குமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா எனும் பயங்கரவாத அமைப்பு நடத்திய வெறிச்செயலின மூலம் தினமணி பத்திரிகை எழுதிய செய்தி நூற்றுக்கு நூறு உண்மை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
புதிய பெயரில் சிமி பயங்கரவாத அமைப்பு?
பெங்களூர்/புது தில்லி, டிச.12: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு (சிமி), பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) என்று பெயரை மாற்றி செயல்பட்டுவருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி மாதூர் இசுபுவிடம் நடத்திய விசாரணையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
சிமி பயங்கரவாதிகள் இப்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் பெயரில் ஒன்றுகூடி மீண்டும் சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாகவும் தெரிகிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிமி இயக்கம் 2006-ம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வளைகுடா நாட்டில் இருந்து பெங்களூருக்கு வந்த மாதூர் இசுப்பு என்பவரை பெங்களூர் போலீஸார் கைது செய்தனர். அவருக்கும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும், அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
சிமி அமைப்புத் தடை விதிக்கப்பட்டதால், இந்தியாவில் பயங்கரவாத இயக்கத்தில் ஈடுபடுவர்களை ஒருங்கிணைப்பதில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்குப் பிரச்னை ஏற்பட்டது. இதனால் புதிய அமைப்பின் கீழ், சிமி பயங்கரவாதிகளை மீண்டும் இணைக்க அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' இயக்கத்தின் கீழ் மீண்டும் அவர்கள் இணைகின்றனர்.
முன்பு வட இந்தியாவை இப்பயங்கரவாதிகள் முக்கிய இடமாகக் கொண்டிருந்தனர். அங்கு இப்போது கெடுபிடி அதிகரித்து விட்டது. இதனால் இந்தியாவின் தென் மாநிலங்களை பயங்கரவாதிகள் தங்கள் மையமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து வளைகுடா நாடுகள் வழியாக இந்தியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணம் வருகிறது என்றும் மாதூர் தெரிவித்துள்ளார்.
மாதூர் மீது 4 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 17 கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2003-ம் ஆண்டில் இருந்து போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.
சிமி தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கமாக மாறியுள்ளது என்ற செய்தி குறித்து அந்த இயக்கத்தின் செயலாளர் ரிஸ்வான் கூறியது: எங்கள் இயக்கம் குறித்து தவறான தகவல் வெளியாகியுள்ளது. எங்கள் அமைப்பைப் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்' என்று தெரிவித்தார்.
சமீபத்தில் கேரளத்தில் இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வியை தேர்வில் கேட்டதால், விரிவுரையாளர் ஒருவரின் கையை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் துண்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comments:
pfi க்கும் கையை துண்டித்தவருக்கும் சம்பந்தம் இல்லை என்று தீர்ப்பு வந்துள்ளது
Post a Comment