ஜிஹாத் கோஷம்:
சரியான இஸ்லாமியக் கொள்கையைக் கூறிஇயக்கம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம்இவர்களுக்குக் கிடையாது. மாறாக எந்த வழியில்சென்றால் இலகுவாக மக்களை இயக்கத்தில் சேர்க்கமுடியுமோ அந்த வழி மார்க்கம் தடைசெய்த வழியாகஇருந்தாலும் அறிவார்ந்த வழியாகஇல்லாவிட்டாலும் அதில் செல்லத் தயங்கமாட்டார்கள்.
ஒரு இஸ்லாமிய அரசாங்கம் நீதிக்காக நடத்தும் அறப்போருக்கு ஜிஹாத் என்றுஇஸ்லாம் கூறுகிறது. போர் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது இஸ்லாமியஅரசின் கீழ் வாழ்பவர்கள் பின்வாங்காமல் போரில் கலந்து கொண்டு இஸ்லாமியஅரசுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. குர்ஆனும்ஹதீஸ்களும் இதைத் தான் ஜிஹாத் என்று கூறுகின்றது.
ஆனால் இவர்கள் தங்கள் இயக்கத்தை வளப்பதற்காக ஜிஹாதிற்கு புதுமையானவிளக்கத்தைக் கொடுத்து மார்க்கத்துடன் விளையாடுகின்றனர். இந்தியஅரசாங்கத்திற்கு எதிராக ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை தற்போது இந்தியாவில்கொண்டுவர வேண்டும். இதற்காக இவர்களுடைய இயக்கத்தில் சேர்வது தான் ஜிஹாத்.இந்த ஜிஹாதைத் தான் குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன என்று இறைவனுடையபயம் இல்லாமல் கூறி வருகின்றனர்.
பொதுவாக போராடுவது எதிர்ப்பது போன்ற குணங்கள் இயற்கையாகவேஇளைஞர்களிடம் மிகைத்திருக்கும். இந்தப் பருவம் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதைவிட உணர்வுப்பூர்வமாகவே சிந்திக்கத் தூண்டும். இளைஞர்களிடம் உள்ள இந்தப்பலவீனத்தையும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களையும்தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இளைஞர்களிடையே இன வெறியைஏற்படுத்துகின்றனர். தாங்கள் மட்டுமே வீரமாக மிகப் பெரிய இலட்சியத்திற்காகபாடுவதைப் போன்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த போலித்தோற்றத்தின் மூலம் தங்கள் இயக்கத்தை வளர்க்கலாம் என்று நினைக்கின்றனர்.
இவர்கள் பல வருடங்களாக ஜிஹாத் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுகின்றனர்.ஆண்டுகள் பல கடந்துவிட்டது. இவர்கள் எப்போது எங்கே யாருடன் ஜிஹாத்செய்தார்கள்? தாங்கள் செய்த ஜிஹாதுடைய பட்டியலைத் தர வேண்டும் என்று நாம்இவர்களை நோக்கி கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். ஆனால் இதைப் பற்றிஇவர்கள் வாய் திறப்பதே இல்லை.
தங்களுடைய திட்டங்கள் லட்சியங்கள் நோக்கங்கள் ஆகியவற்றைப் பகிரங்கமாகஇவர்கள் மேடைபோட்டு மக்களுக்கு விவரிக்க தைரியமற்றவர்கள். எனவேஇரகசியமாகக் கூடி கூடிப் பேசிக் கொள்வார்கள். ஆனால் இது வரை இந்த இரகசியப்பேச்சின் மூலம் இளைஞர்களை ஏமாத்தியதைத் தவிர இவர்கள் சாதித்ததுஒன்றுமில்லை.
நாட்டில் நடந்த குஜராத் போன்ற கலவரங்களைப் பற்றி வாய் கிழியப் பேசியவர்கள்அந்தக் கலவரங்களை அடுத்து இவர்கள் செய்த சாதனைப் பட்டியலை இவர்களால்வெளியிட முடியுமா? இயக்க்தை வளர்ப்பதை மட்டுமே முழு நோக்காகக் கொண்டுபொய்யாகப் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றியது தான் இவர்கள் செய்த சாதனை.
இஸ்லாம் தீவரவாதச் செயலைத் தான் ஜிஹாத் எனக் குறிப்பிடுகின்றது எனஊடகங்களும் பத்திரிக்கைளும் தவறாகச் சித்தரித்து வருகின்றன. மாற்று மதக்கொள்கையில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஜிஹாத் என்றால் தீவிரவாதச் செயல்என்றே புரிந்து வைத்துள்ளனர். இந்தத் தவறான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்விதமாக இவர்களின் ஜிஹாத் கோஷம் அமைந்துள்ளது.
ஒரு மனிதன் தொழுகை நோன்பு ஸகாத் போன்ற வணக்கங்களைப் புரிவதும்பாவங்களைப் புரியாமல் ஒழுக்கமாக வாழ்வதும் அவனுக்கும் அவனைப் படைத்தஇறைவனுக்கும் இடையே உள்ள பிரச்சனை. எனவே இந்த ஆண்மீக விஷயங்களில்ஒருவர் நான் முறையாக நடப்பேன் என அல்லாஹ்விடம் மட்டுமே உறுதிமொழிஅளிக்க முடியும். இதற்கு பைஅத் என்று இஸ்லாம் கூறுகின்றது.
முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற ஒரே காரணத்துக்காகஅல்லாஹ்விடம் செய்ய வேண்டிய இந்த உடன்படிக்கையை அவர்களிடம் செய்யலாம்என அல்லாஹ் அனுமதியளிக்கிறான். காரணம் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறுஉறுதிமொழி கொடுப்பது தன்னிடம் உறுதிமொழி அளிப்பதற்குச் சமமானது என்றுஅல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அல்லாஹ் வழங்கிய இந்தஅதிகாரத்தை இந்த இயக்கத்தினர் தங்கள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆண்மீக விஷயங்களில் முறையாக நடக்க வேண்டும் என அப்பாவிஇளைகஞர்களிடம் வாக்குறுதி வாங்குகின்றனர். இவ்வாறு வாக்குறுதி வாங்குவதற்குஇவர்கள் என்ன நம்மைப் படைத்த இறைவனா? அல்லது அந்த இறைவனால்அனுப்பப்பட்ட இறைத் தூதர்களா?
தங்களிடம் பைஅத் செய்ய வேண்டும் என இவர்கள் கூறுவதற்குக் காரணம் தங்கள்இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தங்ளை விட்டும் விலகி சென்று விடக் கூடாதுஎன்பதற்காகத் தான். அதாவது நீ வாக்குறுதி தந்திருக்கின்றாய். இந்த வாக்குறுதிக்குமாற்றமாக நடந்தால் இறைவனிடம் நீ பாவியாகி விடுவாய் என்று அப்பாவிகளைப்பயமுறுத்தி தங்கள் இயக்கத்திலேயே காலகாலத்துக்கும் நீடிப்பதற்காக இந்தமாபாதகச் செயலைச் செய்கின்றனர்.
இயக்கத்தை வளர்ப்பதற்காக மார்க்கத்துடன் விளையாடுவதற்கும் இறைவனுடையஅதிகாரத்தில் தலையிடுவதற்கும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இதன்மூலம் நிரூபித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment