கள் யாரும் தத்தமது பகுதி மக்களின் பிரதிநிதிகளுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் அங்கீகாரத்துடன் வந்தவர்களுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்கு எதிராக, புனித நகருக்குள் புகுந்து சண்டையிடுவதையும், ஹராமாக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆயுதமேந்தி வருவதையும், முஸ்லிம்களுக்குள் அதுவும் பெருமானாரின் தோழர்களுக்குள் மோதிக் கொள்ளும் போக்கையும் பெரும்பாலான நபித்தோழர்கள் விரும்பவில்லை. இந்தப் போக்கைக் கண்டிக்கவே செய்தார்கள். ஏராளமான நபித்தோழர்கள் தடுத்தார்கள். எதிர்பாராத விதமாக கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதங்களுடன் புகுந்ததாலும், நிராயுதபாணிகளாக அவர்கள் இருந்ததாலும், புனித மண்ணில் போரிடக் கூடாது என்ற காரணத்தாலும் அவர்கள் எதிர் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் போனது. இத்தகைய பலவீனம் எதிரிகளுக்குச் சாதகமாக இருந்ததால் இறுதியில் கிளர்ச்சியானர்கள் உஸ்மான் (ரலி)யின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள், "நீங்கள் சொன்னவுடன் பதவி விலக முடியாது. அதேசமயம் உங்களின் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார்கள். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

உஸ்மான் (ரலி) பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த போது நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள் இது பற்றிக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "ஒரு சிலர் ஒன்று கூடி பதவி விலகச் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் பதவி விலகத் தேவையில்லை. அத்தகைய ஒரு நிலையை முஸ்லிம்களிடத்தில் நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள். அதற்கான வாசலைத் திறந்து விட்டு விடாதீர்கள்'' என்று கூறினார்கள். (தபகாத்து இப்னு சஅத்)

உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இந்நிலையில் முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விடுவார்களோ என்று சில சஹாபாக்கள் அஞ்சினார்கள்.  எனவே அவர்களைப் பாதுகாக்க உஸ்மான் (ரலி) அவர்கள் சிறை வைக்கப்பட்ட வீட்டைச் சுற்றி மதீனாவிலிருந்த சஹாபாக்களில் ஒரு கூட்டம் காவல் காத்து வந்தது. அவ்வாறு பாதுகாப்புக்காக நின்றவர்களில் அலீ (ரலி) அவர்களின் உத்தரவின் பேரில் அவர்களின் மகனார் ஹஸன் (ரலி) அவர்களும் ஒருவர். அந்தப் பாதுகாப்பு வளையத்தைச் சுற்றி உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக வந்த ஆயுதந்தாங்கிய கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாத அளவுக்கு காவல் நிற்கிறது.

இந்நிலையிலும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆ குத்பா நிகழ்த்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் நிகழ்த்திய ஜும்ஆ குத்பாக்களில் ஒரு முறை மிம்பரிலிருந்து இழுத்துக் கீழே வீசப்பட்டு உஸ்மான் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். 

உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போது, முற்றுகையிட்டிருந்த கூட்டத்தினரிடம், "ஒருசில குற்றங்களின் அடிப்படையில் ஒருவரைக் கொலை செய்ய மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு எந்தக் குற்றமும் செய்யாத என்னை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள்'' என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டார்கள். தான் செய்த நல்லறங்களையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தார்கள்.

மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது, "ஒரு குடிநீர் கிணறு உள்ளது. அதை யாராவது விலை கொடுத்து வாங்கி வக்ஃப் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லையா? நபியின் பள்ளிவாசலை விஸ்தீரணம் செய்தேனே! என்று ஒவ்வொன்றாகச் சொல்லி தன்னை விடுவிக்கும்படி கோரினார்கள். ஆனாலும் அக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை.

இதனிடையே உஸ்மான் (ரலி) அவர்களை வீட்டுக்காவலின் போது சந்தித்த ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நிலைமை மோசமடைவதைக் கண்டு அன்சாரிகள் அனைவரும் தங்களுக்காக அணிதிரளத் தயாராக உள்ளதாக அறிவித்தார். அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) ஆகியோரும் இதையே கூறினார்கள். ஆனாலும் உஸ்மான் (ரலி) அவர்கள் நான் அவர்களுடன் இப்புனித மண்ணில் போரிடத் தயாராக இல்லை என்று கூறிவிட்டார்கள்.

ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது என்பது ஒருபுறமிருக்க, ஒரு இஸ்லாமிய ஆட்சியின் தலைவர் என்ற முறையில் ஆட்சிக்கெதிராக அணிதிரண்டு வந்தவர்களை எதிர்த்து ஆட்சியாளர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஒரு கட்டத்தில் தனக்கு பாதுகாப்பாக வீட்டைச் சுற்றி இருந்த சஹபாக்களைக் கூட நீங்கள் எனக்காக கஷ்டப்பட வேண்டாம், போய் விடுங்கள் என்று கூறினார்கள்.

அச்சமயத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தார்கள். உச்சக்கட்டமாக உம்முல் முஃமினீன் என்றழைக்கப்படும் பெருமானார் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (முஆவியா (ரலி)யின் சகோதரி) கூட அவமானப்படுத்தப்பட்டார்கள். "இழிவான இச்சூறாவளியில் சிக்கி நானும் என்னை அவமானப்படுத்திக் கொள்ளவா?'' என்று கேட்டபடி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மக்காவுக்குச் சென்று விட்டார்கள்.

ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக உஸ்மான் (ரலி) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இறுதியாக ஒருநாள் வீட்டிற்குள் வைத்தே உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 35ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள். (இன்னாலில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜிஊன்). அவர்களின் வீடும் சூறையாடப்பட்டது. சொத்துக்களும் அபகரிக்கப் பட்டன.

உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்கள் முனாஃபிக்குகள் என்று சொல்லப்பட்டாலும் அச்செயலில் ஈடுபட்டவர்களில் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பது தெளிவாகிறது.

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மகனார் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி)  உஸ்மான் (ரலி) அவர்களின் தாடியைப் பிடித்து இழுத்த போது, உஸ்மான் (ரலி) அவர்கள் மிகவும் மனமுடைந்து போய் அவரிடம், "முஹம்மதே! உனது தந்தை அபூபக்கர் கூட எனது தாடியில் கை வைத்தது கிடையாதே'' என்று அழுதிருக்கிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகத் திரண்டவர்கள் - அவர்களைக் கொல்லுமளவுக்குச் சென்றவர்கள் அத்தனை பேரும் இறை நிராகரிப்பாளர் (காஃபிர்)கள் அல்ல. ஆனாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமும் ஏற்பட்ட குறையின் காரணமாகவே அவர்கள் தவறான முடிவுக்குச் சென்றார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் சிறு சிறு தவறுகள் ஏற்பட்டாலும் அவை திருத்திக் கொள்ளக் கூடியவை தான். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட இத்தகைய சாதாரண குற்றச்சாட்டுகளைத் தவிர அவர்களது ஆட்சி முறை போற்றத்தக்க வகையில் தான் இருந்தது என்பதை யாரும் மறுக்கவியலாது. அவர்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள் பரிகாரம் காணக் கூடியவையாகத் தான் இருந்தனவே தவிர பழிதீர்க்கக் கூடியதாக இல்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

Tuesday, 13 September 2011

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தினரைப் பற்றி உங்கள் கருத்து என்ன?




பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தினரைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கொள்கை இல்லாக் கூட்டம்

பொதுவாக எந்த ஒரு இயக்கமானாலும் அவர்களுக்கென்று ஒரு கொள்கை கோட்பாடு இலட்சியம் இருக்க வேண்டும். ஒவ்வொரு இயக்கத்துக்கும் கொள்கை என்பது உயிர் மூச்சைப் போன்று அவசியமானதாகும். கொள்கை இல்லாத இயக்கம் செத்த உடலைப் போன்றது. 

அந்தக் கொள்கை சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருந்தாலும் கொள்கை என ஒன்று இருக்க வேண்டும்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தன்னை ஒரு இயக்கம் என்று கூறி வருகின்றது. ஆனால் இவர்களுக்கென்று நிலையான எந்தக் கொள்கையும் கிடையாது. கொள்கையற்ற கூட்டத்துக்கு மிகப் பொருத்தமான உதாரணமாக இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஃபாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்பது சமீபத்தில் இவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பு. இவர்கள் பல்வேறு பெயர்களில் பல இயக்கங்களாக இயங்கி வருகின்றனர். 

இவர்கள் மற்றவர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தான் முதலில் இயக்கத்தைத் துவங்கினார்கள். ஜனநாயகம் என்பது ஷிர்க் (இணைவைப்பு) கொடிபிடிப்பதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் ஓட்டுப் போடுவதும் கூடாது. மொத்தத்தில் இந்திய அரசாங்கத்திற்குக் கீழ் வாழ்வது மார்க்கத்திற்கு விரோதமானது என்று பிரச்சாரம் செய்து வந்தனர். இந்தக் கொள்கையை நோக்கி மக்களை அழைத்தனர். 

குஜராத் கலவரம் போன்ற நாட்டில் நடந்த கலவரங்களை எடுத்துக் கூறி மக்களிடையே இனவெறியை ஏற்படுத்த முயற்சித்தனர். தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்கு இந்தக் கலவரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர். 

ஆனால் உண்மையில் இந்தக் கொள்கையில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஜிஹாத் என்று கூறியது ஆள் பிடிப்பதற்குத் தானே தவிர செயல்படுத்துவதற்கு அல்ல என்பதை இவர்கள் தங்கள் நடவடிக்கை மூலம் நிரூபித்து விட்டனர்.

பைஅத் என்ற பெயரில் தாங்கள் என்ன சொன்னாலும் கேட்கக் கூடிய ஏமாளிகள் உருவான பின், தாங்கள் இது வரை கூறி வந்ததை அப்படியே மாற்றி விட்டனர். 
இப்போது ஜனநாயகம் கூடும் என்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கொடி தூக்கக்கூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு கொடிக்கு சல்யூட் அடிக்கின்றார்கள். ஓட்டுப் போடுவது கூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஓட்டுப் பொறுக்க ஆரம்பித்து விட்டனர். 

தனது கொள்கை தவறு என்பதை உணர்ந்து பிறகு கொள்கையை மாற்றும் நிலை ஒரு இயக்கத்துக்கு ஏற்படலாம். சரியான கொள்கைக்காக கொள்கை மாற்றம் செய்வது தவறல்ல. இந்த மாற்றம் அவசியமானது. 

ஆனால் இவ்வாறு தனது கொள்கையை ஒரு இயக்கம் மாற்றும் போது அதை முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தங்களது பழைய நிலைபாடு தவறானது என்று மக்களுக்கு முன்னால் ஒப்புக் கொள்ள வேண்டும். கொள்கை மாற்றத்துக்கான நியாயமான காரணங்களை மக்கள் மன்றத்தில் விவரிக்க வேண்டும். 

