பட்டுக்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பட்டுக்கோட்டை காசாங்குளத்தருகே உள்ள ராமர்மடத்திலிருந்து துவங்கிய விநாயகர் ஊர்வலம் கரிக்காடு, முதல்சேரி, மாலியக்காடு என 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராஜானந்தம், அதிராம்பட்டிணம் நகர தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்தது. ஊர்வலத்துக்கு தஞ்சை மாவட்ட எஸ்.பி., அனில்குமார் கிரி தலைமையில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதிக போலீஸ் குவிப்பு பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஊர்வலத்தில் கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா, தீயணைப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. விநாயகர் ஊர்வலம் அதிராம்பட்டிணத்திலிருந்து வெடிவெடித்து, டிரம்ஸ்கள் முழங்க அதி விமர்சையாக துவங்கியது. விழாவில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு ஆகியோர் சிறப்புரையாற்றி, விநாயர் சிலைகளை கடலில் விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். விழாவில், பாரதியஜனதா மாநில அமைப்புச்செயலாளர் மோகன்ராஜுலு பேசுகையில், "காந்தி சொன்னது நினைவுக்கு வருகிறது. எப்போது நள்ளிரவில் ஒரு பெண்மணி தனியாக பாதுகாப்பாக நடமாட முடிகிறதோ, அப்போது தான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என காந்தி சொன்னார். ஆனால், இன்று இந்திய நாட்டில் பட்டப்பகலிலே விநாயர் சிலை ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படி என்றால் என்ன மத நல்லிணக்கம் இருக்கிறது?. தமிழக முதல்வர் ஜெயலலிதா மதமாற்று தடை சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும்' என்று அவர் பேசினார். விழாவில், சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்றனர். 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டது. மற்ற மதத்தை(முஸ்லீம்) சேர்ந்த விஷமிகள் கூட்டத்தில் புகுந்து கலவரம் செய்து விடமால் இருக்க, இணைப்பு சாலைகள் அனைத்திலும் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். மாலை இருட்ட தொடங்கிய நேரத்தில் அதிராம்பட்டிணம் கடற்கரையில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, விழாவை சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்திய விழாக் குழுவினரை மாவட்ட எஸ்பி அனில்குமார் கிரி பாராட்டினார். http://www.dinamalar.com/district_detail.asp?id=308016 |
_