Thursday, 21 April 2011

PFI,CFI மற்றும் SDPI இவர்கள் யார் ?? இவர்களின் கொள்கை என்ன ?? (தொடர் 10)




























கிழே இருக்கும் புகைப் படத்திற்க்கு எல்லாம் விமர்சனம் நான் செய்ய தேவை இல்லை குர் ஆன் ஹதீஸ் கொண்டு சிந்தித்து பார்த்தால் முஸ்லிம்கள் அனைவருக்கும் புரியும்....

திருப்பூரில் நடைபெற்ற ஒருவரின் திருமனத்தின் போது நம் கண்ணில் பட்ட காட்சிகளை நமது கேமராவில் படமாக்கினோம். இதோ அந்த படங்களை உங்கள் மத்தியில் விமர்சணங்கள் இல்லாமல் குர் ஆன் ஹதீஸை மேற்க்கொள் காட்டி வைக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நேர் வழி காட்ட பிரார்த்தனை செய்வோம்.



அல்லாஹ்வின் வார்த்தைகள்...

வீண் விரையம் செய்யாதீர்கள் ! வீண் விரையம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல் குர்ஆன் 6:141)

உண்ணுங்கள் பருகுங்கள் ! வீண் விரையம் செய்யாதீர்கள் ! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல் குர் ஆன் 7:31)

அடுத்ததாக அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்கள் பற்றி கூறும் போது.

அன்றி அவர்கள் செலவு செய்தல், அளவைக் கடந்துவிட மாட்டார்கள்; உலோபித்தனமும் செய்யமாட்டார்கள்; இதற்க்கு மத்திய தரத்தில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 67:25)

உத்தம தலைவர் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்..

"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

ஆதாரம் : அஹ்மத் 23388



மலர்களை சாலையில் கொட்டி வீண் விரையம் செய்த அவலம்.



 

இப்படி ஊரில் எங்கும் நடப்பது தானே இதை இங்கு போட அவசியம் என்ன என்று சிந்திக்கின்றீர்களா. அவசியம் உள்ளது என்பதை அடுத்த புகைப்படம் உங்களுக்கு தெளிவு படுத்தும்.

திருமண வாழ்த்து.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப்(ரலி) தமக்கு திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது "பாரகல்லாஹூ லக" (அல்லாஹ் உணக்கு பரகத் -  புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள்.

ஆதாரம் : புகாரி 5155, 6386

"பாரகல்லாஹு லகும், வபாரக அலைக்கும் " என்று கூறுமாறு நபிகள் நாயகம்(ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 15181)

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது "பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா பி கைர்" 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

ஆதாரம் : திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599


SDPI யின் திருமண வாழ்த்தை பாருங்கள்


ஒரு ஸஹாபி நமது ஈருலக தலைவர் முஹ்மத் நபி (ஸல்) அவர்களை கூட 
அழைக்காமல் மிக எளிமையான முறையில் தனது திருமணத்தை நடத்தி இருக்கிறார் 
என்ற ஹதீஸும் பல ஹதீஸ் புத்தகங்களில் பதிவாகி இருக்கா வாழ்த்து பேணர்ரில்
 நிர்வாகிகளே வருக வருக என்று போட்டு இருப்பது இஸ்லாமிய முறைக்கு 
மாற்றமானதாக உள்ளது.

திருமண விஷயத்தில் மாற்று மத கலாச்சாரத்தில் இருந்து இளைஞர்கள் மாறிக் கொண்டு 
வரும் இந்த காலத்தில் இளைஞர்கள் மனதில் இஸ்லாத்தை மறக்கடித்து இப்படி 
இஸ்லாத்திற்க்கு முரணான திருமணங்களை நிகழ்த்திக் கொண்டு மற்றவர்களுக்கு 
நாங்கள் சலைத்தவர்கள் இல்லை என்பதை மேலும் மேலும் 
நிறுபித்துக் கொண்டு இருக்கின்றார்கள் இந்த அ(சத்திய)ரசியல்வாதிகள்.

இருமணம் இனையும் திருமணத்தில் அரசியல் விளம்பரம் செய்ய தொடங்கிய 
இவர்கள் இனி வரும் காலங்களில் மற்ற இஸ்லாமிய கட்சிகளை போல் தொழுகை, 
நோன்பு போண்ற வணக்க வழிபாடுகளிலும் அரசியலை புகுத்த தயங்க மாட்டார்கள்..

இதை எல்லாம் கூறினால் SDPI ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சி 
இல்லை என்ற ஒரு டையலாக்கை ரெடியா வச்சுகிட்டு புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் உங்கள் வாயால் அல்லாஹ் இந்த உண்மையை உலகிற்க்கு உணர்த்திவிட்டான்.

SDPI ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சியாக இல்லை என்றாலும் இஸ்லாமியர்களில்
 ஒரு சிலர் இந்த கேடு கெட்ட கூட்டத்தில் சிக்கி இஸ்லாத்தை மறந்து நிற்க்கின்றனர். 
அது போண்ற சகோதரர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்து கொண்டு 
சேர்ப்பது இஸ்லாத்தை பின்பற்ற நினைக்கும் ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமையாக உள்ளது

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More