ஆனால் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையையே மாற்றிய இவர்கள் இவற்றில் எதையும் செய்யவில்லை. மாறாக கள்ளத் தனமாக கொள்கையை மாற்றிக் கொண்டனர். 

இஸ்லாமிய மார்க்க நெறிகளுக்காக உண்டாக்கப்பட்ட இயக்கங்களும் சமுதாயத்தில் உள்ளன. மார்க்க விஷயத்தில் எந்த தலையீடும் இல்லாமல் அரசியல் நடவடிக்கையில் மட்டும் இறங்கும் இயக்கங்களும் உள்ளன. 

அரசியல் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடும் இயக்கங்கள் மார்க்க விஷயமாக எந்தக் கொள்கைப் பிரச்சாரமும் செய்வதில்லை. பாப்புலர் பிரண்ட் இயக்கம் மார்க்க இயக்கம் அல்ல என்று தெளிவாக அறிவித்துள்ளனர். அப்படியானால் மார்க்க சம்மந்தமான சர்ச்சைகளில் ஒதுங்கி இருக்க வேண்டும். இவர்கள் சரியான மார்க்கத்தை உள்ளது உள்ள படி சொல்லும் தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக கிறுக்குத் தனமான வாதங்களை எடுத்து வைத்து சமூக சீர்திருத்தத்துக்கு வேட்டு வைக்கிறார்கள்.

சுன்னத்தான காரியங்களை மக்களிடம் சொல்லி ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது; ஏனெனில் ஒற்றுமை கடமையாகும். கடமையை பாதிக்கும் வகையில் சுன்னத்தை செய்யக் கூடாது என்ற புது கண்டு பிடிப்பை இவர்கள் கூறி அல்லாஹ்வின் தூதரின் நடைமுறைகளை சாகடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஒற்றுமை கடமை என்று மார்க்க அறிவற்ற மடையர்கள் தான் சொல்ல முடியும்.

அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்ற கலிமாவே ஒற்றுமையைத் தகர்த்து எறியும் வகையில் தான் உள்ளது. செத்துப் போனவர்களை வணங்கக் கூடாது என்று நாம் கூறும் போது அந்த விநாடியே ஒற்றுமை காணாமல் போய் விடும்.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முக்கியமான கடமையாகும். தீமைகளைத் தடுத்தால் அந்த விநாடியே ஒற்றுமை காணாமல் போய்விடும்.

தொழகையை நபியவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் தொழுவது அவசியமில்லை. அவரவர் இஷ்டப்படி குருட்டாம் போக்கில் எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இதைத் தவறு என்று விமர்சனம் செய்யக் கூடாது என்று வாதிடுகின்றனர். 

மக்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி நபிவழியை ஓரங்கட்டுவதற்கு இப்படி கேடுகேட்ட வாதங்களை முன்வைக்க இவர்களின் நாவுகள் கூசுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தை அழிவில் தள்ளுபவர்களே தவிர நன்மை செய்பவர்கள் அல்ல. 

நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல

வீதிவீதியாக இறங்கி பல்வேறு நலப்பணிகள் செய்வதாகக் கூறி மக்களிடம் வசூல் செய்கின்றனர். மக்களிடம் கணக்கில்லாமல் வசூல் செய்யும் இவர்கள் இதற்கான கணக்கு வழக்குகளை மக்களிடம் தெரிவிப்பதில்லை. 

வசூலிக்கப்பட்ட பணத்தை இவர்களில் ஒருவர் கையாடல் செய்தால் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வராமல் மூடி மறைப்பதற்கு இது வழிகோலும். மக்கள் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மக்கள் பணம் தனி நபர்களின் சுயலாபத்திற்காகச் சூரையாடப்படும். எனவே இவர்களைப் போன்று மக்களிடம் வசூலித்துவிட்டு கணக்கு காட்டாதவர்களை மக்கள் நம்பக் கூடாது. 

வசூல் வேட்டையில் இறங்கும் இவர்கள் மார்க்க நெறிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் காசு பணத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். 

நோன்புப் பெருநாளுக்கு முன் ஏழை எளியவர்களின் நலனுக்காக ஃபித்ரா என்ற நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒவ்வொருவரின் மீதும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இந்தத் தர்மம் இரண்டரை கிலோ தானியம் அல்லது அதன் மதிப்புக்கு நிகரான கிரயமாக இருக்க வேண்டும் என இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ளது. 
ஆனால் ஃபித்ராவை நாங்களும் வசூலிக்கிறோம் என்று கூறி களத்தில் இறங்கும் இவர்கள் இஸ்லாம் நிர்ணயித்த அளவைக் கவனத்தில் கொள்ளாமல் கைக்குக் கிடைப்பதை வாங்கிக் கொள்கிறார்கள். ஒருவர் நோன்புப் பெருநாள் தர்மமாக 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் கொடுத்தால் இது ஃபித்ரா கிடையாது என்று அவருக்கு விளக்கிக் கூறி அவர் முறையாக கொடுக்க வேண்டிய தொகையை வாங்க வேண்டும். ஆனால் இவர்கள் அந்த 5 ரூபாயையும் 10 ரூபாயையும் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். இந்த அற்பத்தொகையைக் கொடுத்தவன் தான் ஃபித்ரா என்ற நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றிவிட்டதாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறான். இப்படி காசு பணத்துக்காக மக்களின் மார்க்கத்துடன் விளையாடுகிறார்கள். 

