Thursday, 21 April 2011

PFI,CFI மற்றும் SDPI இவர்கள் யார் ?? இவர்களின் கொள்கை என்ன ?? (தொடர் 01)


கொள்கை இல்லாக் கூட்டம்
(PFI,CFI மற்றும் SDPI பற்றிய ஒரு அலசல் ரிப்போர்ட்)

பொதுவாக எந்த ஒரு இயக்கமானாலும்அவர்களுக்கென்று ஒரு கொள்கை கோட்பாடு,இலட்சியம் இருக்க வேண்டும்ஒவ்வொருஇயக்கத்துக்கும் கொள்கை என்பது உயிர்மூச்சைப் போன்று அவசியமானதாகும்.கொள்கை இல்லாத இயக்கம் செத்த உடலைபோன்றது.




அந்த கொள்கை சரியா ? தவறா ? என்பது ஒரு புறம் இருந்தாலும் நிலையானகொள்கை இல்லையென்றால் எவராலும் முறையாக இயக்கம் நடத்த முடியாது.இத்தகையவர்கள் இயக்கம்இயக்கம் என்று எவ்வளவு கத்தினாலும் இயக்கத்தின்பெயரால் ஆதாயம் தேட நினைக்கும் கொள்கையற்ற கோமாளிகள் என்றேஇவர்களை கூற முடியும்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தன்னை ஒரு இயக்கம் என்று கூறிவருகின்றது.ஆனால் இவர்களுக்கென்று நிலையான எந்தக் கொள்கையும் கிடையாது.கொள்கையற்ற கூட்டத்துக்கு மிகப் பொருத்தமான உதாரணமாக இவர்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பது சமீபத்தில் இவர்களால் புதிதாகஉருவாக்கப்பட்ட அமைப்புஇதற்க்கு முன்பே இவர்கள் பல்வேறு பெயர்களில் பலஇயக்கங்களாக இயங்கி வருகின்றனர்.

இவர்கள் மற்றவர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக்கொண்டு தான் முதலில் இயக்கத்தை துவங்கினார்கள்ஜனநாயகம் என்பது ஷிர்க்(இனைவைப்புஆகும்கொடி பிடிப்பதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் தேர்தலில்ஓட்டுப் போடுவதும் கூடாது மொத்தத்தில் இந்திய அரசாங்கத்திற்க்குக் கீழ்வாழ்வது மார்க்கத்திற்க்கு விரோதமானது என்று பகிரங்கமாகப் பிரச்சாரம்செய்துவந்தனர்இந்த கொள்கையை நோக்கி மக்களை அழைத்தனர்.

குஜராத் கலவரம் போன்ற நாட்டில் நடந்த கலவரங்களை எடுத்துக் கூறிமக்களிடையே இனவெறியை ஏற்படுத்த முயற்சித்தனர்தங்கள் இயக்கத்தைவளர்ப்பதற்க்கு இந்த கலவரங்களை ஆயுதமாக பயன்படுத்தினர்.

ஆனால் இவர்களின் இக்கொள்கை முட்டாள்தனமானது என்பதைப் பொதுமக்கள்புரிந்து கொண்டனர்இவர்களின் வழிகெட்ட இக்கொள்கைக்கு மக்களிடம்வரவேற்பு கிடைக்காததால் இயக்கம் வளரவில்லை.

எனவே தனது கொள்கையை அப்படியே மாற்றி விட்டனர்இப்போது ஜனநாயகம்கூடும் என்கின்றார்கள்ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்கொடி தூக்கக் கூடாது என்றுசொன்னவர்கள் இன்றைக்கு கொடிக்கு சல்யூட் அடிக்கின்றார்கள்ஓட்டு போடுவதுகூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு ' எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் 'என்று ஓட்டுப் பொறுக்க ஆரம்பித்துவிட்டனர்.

தனது கொள்கை தவறு என்பதை உணர்ந்து பிறகு கொள்கையை மாற்றும் நிலைஒரு இயக்கத்துக்கு ஏற்படலாம்சரியான கொள்கைக்காக மாற்றம் செய்வதுதவறல்லஇந்த மாற்றம் அவசியமானது.

ஆனால் இவ்வாறு தனது கொள்கையை ஒரு இயக்கம் மாற்றும் போது அதைமுறையாக மக்களிக்கு அறிவிக்க வேண்டும்தங்களது பழைய நிலைபாடுதவறானது என்று மக்களுக்கு முன்னால் ஒப்புக் கொள்ள வேண்டும்கொள்கைமாற்றத்துக்கான நியாயமான காரணங்களை மக்கள் மன்றத்தில் விவரிக்கவேண்டும்.

இயக்கத்தின் அடிப்படை கொள்கையை மாற்றிய இவர்கள் இவற்றில் எதையும்செய்யவில்லைமாறாககள்ளத்தனமாகக் கொள்கையை மாற்றிக் கொண்டனர்.

இன்றைக்கு மார்க்க விஷயங்களில் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள்நிலவுகின்றனசட்ட விஷயங்கள் மட்டுமல்லாமல் அடிப்படைக் கொள்கைவிஷயத்திலும் கூட இந்த வேறுபாடு இருக்கின்றது.

