FI மற்றும் SDPI இவர்கள் யார் ?? இவர்களின் கொள்கை என்ன ?? (தொடர் 07)
ஒற்றுமை கோஷம்:
நன்மையான விஷயத்தில் ஒன்றுபட வேண்டும்.பாவமான காரியங்களில் ஒன்றுபடக் கூடாது என்றுஇஸ்லாம் ஒற்றுமையை வேறுபடுத்துகின்றது.
சமுதாயத் தீமைகளை நாம் கண்டிக்கும் போதுஅத்தீமைகளை ஆதரிப்பவர்கள் நம்மை எதிர்ப்பார்கள்.தீமைகளை ஆதரிப்பவர்களும் அதை எதிர்ப்பவர்களும்தனித்தனியே பிரிவார்கள். இந்தப் பிரிவை இஸ்லாம்வரவேற்கின்றது. இதற்கு மாற்றமாக தீமையில் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பதைத்தான் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஆனால் இவர்கள் ஒற்றுமை விஷயத்தில் இஸ்லாம் கூறும் இந்த வித்தியாசத்தைக்கண்டுகொள்ளாமல் ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்று கூப்பாடுபோடுகின்றனர். இந்த வாதத்தின் மூலம் சமூகத் தீமைகள் அழியாமல் இருப்பதற்குமுக்கிய காரணமாக இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் இந்த கோஷத்தின் மூலம் மார்க்கத்திற்கு எதிராக செயல்பட்டதைத் தவிரஎந்த நன்மையையும் சமூகத்தில் ஏற்படுத்தவில்லை.
ஒற்றுமை கோஷம் என்பது கேட்பதற்கு நன்றாகவும், பாமர மக்களை விரைவாககவரக் கூடியதாகவும் இருப்பதால் இதையும் தங்களுடைய இயக்க வளர்ச்சிக்குச்சாதமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
வாயளவில் தான் இவர்கள் ஒற்றுமையைப் பேசி வருகிறார்கள். ஆனால்நடைமுறையில் இதற்கு மாற்றமாகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்கள்ஒற்றுமை கோஷத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மற்ற இயக்கத்தினர் ஒருவிஷயத்திற்காகப் போராட்டம் நடத்தும் போது அதில் தான் இவர்கள் பங்கெடுக்கவேண்டுமே தவிர இவர்கள் தனியாக தன் இயக்கத்தின் பெயரில் போராட்டம்நடத்துவது கூடாது.
தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பது? என்ற பிரச்சனை வரும் போது இவர்கள்தனியொரு முடிவை எடுப்பது கூடாது. மாறாக மற்ற அமைப்பினர் எந்த முடிவைஎடுக்கிறார்களோ அதற்குக் கட்டுப்பட்டு ஒற்றுமையாக நடக்க வேண்டும்.
மொத்தத்தில் இவர்கள் தனியே இயக்கம் நடத்துவது கூடாது. தன் இயக்கத்தைக்களைத்துவிட்டு மற்ற ஏதாவது ஒரு இயக்கத்தின் கீழ் செயல்பட வேண்டும்.
ஆனால் இவர்கள் அவ்வாறு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருஇயக்கத்தை ஆரம்பித்து சமுதாயத்தில் பல இயக்கங்களைத் தோற்றுவித்து சாதனைபடைத்து வருகின்றனர்.
பிரிவினை கூடாது என்று பேசிய இவர்கள் தற்போது இவர்களுக்குள் பிரச்சனைஏற்பட்டு இரு கூறாக பிரிந்து கிடக்கின்றனர். இந்த வாதத்தில் இவர்கள்உண்மையாளர்களாக இருந்தால் எந்த ஒரு நிலையிலும் இவர்கள் இயக்கத்தை விட்டுவெளியேறுவதும் பிறரை வெளியேற்றுவதும் கூடாது.
ஆனால் இதை இவர்கள் பேணவில்லை. இயக்கத்தை விட்டு வெளியேறியும் பிறரைவெளியேற்றியும் இருக்கின்றனர். எதைக் கூடாது என்று கூறினார்களோ அதைத்தாங்களே செய்து தங்களுக்குத் தானே முரண்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அனைத்து விஷயங்களிலும் TNTJ மற்ற இயக்கங்களை விட்டு வேறுபட்டு தனக்குரியதூய்மையுடன் தனியே நிற்கின்றது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிற இயக்கங்கள்செய்யக்கூடிய தவறுகளைத் தயவுதாட்சணையின்றி மக்களிடம் அம்பலப்படுத்திவருகின்றது.
எனவே இவர்களுக்கு TNTJ தான் சிம்ம சொப்பணமாக பெரும் தலைவலியாகஇருக்கின்றது.
TNTJ வை ஒழித்துவிட்டால் இவர்களின் திட்டங்கள் நிறைவேறிவிடும் என்றுநினைக்கின்றனர்.
சமீபத்தில் திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்குஎள்ளளவு கூட சம்பந்தம் இல்லை. இதை மக்களும் அசாங்கமும் தெளிவாகஉணர்ந்துள்ளது. இது தான் உண்மை என்பதை இவர்களும் அறிந்தே வைத்துள்ளனர்.
ஆனால் எப்படியாவது தவ்ஹீத் ஜமாஅத்தை மக்களை விட்டும் அந்நியப்படுத்தவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த இவர்கள் இந்தப் பிரச்சனை பெரியஆயுதமாகக் கருதினர். தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் துப்பாக்கி சூடு நடத்தினர் என்றுமக்கள் மத்தியில் கொண்டு சென்றால் தவ்ஹீத் ஜமாஅத் அழிந்துவிடும். இதன் பிறகுநாம் மக்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்தனர்.
தமிழகத்தில் பல பகுதிகளில் 19 அமைப்புகள் சேர்ந்து திருவிடைச்சேரி சம்பவத்தில்TNTJ க்குச் சம்பந்தம் இருப்பதாகவும் நம்மை அரசாங்கம் கைது செய்ய வேண்டும்எனவும் கோரி நீண்ட போஸ்டர்களை ஒட்டினர்.
இந்த 19 அமைப்புகளில் ஓரிரு அமைப்புகளைத் தவிர மீதமுள்ளவை அனைத்தும் இதுநாள் வரை மக்களுக்கு அறிமுகமில்லாத லைட்டர் பேடு அமைப்புகளாகும்.
இந்தக் காரியத்தை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இந்தியா இயக்கத்தினர் தான்முன் நின்று முழு முயற்சியுடன் செய்தனர். ஆனால் இறைவன் இவர்களுக்கு இந்தமுயற்சியில் படு தோல்வியையும் கேவலத்தையும் வழங்கினான். இந்த போஸ்டர்கள்மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஒற்றுமை கோஷம் போடும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் மட்டும் தான்ஒற்றுமையைக் கடைபிடிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
இவர்கள் ஒற்றுமையுடன் தான் இருக்கிறார்களா என்று இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியிடுகின்றோம்...
0 comments:
Post a Comment