மற்ற வசூல்களில் இருந்து பித்ரா என்பது வேறுபட்ட தர்மமாகும். இது பெருநாள் தினத்தில் ஏழைகள் மகிழ்வோடு தரமான உணவு உண்ண வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக தான் கடமையாக்கப்பட்டது. ஆனால் இவர்கள் பித்ரா என்ற பெயரில் பணத்தை திரட்டுகிறார்களே தவிர ஊர்கள் தோறும் அந்தப் பணத்தை விநியோகிப்பது இல்லை. வசூலித்தது இவ்வளவு ரூபாய்கள். அதை இன்னின்ன ஊர்களில் இவ்வளவு தொகை என விநியோகித்து விட்டோம் என்று இவர்கள் ஒரு நாளும் கணக்கு காட்டியதில்லை. அப்படியானால் அந்தப் பணம் என்னவானது? தலைமைக்கு அனுப்பட்டட்டதா? அல்லது உள்ளூரில் உள்ளவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்பதற்காக அவர்களின் தலைமை அனுமதி கொடுத்து உள்ளூரில் உள்ளவர்களும் வெளிநாட்டில் வசூலிப்பவர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்களா? இதற்கு எந்த பதிலும் அவர்களால் சொல்லப்படவில்லை.

பாலஸ்தீனர்களுக்காக உதவுகிறோம் என்று பள்ளிவாசல் தோறும் நிதி திரட்டினார்கள். ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு வசூலானது? யாருக்கும் தெரியாது. மொத்த வசூல் எவ்வளவு? யாருக்கும் தெரியாது. பாலஸ்தீனத்தில் இதை எப்படி யாரிடம் விநியோகித்தார்கள்? யாருக்கும் தெரியாது.

சிறைவாசிகளுக்கு உதவப் போகிறோம் என்று பீலி என்ற அமைப்பை உருவாக்கி பெரிய அளவில் வசூலித்தார்கள். தங்களின் அன்றைய அதிகாரப்பூர்வ பத்திரிகை மூலம் அப்பீல் போட்டு வந்தார்கள். ஆனால் ஊர்கள் தோறும் இவர்கள் வசூலித்த்து எவ்வளவு? எந்த சிறைவாசிகளிடம் கொடுத்தார்கள்? எந்த விபரமும் யாருக்கும் தெரியாது.

குர்பானித் தோல்களை ஏழை எளியவர்களுக்கு தர்மமாக கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. ஆனால் இவர்கள் குர்பானித் தோல்களைத் திரட்டி அந்தந்த் ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகம் செய்ததில்லை. என்ன செய்கிறார்கள்? தங்கள் இயக்கத்துக்காக வைத்துக் கொள்கிறார்களா? அல்லது அந்தந்த ஊரில் உள்ளவர்கள் போட்டுக் கொள்கிறார்களா? ஒருவருக்கும் தெரியாது.

குர்பானி மட்டுமின்றி ஸகாத்தாக தர்மமாக வழங்கப்படும் பொருட்களையும் குறிப்பிட்ட சிலருக்கே வழங்க வேண்டும் என்று மார்க்கம் விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. மார்க்க சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதைப் பேணக் கூடியவர்கள் தான் மக்களிடம் வசூலிக்கும் பொருட்களை அதற்குரியவர்களிடம் முறையாக ஒப்படைப்பார்கள். இவர்களுக்கு கொள்கையோ கோட்பாடோ சட்டதிட்டங்களோ எதுவும் கிடையாது. இப்படிப்பட்டவர்கள் மக்களிடம் வாங்கும் பொருட்களை அதற்குரிய பணிகளுக்கு எப்படி முறையாகச் செலவிடுவார்கள்? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

இயக்கத் தலைவர் ஒரு ஊருக்கு வந்தால் அவரை வரவேற்பதற்காக போஸ்டர்கள் அடித்து தனிமனித வழிபாட்டை அரங்கேற்றுகின்றனர். 

மேலும் இவர்களின் இயக்க நிர்வாகிககள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்படுவதில்லை. இயக்கத் தொண்டர்களின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு கதம்பமான முறையிலேயே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

நிர்வாகத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் அதைத் தட்டிக்கேட்கும் உரிமையோ அவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்கும் உரிமையோ இயக்க உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. தனி மனிதருடைய சொத்தைப் போன்றே இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது. 

மேலும் பதவிக்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர். தனக்காக மக்களிடம் ஓட்டுக் கேட்கின்றனர். இதனால் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் இல்லை. குறிப்பிட்ட சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு தங்கள் இயக்கத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் இதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

அரசியல் சாக்கடையில் இறங்கிய இவர்கள் மார்க்க நெறிமுறைகளை மீறத் தொடங்கியுள்ளனர். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தங்களது தேர்தல் பிரச்சாரங்களிலும் நிகழ்ச்சிகளிலும் இசையுடன் கூடிய பாடல்களைப் பாடவிடுகின்றனர். பெரும் பெரும் டிரம்ஸ்களைக் கொண்டு வந்து ஒலி எழுப்புகின்றனர். 

அனைத்து தரப்பு மக்களின் ஓட்டைப் பொறுக்குவதற்காக விநாயகர் சதுத்தி கிறிஸ்துமஸ் பொங்கல் போன்ற மாற்று மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து பேனர்கள் வைத்து அவற்றை ஆதரிக்கும் கேவலமான நிலைக்குச் சென்றுள்ளனர். 

