Tuesday, 26 April 2011

*பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா எனும் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதல்

*பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா எனும் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி
தாக்குதல்*

ஜிஹாத் எனும் பெயரால் உணர்ச்சியூட்டி இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.

அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அடித்து உதைத்த பின்னர் இறந்துவிட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர். கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பெற்று வருகின்றனர். இறைவனின் கருணையால் ஜாஃபர், நாசர் என்ற அவர்கள் இருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் கொலைமுயற்சியில் ஈடுபட்ட ஜிஹாதிய தீவிரவாதிகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் கொள்கைவாதிகள் இப்போது தலைமறைவாகி விட்டனர். டி.என்.டி.ஜே நிர்வாகிகள் வெளியிட்ட அந்த நோட்டீஸில் ‘இவர்கள் முஸ்லிம் சகோதரன் என்று கூட பார்க்காமல் அடிப்பார்கள், தாக்குவார்கள். ஆனால் பாதிப்படைந்தவர் புகார் கொடுத்தால் அதை எதிர்கொள்ள திராணியின்றி தலைமறைவாகி விடுவர்’ என்று போடப்பட்டிருந்தது. அதை இவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். இவர்களின் இந்த கீழ்த்தரமான செயலினால் குமரி மாவட்ட முஸ்லிம்கள் ‘சொந்த சகோதரனை கொல்ல துடிக்கும் இவர்கள் ஜிஹாத் செய்யப் போகிறாhகளா? என எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா இயக்கத்தவர்களை நோக்கி காறி உமிழ்கின்றனர்.

இவர்கள் பிற மாவட்டங்களில் முஸ்லிம்களை கொல்வதும் அடித்து உதைப்பதும் அராஜக செயல்கள் செய்வதும் குமரி மாவட்ட முஸ்லிம்களுக்கு இதுநாள் வரை தெரியாமல் இருந்தது. இந்த சம்பவத்தின் மூலம் இவர்கள் முஸ்லிம்களுக்கு பகிரங்க எதிரிகள், இவர்கள் தீவிரவாதிகள் தான் என்பதை ஊருக்கு காண்பித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

1 comments:

வழக்கு பதிந்தீரா? ஆதாரம் உண்டா?

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More