Thursday, 21 April 2011

எங்கே செல்லும் இந்த பாதை.....


அன்பு சகோதரர்களே இவர்களின் இஸ்லாம் மற்றும் சமுதாய விரோதபோக்கை 
தொடர்ச்சியாக நாம் விளக்கி வருகின்றோம்...

இரண்டு தினங்களுக்கு முன்பு இவர்கள் திருப்பூர் 
கேம்பைத் தோட்டம் பகுதியில் பொங்களுக்கு வைத்த பேணரையும் , கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் 
சுபைதா என்ற பெண்ணிற்க்கு காசு மாலை அனிவித்து ஊர்வலம் போன அவலத்தையும் மக்கள் மன்றத்தில் 
நமது சத்திய முழக்கம் இனையதளம் வெளியிட்டது.

SDPI யின் இந்த அவலம் வெளிவந்து பொது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு அவலத்தை செய்துள்ளனர்.

அதே கேம்பைத் தோட்டத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதியில் 
(11.01.2011) வைத்துள்ள பேணரை பாருங்கள்.


ஏன் மாற்று மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுகின்றீர்கள் என்று கேட்டால்.
 SDPI ஒரு மத சார்பற்ற அரசியல் கட்சி என்றும் ஏன் நபிகள் நாயகம்
 காலத்தில் யூதர்களுடன் நல்லுறவு பேணவில்லையா ? என்று வியாக்கியாணம் 
பேசுவார்கள்....

எல்லாம் உன்மை தான் ஆனால் நபி(ஸல்) அவர்கள் அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூத கிருஸ்த்துவ சகோதரர்கள் விழாகளுக்கு எல்லாம் வாழ்த்து கூறிக் கொண்டு இருக்கவில்லை ஆவர்களுக்கு மாற்றமாக செய்யும் படி இஸ்லாமிய சமுதாயத்திற்க்கு கட்டளையிட்டுள்ளார்கள். இந்த கட்டளைக்கு மாறாக இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த இவர்கள் நடந்து கொள்வதை பார்த்தால் நமது சமிதாயத்தை சார்ந்த இளைஞர்களை இவர்களை தவறான வழியில் குர்ஆன் மற்றும் நபி வழிக்கு மாற்றமான வழியில் கொண்டு செல்கின்றனர் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

 நடு நிலையாளர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் கொடி ஏற்றுவதற்க்கு ஒரு விழாவும் அதற்க்கு ஒரு பேணரும் தேவை தான ?? மக்களின் நன்கொடைகளை எப்படி எல்லாம் வீண்விரையம் செய்கிறார்கள் பாருங்கள்...

சகோதரர்களே நீங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒருவர் குர் ஆன் ஹதீஸுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் சற்று சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு உங்கள் தலைவரின் வார்த்தைகள் முக்கியமா இல்லை நமது இன்மை மற்றும் மறுமை தலைவர் நபி(ஸல்) அவர்களின் வழிமுறை முக்கியமா ??

இதை எல்லாம் பார்க்கும் போது இவர்களின் பாதை அறியாமை காலத்திற்க்கு பயணம் செய்து கொண்டு இறுக்கின்றதோ என்ற எண்ணம் குர் ஆன் ஹதீஸ் ஒளியில் நடக்கும் அனைத்து முஸ்லீம்கள் மத்தியிலும் எழுகிறது..........???

1 comments:

1. நபி (ஸல்) மசூராவில் கிருத்துவர்கலை அனுமதித்துள்ளார்கள்
2. 2. யூத பெண்மணி கொடுத்த விருந்தில் நபி (ஸல்) சாப்பிட்டார்கள்,
3. யூதனின் இறந்த உடலுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள்,
மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது தவறு என்றால், அவர்களின் பண்டிகைக்கு விடும் விடுமுறையை அனுபவிக்கலாமா? சம்பளம் வாங்கலாமா? விளக்கவும்

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More