கொடி வணக்கம் என்ற இணைவைப்பு

கொடிக்கு சல்யூட் அடிக்கும் மாற்று மதக் கலாச்சாரத்தை இவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் புதிதாகக் கொண்டு வந்துள்ளனர். கொடிக்கு சல்யூட் அடிப்பது கொடி வணக்கம் என்று நடைமுறையில் கூறப்படுகின்றது. வணக்கமாகக் கருதப்படும் இந்தக் காரியத்தை ஒரு முஸ்லிம் எப்படிச் செய்ய முடியும்?

கொடி என்பது சாதாரணத் துணி. அதை மனிதன் தான் தயாரித்தான். தன் இயக்கத்துக்கு அடையாளமாக அதைப் பயன்படுத்தினால் அதில் தவறு ஏதுமில்லை. ஆனால் அதை இவர்கள் மனிதனை விட உயர்ந்த மதிக்கத்தக்க பொருளாகப் பார்க்கின்றார்கள். எனவே தான் அதற்கு சல்யூட் அடிக்கின்றனர். 

கொடியை கொடியுடைய அந்தஸ்தில் வைக்காமல் மனிதனை விட உயர்ந்த நிலையில் வைக்கின்றனர். மனிதர்களை விட சிறப்புப் பெறுவதற்கு அந்தக் கொடியில் அப்படி என்ன இருக்கின்றது? என்று பகுத்தறிவுடன் சிந்திக்கும் எவரும் இந்தக் காரியத்தைச் செய்ய மாட்டார். 

கல்லை கல்லாகப் பார்க்காமல் தன்னை விட மேம்பட்டதாகப் பார்த்த காரணத்தால் தான் சிலை வழிபாடு வந்தது. இணைவைப்பும் மூட நம்பிக்கையும் பெருகுவதற்கு இதுவே காரணம். இஸ்லாம் எதை அழித்து ஒழிப்பதற்காக வந்ததோ அந்த அனாச்சாரங்களை முஸ்லிம் சமூகத்தில் அரங்கேற்றுகிறார்கள். முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

ஜிஹாத் கோஷம்

சரியான இஸ்லாமியக் கொள்கையைக் கூறி இயக்கம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குக் கிடையாது. மாறாக எந்த வழியில் சென்றால் இலகுவாக மக்களை இயக்கத்தில் சேர்க்க முடியுமோ அந்த வழி மார்க்கம் தடைசெய்த வழியாக இருந்தாலும் அறிவார்ந்த வழியாக இல்லாவிட்டாலும் அதில் செல்லத் தயங்க மாட்டார்கள். 

ஒரு இஸ்லாமிய அரசாங்கம் நீதிக்காக நடத்தும் அறப்போருக்கு ஜிஹாத் என்று இஸ்லாம் கூறுகிறது. போர் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்பவர்கள் பின்வாங்காமல் போரில் கலந்து கொண்டு இஸ்லாமிய அரசுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. குர்ஆனும் ஹதீஸ்களும் இதைத் தான் ஜிஹாத் என்று கூறுகின்றது. 

ஆனால் இவர்கள் தங்கள் இயக்கத்தை வளப்பதற்காக ஜிஹாதிற்கு புதுமையான விளக்கத்தைக் கொடுத்து மார்க்கத்துடன் விளையாடுகின்றனர். இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை தற்போது இந்தியாவில் கொண்டுவர வேண்டும். இதற்காக இவர்களுடைய இயக்கத்தில் சேர்வது தான் ஜிஹாத். இந்த ஜிஹாதைத் தான் குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன என்று இறைவனுடைய பயம் இல்லாமல் கூறி வருகின்றனர். 

பொதுவாக போராடுவது எதிர்ப்பது போன்ற குணங்கள் இயற்கையாகவே இளைஞர்களிடம் மிகைத்திருக்கும். இந்தப் பருவம் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதை விட உணர்வுப்பூர்வமாகவே சிந்திக்கத் தூண்டும். இளைஞர்களிடம் உள்ள இந்தப் பலவீனத்தையும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இளைஞர்களிடையே இன வெறியை ஏற்படுத்துகின்றனர். தாங்கள் மட்டுமே வீரமாக மிகப் பெரிய இலட்சியத்திற்காக பாடுவதைப் போன்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த போலித் தோற்றத்தின் மூலம் தங்கள் இயக்கத்தை வளர்க்கலாம் என்று நினைக்கின்றனர். 

இவர்கள் பல வருடங்களாக ஜிஹாத் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுகின்றனர். ஆண்டுகள் பல கடந்துவிட்டது. இவர்கள் எப்போது எங்கே யாருடன் ஜிஹாத் செய்தார்கள்? தாங்கள் செய்த ஜிஹாதுடைய பட்டியலைத் தர வேண்டும் என்று நாம் இவர்களை நோக்கி கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். ஆனால் இதைப் பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை. 

தங்களுடைய திட்டங்கள் லட்சியங்கள் நோக்கங்கள் ஆகியவற்றைப் பகிரங்கமாக இவர்கள் மேடைபோட்டு மக்களுக்கு விவரிக்க தைரியமற்றவர்கள். எனவே இரகசியமாகக் கூடி கூடிப் பேசிக் கொள்வார்கள். ஆனால் இது வரை இந்த இரகசியப் பேச்சின் மூலம் இளைஞர்களை ஏமாத்தியதைத் தவிர இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை. 

