கோழைத்தனம்
ஒரு காரியத்தில் ஈடுபடும் இவர்கள் இதன் பிறகுவரும் விளைவுகைள எதிர்கொள்ளும்திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால்இவர்களோ பிரச்சனை வரும் போது ஓடி ஒழியும்கோழைகளாகி விடுகின்றனர்.
ஒருவனை அடிக்க வேண்டியது. அவன் காவல்துறையிடம் சென்று புகார் கொடுத்து காவல் துறைவந்தால் ஊரைவிட்டும் ஓடிவிடுவது. காவல் துறையினர் பிரச்சனையில்சம்பந்தப்படாத முஸ்லிம்களை இழுத்துச் செல்வார்கள். அல்லது தரக்குறைவாகப்பேசுவார்கள். இப்படி இவர்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பலர் இருக்கின்றனர்.
இவர்கள் தான் சமுதாயப் பாதுகாவலர்களாம். இந்தக் கோழைகள் தங்களைஜிஹாதிகள் என்று வேறு வெட்கமில்லாம் கூறிக் கொள்கின்றனர்.
ஒரு பிரச்சனை ஏற்படும் போது சமுதாயத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பின்விளைவுகளை யோசித்து ஆக்கப்பூர்வமான முறையில் எதிர் கொள்ள வேண்டும்.ஆனால் இவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் பின்விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் பிரச்சனைகளை அனுகுகின்றனர்.
இவர்களின் அவசர புத்தியால் ஒரு சிறிய பிரச்சனை பூதாகரமாகி பெரும் கலவரமாகஉருவெடுக்கின்றது. இதன் மூலம் சமுதாயத்துக்கு ஏற்படும் இழப்புகளுக்கும்பாதிப்புகளுக்கும் இவர்களே காரணமாக இருக்கின்றனர்.
சத்தியவாதிகள் தங்களுக்கு எதிராகக் கூறப்படும் கருத்துக்களை வரவேற்றுஅவற்றுக்கு சரியான விளக்கத்தை அளிப்பார்கள். கருத்தை கருத்தால் வெல்வார்கள்.அசத்தியவாதிகள் தங்களது வழிகேட்டை நியாயப்படுத்த முடியாமல் விழிபிதுங்கிநிற்பார்கள். இவர்களைப் பற்றி பிறர் விமர்சனம் செய்யும் போது அதை எதிர்கொள்ளஅடிதடியில் இறங்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இவர்களுக்கு இல்லை. எனவேஅடிதடியில் இறங்குவார்கள். தோல்வியைத் தழுவார்கள்.
நமது மார்க்க அழைப்பாளர்கள் இவர்களின் சறுகல்களையும் வழிகேடுகளையும்மக்களுக்கு விளக்கும் போது இவர்கள் அந்த விமர்சனங்களுக்கு பதிலளிப்பதைவிட்டுவிட்டு TNTJ அழைப்பாளர்களை தாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்தத் தாக்குதலில் கூட இவர்கள் கோழைகள் என்பதையே வெளிப்படுத்துகின்றனர்.மார்க்க சம்பந்தமாக கேள்வி கேட்பதாக நமது அழைப்பாளரை அழைத்துச் சென்றுகூட்டாக பலர் சேர்ந்து கொண்டு தனி நபரை ஆயுதங்களால் தாக்குகிறார்கள் என்றால்இவர்களின் கோழைத் தனத்தை எப்படி வர்ணிப்பது என்று நமக்குத் தெரியவில்லை.
இவர்களின் தகிடுதத்தங்களைப் புரிந்து கொண்டு இவர்களின் இயக்கத்திலிருந்து சிலர்வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறியவர்களை இவர்கள் விட்டுவிடுவதில்லை. மீண்டும் தங்களது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று தொடர்ந்துதொல்லை கொடுக்கின்றனர். இதற்குக் கட்டுப்பட மறுப்பவரை ஆயுதங்களால் தாக்கிகொலை செய்வதாக மிரட்டுகின்றனர்.
ஜிஹாத் செய்ய வேண்டும் என்று பேசும் இந்த வாய் வீரர்கள் யாருடன்சண்டையிடுகிறார்கள் என்று பார்த்தால் முஸ்லிம்களைத் தான் இவர்கள்குறிவைக்கிறார்கள் என்பதை புரிய முடிகின்றது. தங்களுக்கு எதிராகச் செயல்படுவன்முஸ்லிமாக இருந்தால் அவனை அழிக்க தயாராக இருப்பார்கள். குஜராத்தில்முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது அங்கே போய் ஜிஹாத் செய்யமாட்டார்கள்.
இவர்களின் இதே சிந்தனையில் ஊறிப்போனவர்கள் இன்றைக்கு பாகிஸ்தானிலும்இன்னும் பிற நாடுகளிலும் தாங்கள் ஜிஹாத் செய்வதாக எண்ணிக் கொண்டுமுஸ்லிம்களையே கொன்று குவித்து வருகின்றனர்.
இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு மார்க்கத்தை இவர்கள் ஆதாரமாகக்காட்டுவதால் மார்க்கம் அவ்வாறு கூறவில்லை. இது பற்றி உண்மையை மக்களுக்குவிளக்க விவாதத்திற்கு வாருங்கள் என நாம் இவர்களுக்கு அழைப்பு விட்டால் அதிலும்தாங்கள் கோழைகள் என்பதை வெளிப்படுத்துகின்றனர்.
விவாதம் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகிறது என்றும் நபி (ஸல்) அவர்களேகாஃபிர்கள் விடுத்த விவாதத்துக்குப் பதிலளிக்கவில்லை என்றும் பொய் கூறிவிவாதத்துக்கு வர மறுக்கின்றனர்.
மனித குலத்துக்கு நேர்வழிகாட்டியாக வழங்கப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டைகொள்கையாகக் கொண்டவர்கள் மட்டுமே ஈருலகத்திலும் வெற்றி பெற முடியும்.
ஆனால் இவர்களோ இவ்விரண்டில் எந்த அம்சம் இயக்கத்தை வளர்க்க உதவுமோஅவற்றை மட்டும் பேசுவார்கள். உதாரணமாக ஜிஹாத் பைஅத் ஒற்றுமை கோஷங்கள்.இந்த ஓரிரு விஷயங்களைக் கூட இவர்கள் முறையாக சமுதாயத்துக்குக்கூறவில்லை. மாறாக இவற்றுக்குத் தவறான விளக்கங்களைக் கொடுத்துஇஸ்லாத்தை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.
குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டும் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய ஏராளமான கடமைகளைக் கற்றுத் தருகின்றது. இவற்றில் எந்தக்கடமையை ஆற்றினால் மக்களிடம் எதிர்ப்பு வருமோ ஆதவு கிடைக்காதோ அதுமாதிரியான விஷயங்களை இவர்கள் புறக்கணித்து விடுவார்கள்.
எனவே அறிவுச் சிந்தனை உள்ள யாரும் இந்த சந்தர்பப்பவாதிகளின் இயக்கத்தில்அங்கம் வகிக்க மாட்டார்கள். பலர் சிந்திக்கத் தொடங்கி இவர்களை விட்டு வெளியேறிதங்களை காத்துக் கொண்டுள்ளனர். எனவே சமுதாயத்துக்குப் பலனில்லாதசமூகத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய இந்த இயக்கத்தினரை இஸ்லாமிய சமூதாயம்முற்றிலுமாக புறக்கணிப்பது அவசியம்.
1 comments:
please produce FIR details
Post a Comment