Wednesday, 4 May 2011

அரசியலை நமதாக்குவோம்! முஸ்லிம் இளைஞர்களை நாசமாக்குவோம்

விரைவில் புகைப்படம்  


இஸ்லாமிய ஆட்சி அமைப்பதுதான் நமது லட்சியம் ,அதை அமல் படுத்த நாம் இன்று முதல் தயாராக வேண்டும் ,அதற்கு ஒரே வழி புனிதபோர்தான் என்ற வாசகங்களுடன் களமிறங்கி இஸ்லாமிய இளைஞர்களை வழிகேட்டிற்கு அழைத்து சென்ற ஒரு இயக்கம் ,இந்தியாவில் சில மாநிலங்களில் வேர் விட்டிருக்கிறது. 

அரசியலே ஹராம் தேர்தலும் ஹராம் தேர்தலில் போட்டியிட்டால் ஈமானை இழந்து விடுவர் ,எனவே நமது ஒரே தேவை இஸ்லாமிய ஆட்சி மட்டுமே என இவர்கள் அதிகதிகமான ரகசிய கூட்டங்களை போட்டு அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களின் இயக்கத்தில் இணைத்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் பாதை தான் சரி என நம்பி சில அப்பாவி இளைஞர்கள் இவர்களின் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள் அன்றைக்கு இவர்களை நம்பி வந்த இளைஞர்களின் நிலை என்ன ? 

அந்த இயக்கத்தின் இன்றைய நிலை என்ன ? என்று கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் இவர்கள் தடம் மாறி தடம் புரண்ட சரித்திரங்கள் சந்தி சிரிக்கும்.அரசியலே ஹராம் என்று சொல்லி வந்தவர்கள் , கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் கொள்கையை குழி தோண்டிபுதைக்க ஆரம்பித்தனர்

அதிலே இருந்த தலைவர்களுக்கு பதவி ஆசை தலையிலே ஏறி அமர , அதை அமல்படுத்தி மூன்றெழுத்து இயக்கம் , இனி நான்கெழுத்து அரசியல் இயக்கமாகவும் செயல்படும் என அறிவித்தனர் .

அதாவது மூன்றெழுத்து இயக்கம் ரகசிய கூட்டங்களை நடத்தி இஸ்லாமிய ஆட்சி அமைக்க போராடும் . அனால் அதே மக்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டுள்ள நான்கெழுத்து இயக்கம் ,யார் 2 சீட்டு தந்தாலும் அவர்களை ஆதரிப்போம் என கூக்குரலிடும் .அறைக்கு உள்ளே சென்று மூன்றெழுத்து இயக்கம் ஈமானை இழக்காதே கொள்கை மாறாதே இஸ்லாம் தான் நம் உயிர் மூச்சு என கதறக் கதற இளைஞர்களை பாடமெடுக்கும் , அறைக்கு வெளியே வந்து விநாயகர் சதுர்த்திக்கும் பொங்கலுக்கும் போஸ்டர் அடிக்கும் அந்த இயக்கம் இஸ்லாத்தை காக்க இந்த இயக்கம் இஸ்லாத்தை காவுகொடுக்க எவ்வளவு பெரிய மோசடி.

ஒரே மக்களை கொண்டுள்ள இவர்கள் ஒரு பக்கம் ஒன்றையும் மறுபக்கம் அதற்க்கு முரணாக ஒன்றையும் எப்படித்தான் போதிக்கிரார்களோ தெரிய வில்லை

அதுமட்டுமின்றி மாற்று மதத்தவரை விழாக்களுக்கு வாழ்த்து போஸ்டர் அடிப்பதன் மூலமும் ,தங்களது இயக்கத்துக்கு இசைப்பாடல்களை வைத்து ஊருக்கு ஊர் குழாய் கட்டி அதை ஒளிபரப்புவதன் மூலமும் இசையை சைத்தானின் ஆயுதம் என்பதை ஆமோதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழியை விட்டு இவர்கள் விலக விட்டார்கள் என்று தானே பொருள் 

இதை எல்லாம் விட படு மோசமான ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது அரசியலை நமதாக்குவோம் தேசத்தை பொதுவாக்குவோம் என்ற கோசத்துடன் களமிறங்கியுள்ள இவர்கள் கேரளாவில் செய்த ஒரு கேவலமான வேலை சமுதாய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அரசியலை நமதாக்க வேண்டுமானால் இஸ்லாமிய வேட்பாளர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும் அதன் மூலம் தான் நாம் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க முடியும் என்ற கோசத்துடன் முழங்கியவர்கள் சமீபத்தில் நடந்த கேரளா சட்டசபை தேர்தலில் தங்களின் போலி முகமுடியை கழற்றியதுதான் இப்போதிய ஹைலைட் .

கேரளா மாநிலத்திற்கு கடந்த 13 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆலுவா என்ற சட்டசபை தொகுதி இருக்கிறது 

கிருத்துவர்களின் வாக்குகள் அதிகமாக உள்ள இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள இளைஞர் காங்கிரசின் மாநில செயலாளராக 
இருக்கும் அன்வர் சாதத் என்பவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் யூசுப் என்பவரும் பகுஜன் சமாஜ் சார்பில் அப்துல் அஜீஸ் என்பவரும் போட்டியிட்டார்கள் இதை தவிர நிறைய முஸ்லிம்களும் சுயேட்சையாகப் போட்டியிட்டார்கள் 
ஆனால் இந்த நான்கு எழுத்து SPDI என்ன செய்தார்கள் தெரியுமா ? அங்கு நிற்கும் முஸ்லிம் வேட்பாளர் அனைவரும் அதிர்த்து எ  ராய் அ ராக்கல் என்ற கிறித்துவ வேட்பாளரை  SDPI. சார்பில் போட்டியிட வைத்து அவருக்காக கடுமையாக உழைத்தனர் .

                                         அனால் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு வீடாகச் சென்று முஸ்லிம் வேட்ப்பாளரை ஆதரியுங்கள் , இஸ்லாமிய ஆட்சி அமைக்க முஸ்லிம் வேட்பாளர்களை    மட்டும் ஆதரியுங்கள் என்று தெருத் தெருவாக முழங்கி விட்டு அதற்க்கு அப்படியே மாற்றமாக  கேரளாவில்  கிறித்துவ வேட்பாளரை ஆதரியுங்கள். 
                                       
நாம் கேட்பதெல்லாம் கிறித்துவ வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்தால் எப்படி இஸ்லாமிய ஆட்சி அமைக்க முடியும் ? வெற்றி பெற்ற பிறகு வேட்பாளரை முஸ்லிமாக மாற்றி விடுவார்களா அல்லது இவர்களை கிறித்துவர்களாக மாறி விடுவார்களா ? இதை விட கேவலம் வேற என்ன  வேண்டும் ? இப்படி இஸ்லாமிய இளைஞர்களை தங்களின் சுயநலத்திற்காக ஏமாற்றி மூளைச்சலவை செய்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் இவர்களை நம்பி இவர்களின் பின்னால் போகும் அப்பாவி இளைஞர்ளை அவர்களாகவே சிந்தித்தால் அன்றி அவர்களின் எதிர்காலத்தையும்   அவர்களின் ஈமானையும் யாராலும் காப்பாற்ற முடியாது ......

45:23(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
                                                                                                                                                                       
                                                                                                                                                                                     நன்றி உணர்வு 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More