நாட்டில் நடந்த குஜராத் போன்ற கலவரங்களைப் பற்றி வாய் கிழியப் பேசியவர்கள் அந்தக் கலவரங்களை அடுத்து இவர்கள் செய்த சாதனைப் பட்டியலை இவர்களால் வெளியிட முடியுமா? இயக்க்தை வளர்ப்பதை மட்டுமே முழு நோக்காகக் கொண்டு பொய்யாகப் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றியது தான் இவர்கள் செய்த சாதனை. 
இஸ்லாம் தீவரவாதச் செயலைத் தான் ஜிஹாத் எனக் குறிப்பிடுகின்றது என ஊடகங்களும் பத்திரிக்கைளும் தவறாகச் சித்தரித்து வருகின்றன. மாற்று மதக் கொள்கையில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஜிஹாத் என்றால் தீவிரவாதச் செயல் என்றே புரிந்து வைத்துள்ளனர். இந்தத் தவறான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இவர்களின் ஜிஹாத் கோஷம் அமைந்துள்ளது. 

ஒரு மனிதன் தொழுகை நோன்பு ஸகாத் போன்ற வணக்கங்களைப் புரிவதும் பாவங்களைப் புரியாமல் ஒழுக்கமாக வாழ்வதும் அவனுக்கும் அவனைப் படைத்த இறைவனுக்கும் இடையே உள்ள பிரச்சனை. எனவே இந்த ஆண்மீக விஷயங்களில் ஒருவர் நான் முறையாக நடப்பேன் என அல்லாஹ்விடம் மட்டுமே உறுதிமொழி அளிக்க முடியும். இதற்கு பைஅத் என்று இஸ்லாம் கூறுகின்றது. 

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற ஒரே காரணத்துக்காக அல்லாஹ்விடம் செய்ய வேண்டிய இந்த உடன்படிக்கையை அவர்களிடம் செய்யலாம் என அல்லாஹ் அனுமதியளிக்கிறான். காரணம் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு உறுதிமொழி கொடுப்பது தன்னிடம் உறுதிமொழி அளிப்பதற்குச் சமமானது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். 

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அல்லாஹ் வழங்கிய இந்த அதிகாரத்தை இந்த இயக்கத்தினர் தங்கள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர். 

ஆண்மீக விஷயங்களில் முறையாக நடக்க வேண்டும் என அப்பாவி இளைகஞர்களிடம் வாக்குறுதி வாங்குகின்றனர். இவ்வாறு வாக்குறுதி வாங்குவதற்கு இவர்கள் என்ன நம்மைப் படைத்த இறைவனா? அல்லது அந்த இறைவனாôல் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களா? 

தங்களிடம் பைஅத் செய்ய வேண்டும் என இவர்கள் கூறுவதற்குக் காரணம் தங்கள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தங்ளை விட்டும் விலகி சென்று விடக் கூடாது என்பதற்காகத் தான். அதாவது நீ வாக்குறுதி தந்திருக்கின்றாய். இந்த வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்தால் இறைவனிடம் நீ பாவியாகி விடுவாய் என்று அப்பாவிகளைப் பயமுறுத்தி தங்கள் இயக்கத்திலேயே காலகாலத்துக்கும் நீடிப்பதற்காக இந்த மாபாதகச் செயலைச் செய்கின்றனர். 

இயக்கத்தை வளர்ப்பதற்காக மார்க்கத்துடன் விளையாடுவதற்கும் இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதற்கும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்கள். 

ஒற்றுமை கோஷம்

நன்மையான விஷயத்தில் ஒன்றுபட வேண்டும். பாவமான காரியங்களில் ஒன்றுபடக் கூடாது என்று இஸ்லாம் ஒற்றுமையை வேறுபடுத்துகின்றது. 

சமுதாயத் தீமைகளை நாம் கண்டிக்கும் போது அத்தீமைகளை ஆதரிப்பவர்கள் நம்மை எதிர்ப்பார்கள். தீமைகளை ஆதரிப்பவர்களும் அதை எதிர்ப்பவர்களும் தனித்தனியே பிரிவார்கள். இந்தப் பிரிவை இஸ்லாம் வரவேற்கின்றது. இதற்கு மாற்றமாக தீமையில் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பதைத் தான் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. 

ஆனால் இவர்கள் ஒற்றுமை விஷயத்தில் இஸ்லாம் கூறும் இந்த வித்தியாசத்தைக் கண்டுகொள்ளாமல் ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். இந்த வாதத்தின் மூலம் சமூகத் தீமைகள் அழியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். 

இவர்கள் இந்த கோஷத்தின் மூலம் மார்க்கத்திற்கு எதிராக செயல்பட்டதைத் தவிர எந்த நன்மையையும் சமூகத்தில் ஏற்படுத்தவில்லை. 

ஒற்றுமை கோஷம் என்பது கேட்பதற்கு நன்றாகவும், பாமர மக்களை விரைவாக கவரக் கூடியதாகவும் இருப்பதால் இதையும் தங்களுடைய இயக்க வளர்ச்சிக்குச் சாதமாக எடுத்துக்கொண்டுள்ளனர். 

வாயளவில் தான் இவர்கள் ஒற்றுமையைப் பேசி வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் இதற்கு மாற்றமாகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒற்றுமை கோஷத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மற்ற இயக்கத்தினர் ஒரு விஷயத்திற்காகப் போராட்டம் நடத்தும் போது அதில் தான் இவர்கள் பங்கெடுக்க வேண்டுமே தவிர இவர்கள் தனியாக தன் இயக்கத்தின் பெயரில் போராட்டம் நடத்துவது கூடாது. 

தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பது? என்ற பிரச்சனை வரும் போது இவர்கள் தனியொரு முடிவை எடுப்பது கூடாது. மாறாக மற்ற அமைப்பினர் எந்த முடிவை எடுக்கிறார்களோ அதற்குக் கட்டுப்பட்டு ஒற்றுமையாக நடக்க வேண்டும். 

மொத்தத்தில் இவர்கள் தனியே இயக்கம் நடத்துவது கூடாது. தன் இயக்கத்தைக் களைத்துவிட்டு மற்ற ஏதாவது ஒரு இயக்கத்தின் கீழ் செயல்பட வேண்டும். 

ஆனால் இவர்கள் அவ்வாறு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயக்கத்தை ஆரம்பித்து சமுதாயத்தில் பல இயக்கங்களைத் தோற்றுவித்து சாதனை படைத்து வருகின்றனர். 

பிரிவினை கூடாது என்று பேசிய இவர்கள் தற்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு இரு கூறாக பிரிந்து கிடக்கின்றனர். இந்த வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் எந்த ஒரு நிலையிலும் இவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறுவதும் பிறரை வெளியேற்றுவதும் கூடாது. 
ஆனால் இதை இவர்கள் பேணவில்லை. இயக்கத்தை விட்டு வெளியேறியும் பிறரை வெளியேற்றியும் இருக்கின்றனர். எதைக் கூடாது என்று கூறினார்களோ அதைத் தாங்களே செய்து தங்களுக்குத் தானே முரண்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

அனைத்து விஷயங்களிலும் நமது ஜமாஅத் மற்ற இயக்கங்களை விட்டு வேறுபட்டு தனக்குரிய தூய்மையுடன் தனியே நிற்கின்றது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிற இயக்கங்கள் செய்யக்கூடிய தவறுகளைத் தயவுதாட்சணையின்றி மக்களிடம் அம்பலப்படுத்தி வருகின்றது. 

எனவே இவர்களுக்கு நாம் தான் சிம்ம சொப்பணமாக பெரும் தலைவலியாக இருக்கின்றோம். நம்மை ஒழித்துவிட்டால் இவர்களின் திட்டங்கள் நிறைவேறிவிடும் என்று நினைக்கின்றனர். 

சமீபத்தில் திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை. இதை மக்களும் அசாங்கமும் தெளிவாக உணர்ந்துள்ளது. இது தான் உண்மை என்பதை இவர்களும் அறிந்தே வைத்துள்ளனர். 

ஆனால் எப்படியாவது தவ்ஹீத் ஜமாஅத்தை மக்களை விட்டும் அந்நியப்படுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த இவர்கள் இந்தப் பிரச்சனை பெரிய ஆயுதமாகக் கருதினர். தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் துப்பாக்கி சூடு நடத்தினர் என்று மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் தவ்ஹீத் ஜமாஅத் அழிந்துவிடும். இதன் பிறகு நாம் மக்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்தனர். 

தமிழகத்தில் பல பகுதிகளில் 19 அமைப்புகள் சேர்ந்து திருவிடைச்சேரி சம்பவத்தில் நமக்குச் சம்பந்தம் இருப்பதாகவும் நம்மை அரசாங்கம் கைது செய்ய வேண்டும் எனவும் கோரி நீண்ட போஸ்டர்களை ஒட்டினர். 

இந்த 19 அமைப்புகளில் ஓரிரு அமைப்புகளைத் தவிர மீதமுள்ளவை அனைத்தும் இது நாள் வரை மக்களுக்கு அறிமுகமில்லாத லைட்டர் பேடு அமைப்புகளாகும். 

இந்தக் காரியத்தை பாப்புலர் ஃபிரண் ஆஃப் இந்தியா இயக்கத்தினர் தான் முன் நின்று முழு முயற்சியுடன் செய்தனர். ஆனால் இறைவன் இவர்களுக்கு இந்த முயற்சியில் படு தோல்வியையும் கேவலத்தையும் வழங்கினான். இந்த போஸ்டர்கள் மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

ஒற்றுமை கோஷம் போடும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் மட்டும் தான் ஒற்றுமையைக் கடைபிடிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர். 

கோழைத்தனம்

ஒரு காரியத்தில் ஈடுபடும் இவர்கள் இதன் பிறகு வரும் விளைவுகைள எதிர்கொள்ளும் திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ பிரச்சனை வரும் போது ஓடி ஒழியும் கோழைகளாகி விடுகின்றனர். 

ஒருவனை அடிக்க வேண்டியது. அவன் காவல் துறையிடம் சென்று புகார் கொடுத்து காவல் துறை வந்தால் ஊரைவிட்டும் ஓடிவிடுவது. காவல் துறையினர் பிரச்சனையில் சம்பந்தப்படாத முஸ்லிம்களை இழுத்துச் செல்வார்கள். அல்லது தரக்குறைவாகப் பேசுவார்கள். இப்படி இவர்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பலர் இருக்கின்றனர். 

இவர்கள் தான் சமுதாயப் பாதுகாவலர்களாம். இந்தக் கோழைகள் தங்களுக்கு ஜிஹாதிகள் என்று வேறு வெட்கமில்லாம் கூறிக் கொள்கின்றனர். 

ஒரு பிரச்சனை ஏற்படும் போது சமுதாயத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பின் விளைவுகளை யோசித்து ஆக்கப்பூர்வமான முறையில் எதிர் கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பிரச்சனைகளை அனுகுகின்றனர். 

இவர்களின் அவசர புத்தியால் ஒரு சிறிய பிரச்சனை பூதாகரமாகி பெரும் கலவரமாக உருவெடுக்கின்றது. இதன் மூலம் சமுதாயத்துக்கு ஏற்படும் இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் இவர்களே காரணமாக இருக்கின்றனர். 