உதாரணமாக மரணித்தவர்களை இறைவனுடைய அந்தஸ்தில் கருதும்பரேலேவிகள் இருக்கின்றனர்அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டும்உரிய பின்பற்றுதல் என்ற அந்தஸ்தைஇமாம்களுக்கும் முன்னோர்களுக்கும்பெரியார்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று நம்பும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்இருக்கின்றனர்இதே போன்று குர் ஆன் ஹதீஸ் மட்டுமின்றிநபித்தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறுவோரும் இருக்கின்றனர்குர் ஆன்ஹதீஸ் மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்று நம்பும்ஏகத்துவவாதிகளும் இருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு இயக்கமானாலும் மேற்கண்ட விஷயங்களில் இதுதான் தனது நிலைபாடு என்று தெளிவாகக் கூறி விடுகின்றனர்ஆனால் பாப்புலர்பிரண்ட் இயக்கத்தினர் மட்டும் இதிலிருந்து வேறுபடுகின்றனர்.

மேற்கண்ட மாறுபட்ட கொள்கையில் இது தான் தனது கொள்கை என்று எந்தஒரு கொள்கையையும் இவர்கள் குறிப்பிடுவதில்லைஇவற்றில் எதையாவதுஒன்றை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரச்சாரம் செய்வதில்லை.

கப்ரு வழிபாடுசந்தனக்கூடுகந்தூரிமவ்லூது போன்ற இனைவைப்புகளைஇவர்கள் சரி காண்பவர்களா ? அல்லது எதிர்ப்பவர்களா ? மத்ஹபுகளையும் பித்அத்களையும் ஏற்பார்களா ? மறுப்பார்களாஇது போன்ற கேள்விக்கு யாராலும்ஆதாரத்துடன் பதில் கூற முடியாதுஏனென்றால் இவர்கள் எந்த கொள்கையும்இல்லாத கொள்கையற்ற கூட்டமாக இருக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் மறுமை வாழ்வும் இந்த உலகத்தில் வாழும் போது அவன்கொண்டிருந்த கொள்கை அடிப்படையில் அது வெற்றி அல்லது தோல்வியைப்பெற்றுத் தரும்இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் இவர்கள்அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

தங்களுடைய இயக்கம் சமுதாயத்துக்கு நன்மை செய்யும் இயக்கம் என்று கூறஇவர்களுக்கு அருகதை இல்லைஇஸ்லாமிய சமுதாய மக்களின் மறுமைவாழ்வை அழித்து நாசமாக்கக் கூடிய இணை வைப்புக் காரியங்களும் பித்அத்களும் இன்னும் பல தீமைகளும் மக்களிடையே பரவியிருப்பதைக்கண்கூடாகப் பார்கின்றனர்இவையெல்லாம் இஸ்லாத்திற்க்குப் புறம்பானவைஎன்பதை இவர்களும் புரிந்து வைத்துள்ளனர்.

இந்தத் தவறுகளை எச்சரித்து மக்களை இவற்றிலிருந்து காக்கும் கடமைஒவ்வொரு இஸ்லாமிய இயக்கத்துக்கும் இருக்கின்றதுஆனால் இவர்களோஇவற்றைக் கண்டு கொள்வதே இல்லைஇத்தகையவர்கள் சமுதாய நலனுக்காகப்போராடக் கூடியவர்கள் என்று எவ்வாறு கூற முடியும் ?

இத்தீமைகளுக்கு எதிராக நாம் பிரச்சாரம் செய்யும் வேளையில் நமதுபிரச்சாரத்தை முடக்கும் வகையில் நமக்கெதிராகவும் இவர்கள்செயல்படுகின்றனர். 'மென்மை வேண்டும்நளினம் வேண்டும்என்று கூறி நமதுவேகத்தைக் குறைக்க முயற்சிக்கின்றனர்.

நபிவழி அடிப்படையில் வாழ வேண்டும் என்று நாம் பிரச்சாரம் செய்து மக்களைநல்வழிப்படுத்தி வருகின்றோம்இவர்கள் சத்தியவான்கள் என்றால்இவ்விஷயத்தில் நம்மைப் போன்று இவர்களும் செயல்பட வேண்டும்.இல்லையென்றால் மெளனமாக ஒதுங்கிவிட வேண்டும்ஆனால் இவர்கள்நபிவழிக்கு எதிராக முட்டாள்தனமான வாதங்களை எழுப்பி மக்கள் காலாகாலத்துக்கும் வழிகேட்டில் நீடித்திருக்கக் காரணமாக இருக்கின்றனர்.

சுன்னத் என்பது கடமையல்லஒற்றுமை என்பது பர்ழ் எனவே சுன்னத்தைவிட்டால் பரவாயில்லைதொழுகையை நபியவர்கள் காட்டித் தந்தஅடிப்படையில் தொழுவது அவசியமில்லைஅவரவர் இஷ்டப்படி குருட்டாம்போக்கில் எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம்இதை தவறு என்றுவிமர்சணம் செய்ய கூடாது என்று வாதிடுகின்றனர்.

மக்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி நபிவழியை ஓரங்கட்டுவதற்க்கு இதுபோன்ற கேடு கெட்ட வாதங்களை முன்வைக்க இவர்களின் நாவு கூசுவதில்லை.இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தை அழிவில் தள்ளுபவர்களே தவிர நன்மைசெய்பவர்களாக இருக்க முடியாது.

இன்ஷா அல்லாஹ் அலசல் ரிப்போர்ட் புகைபடம் மற்றும் விடியோ ஆதாரங்களுடன் தொடரும்.....

1 comments:

இப்படி இணையதளத்தின் வாயிலாக பேசுபவர்களுக்கு திராணி இருந்தால் SDPI,PFI உடன் நேருக்கு நேர் நின்று விவாதம் நடத்த தயாரா?

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More