Thursday, 21 April 2011

PFI,CFI மற்றும் SDPI இவர்கள் யார் ?? இவர்களின் கொள்கை என்ன ?? (தொடர் 02)


நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல

வீதி வீதியாக இறங்கி பல்வேறு நலப்பணிகள்செய்வதாகக் கூறி மக்களிடம் வசூல்செய்கின்றனர்மக்களிடம் கணக்கில்லாமல்வசூல் செய்யும் இவர்கள் இதற்க்கான கணக்குவழக்குகளை மக்களிடம் தெரிவிப்பதில்லை.



வசூலிக்கபட்ட பணத்தை இவர்களில் ஒருவர்கையாடல் செய்தால் இந்த ஊழல்வெளிச்சத்திற்க்கு வராமல் மூடிமறைப்பதற்க்கு இது வழிகோலும்மக்கள்யாரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மக்கள் பணம் தனிநபர்களின் சுயலாபத்திற்க்காக சூறையாடப்படும்எனவே இவர்களைப்போண்று மக்களிடம் வசூலித்து கணக்கு காட்டாதவர்களை மக்கள் நம்பகூடாது.


வசூல் வேட்டையில் இறங்கும் இவர்கள் மார்க்க நெறிமுறைகளைக்கவனத்தில் கொள்ளாமல் காசு பணத்தை பெறுவதை மட்டுமேநோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

நோன்பு பெருநாளுக்கு முன் ஏழை எளியவர்களின் நலனுக்காக பித்ராஎன்ற நோன்பு பெருநாள் தர்மத்தை ஒவ்வொருவரின் மீதும் இஸ்லாம்கடமையாக்கியுள்ளதுஇந்த தர்மம் இரண்டரை கிலோ தானியம் அல்லதுஅதன் மதிப்புக்கு நிகரான கிரயமாக இருக்க வேண்டும் என இஸ்லாம்நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால் பித்ராவை நாங்களும் வசூலிக்கிறோம் என்று கூறி களத்தில்இறங்கும் இவர்கள் இஸ்லாம் நிர்ணயித்த அளவை கவனத்தில்கொள்ளாமல் கைக்குக் கிடைப்பதை வாங்கி கொள்கிறார்கள்ஒருவர்நோன்புப் பெரு நாள் தர்மமாக 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் கொடுத்தால்இது பித்ரா கிடையாது என்று அவருக்கு விளக்கிக் கூறி அவர் முறையாககொடுக்க வேண்டிய தொகையை வாங்க வேன்டும்ஆனால் இவர்கள் அந்தரூபாய்யையும் 10 ரூபாயையும் வாங்கி கொண்டு சென்று விடுகின்றனர்.இந்த அற்பத்தொகையை கொடுத்தவன் தான் பித்ரா என்ற நோன்பு பெருநாள் தர்மத்தை நிறைவேற்றிவிட்டதாக தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறான்இப்படி காசு பணத்துக்காக மக்களின் மார்க்கத்துடன்விளையாடுகிறார்கள்.

குர்பானித் தோல்களை ஏழை எளியவர்களுக்கு தர்மமாக கொடுக்கவேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது ஆனால் இவர்கள் குர்பானித்தோல்களை திரட்டி கல்வி நிறுவனங்களுக்காகவும் மற்ற மற்றபணிகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள்இவ்வாறு மக்களுடைய குர்பானிவணக்கத்தில் விளையாடும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

குர்பாணி மட்டுமின்றி ஸகாத்தாக தர்மம் வழங்கப்படும் பொருட்களையும்குறிப்பிட்ட சிலருக்கே வழங்க வேண்டும் என்று மார்க்கம் விதிமுறைகளைஏற்ப்படுத்தியுள்ளதுமார்க்க சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்துஅதை பேணக்கூடியவர்கள் தான் மக்களிடம் வசூலிக்கும் பொருட்களைஅதற்குரியவர்களிடம் முறையாக ஒப்படைப்பார்கள்இவர்களுக்குகொள்கையோ கோட்பாடோ சட்டதிட்டங்களோ எதுவும் கிடையாது.இப்படிபட்டவர்கள் மக்களிடம் வாங்கும் பொருட்களை அதற்குரியபணிகளுக்கு எப்படி முறையாக செலவிடுவார்கள் ? என்பதை மக்கள்சிந்தித்து பார்க்க வேண்டும்.

இயக்க தலைவர்கள் ஒரு ஊருக்கு வந்தால் அவரை வரவேற்பதற்காகபோஸ்ட்டர்கள் அடித்து தனிமனித வழிபாட்டை அரங்கேற்றுகின்றனர்.பல்வேறு வண்ணங்களில் தினம் தினம் ஏதேனும் ஒரு சுவரொட்டியைதமிழகம் முழுவதும் ஒட்டுகின்றனர்சுதந்திர தின கொண்டாட்டம்அனிவகுப்பு என்று லட்சக்கணக்கில் செலவு செய்து சுவர் விளம்பரங்களைசெய்கின்றனர்மாதம் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் இதற்க்காக செலவுசெய்கின்றனர்இதற்கெல்லாம் வருமானம் என்ன ? அதற்க்கான கணக்குவழக்குகள் என்ன ? யாருக்கும் தெரியாதுஅந்த இயக்கத்தின் அடிமட்டத்தொண்டனுக்கோ அல்லது அடிமட்ட நிர்வாகிகளுக்கோ தெரியாது.

மேலும் இவர்களின் இயக்க நிர்வாகிகள் ஜன நாயக முறையில் தேர்வுசெய்யபடுவதில்லைஇயக்கத் தொண்டர்களின் அங்கீகாரம் இல்லாமல் ஒருகதம்பமான முறையிலேயே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நிர்வாகத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்கும்உரிமையோ அவர்களை பொறுப்பிலிருந்து நீக்கும் உரிமையோ இயக்கஉறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவதில்லைதனி மனிதருடைய சொத்தைப்போண்றே இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது.

பதவிக்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர்தனக்காக மக்களிடம் ஓட்டுக்கேட்கின்றனர்இதனால் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் இல்லை.குறிப்பிட்ட சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்க்குத் தங்கள் இயக்கத்தைஇவர்கள் பயன்படுத்துகிறார்கள்இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் இதைச்சிந்தித்து பார்க்க வேண்டும்.

அரசியல் சாக்கடையில் இறங்கிய இவர்கள் மார்க்க நெறிமுறைகளை மீறத்தொடங்கியுள்ளனர்இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.தங்களது தேர்தல் பிரச்சாரங்களிலும் நிகழ்ச்சிகளிலும் இசையுடன் கூடியபாடல்களைப் பாடவிடுகின்றனர்பெரும் பெரும் டிரம்ஸ் போன்றவாத்தியங்களைக் கொண்டு வந்து இசைக்கின்றனர்.





அனைத்து தரப்பு மக்களின் ஓட்டை பொறுக்குவதற்க்காக விநாயகர்சதுர்த்திகிறிஸ்துமஸ் போன்ற மாற்று மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துதெரிவித்து அவற்றை ஆதரிக்கும் கேவலமான நிலைக்குச் சென்றுள்ளனர்.







இன்ஷா அல்லாஹ் அலசல் ஆதாரங்களுடன் தொடரும்....

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More