சத்தியவாதிகள் தங்களுக்கு எதிராகக் கூறப்படும் கருத்துக்களை வரவேற்று அவற்றுக்கு சரியான விளக்கத்தை அளிப்பார்கள். கருத்தை கருத்தால் வெல்வார்கள். அசத்தியவாதிகள் தங்களது வழிகேட்டை நியாயப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்பார்கள். இவர்களைப் பற்றி பிறர் விமர்சனம் செய்யும் போது அதை எதிர்கொள்ள அடிதடியில் இறங்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இவர்களுக்கு இல்லை. எனவே அடிதடியில் இறங்குவார்கள். தோல்வியைத் தழுவார்கள். 

நமது மார்க்க அழைப்பாளர்கள் இவர்களின் சறுகல்களையும் வழிகேடுகளையும் மக்களுக்கு விளக்கும் போது இவர்கள் அந்த விமர்சனங்களுக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு நமது அழைப்பாளர்கள் தாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். 

இந்தத் தாக்குதலில் கூட இவர்கள் கோழைகள் என்பதையே வெளிப்படுத்துகின்றனர். மார்க்க சம்பந்தமாக கேள்வி கேட்பதாக நமது அழைப்பாளரை அழைத்துச் சென்று கூட்டாக பலர் சேர்ந்து கொண்டு தனி நபரை ஆயுதங்களால் தாக்குகிறார்கள் என்றால் இவர்களின் கோழைத் தனத்தை எப்படி வர்ணிப்பது என்று நமக்குத் தெரியவில்லை. 

இவர்களின் தகிடுதத்தங்களைப் புரிந்து கொண்டு இவர்களின் இயக்கத்திலிருந்து சிலர் வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறியவர்களை இவர்கள் விட்டு விடுவதில்லை. மீண்டும் தங்களது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். இதற்குக் கட்டுப்பட மறுப்பவரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்வதாக மிரட்டுகின்றனர்.

ஜிஹாத் செய்ய வேண்டும் என்று பேசும் இந்த வாய் வீரர்கள் யாருடன் சண்டையிடுகிறார்கள் என்று பார்த்தால் முஸ்லிம்களைத் தான் இவர்கள் குறிவைக்கிறார்கள் என்பதை புரிய முடிகின்றது. தங்களுக்கு எதிராகச் செயல்படுவன் முஸ்லிமாக இருந்தால் அவனை அழிக்க தயாராக இருப்பார்கள். குஜராத்தில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது அங்கே போய் ஜிஹாத் செய்ய மாட்டார்கள். 

இவர்களின் இதே சிந்தனையில் ஊறிப்போனவர்கள் இன்றைக்கு பாகிஸ்தானிலும் இன்னும் பிற நாடுகளிலும் தாங்கள் ஜிஹாத் செய்வதாக எண்ணிக் கொண்டு முஸ்லிம்களையே கொன்று குவித்து வருகின்றனர். 

இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு மார்க்கத்தை இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதால் மார்க்கம் அவ்வாறு கூறவில்லை. இது பற்றி உண்மையை மக்களுக்கு விளக்க விவாதத்திற்கு வாருங்கள் என நாம் இவர்களுக்கு அழைப்பு விட்டால் அதிலும் தாங்கள் கோழைகள் என்பதை வெளிப்படுத்துகின்றனர். 

விவாதம் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகிறது என்றும் நபி (ஸல்) அவர்களே காஃபிர்கள் விடுத்த விவாதத்துக்குப் பதிலளிக்கவில்லை என்றும் பொய் கூறி விவாதத்துக்கு வர மறுக்கின்றனர். 

மனித குலத்துக்கு நேர்வழிகாட்டியாக வழங்கப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை கொள்கையாகக் கொண்டவர்கள் மட்டுமே ஈருலகத்திலும் வெற்றி பெற முடியும். 

ஆனால் இவர்களோ இவ்விரண்டில் எந்த அம்சம் இயக்கத்தை வளர்க்க உதவுமோ அவற்றை மட்டும் பேசுவார்கள். உதாரணமாக ஜிஹாத் பைஅத் ஒற்றுமை கோஷங்கள். இந்த ஓரிரு விஷயங்களைக் கூட இவர்கள் முறையாக சமுதாயத்துக்குக் கூறவில்லை. மாறாக இவற்றுக்குத் தவறான விளக்கங்களைக் கொடுத்து இஸ்லாத்தை களங்கப்டுத்த முயற்சிக்கின்றனர். 

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டும் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய ஏராளமான கடமைகளைக் கற்றுத் தருகின்றது. இவற்றில் எந்தக் கடமையை ஆற்றினால் மக்களிடம் எதிர்ப்பு வருமோ ஆதவு கிடைக்காதோ அது மாதிரியான விஷயங்களை இவர்கள் புறக்கணித்து விடுவார்கள். 

எனவே அறிவுச் சிந்தனை உள்ள யாரும் இந்த சந்தர்பப்பவாதிகளின் இயக்கத்தில் அங்கம் வகிக்க மாட்டார்கள். பலர் சிந்திக்கத் தொடங்கி இவர்களை விட்டு வெளியேறி தங்களை காத்துக் கொண்டுள்ளனர். எனவே சமுதாயத்துக்குப் பலனில்லாத சமூகத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய இந்த இயக்கத்தினரை இஸ்லாமிய சமூதாயம் முற்றிலுமாக புறக்கணிப்பது அவசியம்.
                                                           THANKS TO www.onlinpj.co
m

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More