தனி மனித வழிபாட்டிற்க்கு வழிவகுக்கும் தலைவர்களுக்கு சல்யூட்
(விடியோ ஆதாரங்களுடன்)
அன்பு சகோதர சகோதரிகளே நாம் PFI,CFI மற்றும் SDPIஇவர்கள் யார் ?? இவர்களின் கொள்கை என்ன ?? என்றதலைப்பில் தொடராக பார்த்து வருகின்றோம். நான்காவதுதொடரில் இவர்கள் செய்யும் கொடி வணக்கத்தைவிடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் விளக்கிஇருந்தோம்.
அந்த கொடி வணக்கத்திற்க்கு ஒரு படி மேல் சென்றுஇவர்கள் இவர்களின் தலைவர்களுக்கு வணக்கம்செலுத்துவதை இந்த தொடரில் ஆதாரங்களுடன்பார்ப்போம்.
முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் நல்ல குடும்ப தலைவராக மட்டும்இருக்காமல் உலக ஆன்மீக தலைவர்களுக்கு மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எல்லாம்ஒரு முன்மாதிரியான அரசியல் மற்றும் ஆன்மீக தலைமைதுவத்தை தமது வாழ்வில்செயலாக்கபடுத்தி சென்றுள்ளார்கள்.
(நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளை மறந்து அற்ப்ப தலைவர்களுக்கு சல்யூட் அடிக்கும் தனிமனித வழிபாடு)
ஒரு தலைவன் தொண்டனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஒரு தொண்டன்தலைவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு முன்மாதிரி வாழ்க்கையைவாழ்ந்து காட்டி சென்றுள்ளனர்.
உதாரணமாக ஒரு சபையில் முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் வந்தால் தனக்கு மரியாதைசெலுத்தும் விதமாக எழுந்து நிற்க்க வேண்டாம் என்று ஸஹாபாக்குளுக்குகட்டளையிடுள்ளானர் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இந்த கட்டளைக்கு நம்மில்யாருக்கும் மாற்று கருத்து என்பது இல்லை.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை ஏனைய மக்கள்அனைவரையும் விட நான் நேசத்திற்க்குறியவன் ஆகாத வரை அவர் உண்மையானஇறை நம்பிக்கைக்கு உரியவர் ஆக மாட்டார்.
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி 15
இந்த ஹதீஸின் மூலம் நமக்கு இந்த உலகத்தில் நமது தந்தை தாய் உறவினர்கள் நன்பர்கள்சமுதாய தலைவர்கள் மற்றும் அனைவரையும் விட நேசத்திற்க்குறியவர் இன்மை மற்றும்மறுமை தலைவரான முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்கின்றோம்.
அப்படிபட்ட தலைவர் முஹ்மத் நபி(ஸல்) அவர்களுக்கே எழுந்து நின்று மரியாதை செலுத்தகூடாது என்று இருக்க இந்த PFI,CFI மற்றும் SDPI ஐ சார்ந்த சகோதரர்கள் தங்களின் இயக்கதலைவர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இவை அனைத்தும் இஸ்லாத்திற்க்கு முரணான செயல்கள் ஆகும்.
இதன் மூலம் இஸ்லாம் கூறும் ஏகத்துவத்தை குழி தோண்டி புதைத்து தனி மனித வழிபாட்டின்பக்கம் மக்களை அழைத்து சென்று கொண்டு இருக்கின்றனர்.
(தனி மனித வழிபாட்டின் உச்ச கட்டமான தலைவர்களுக்கு சல்யூட் அடிக்கும் விடியோ காட்சி)
இதை அவர்கள் சிந்திப்பதில்லை...
இன்ஷா அல்லாஹ் இந்த ஆதாரங்களை கொண்டு இவர்கள் இதை சிந்தித்து தங்களின் வாழ்க்கையை இஸ்லாத்தின் பக்கம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஏகத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் எந்த இயக்கமாவது தங்களின் தலைவர்களுக்கு மரியாதை செய்ய கூறினால் இளைஞர்கள் அது போண்ற இயக்கங்களை புரக்கணித்து இஸ்லாத்தின் ஆணி வேறான ஏகத்துவத்தை காக்க அல்லாஹ் அருள் புரிவாணாக.
1 comments:
பாத்திமா (ரலி) அவர்கள் வரும்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து வரவேற்பதும், நபி (ஸல்) வரும்போது பாத்திமா (ரலி) எழுந்து வரவேற்பதும் வரலாறில் உள்ளது, யூத பிணத்துக்கு எழுந்து மரியாதை செலுத்தியது உண்டு, பெற்றோர் முன் அமரவேண்டாம் என்றால் அவர்கள் வரும்போது எழத்தானே வேண்டும், இந்த மார்க்க அறிவு கூட இல்லாத ??? , மேலும் கொடிக்காக தன 2 கையையும் போர்க்களத்தில் சஹாபியிம் இஸ்லாமிய வரலாறில் உண்டு , இவ்வளவு பேசும் தவ்ஹீத் வாதிகள் காவல் துறையிலோ ராணுவத்திலோ வேலை கிடைத்தால் salute அடிப்பார்கள் என்பது உறுதி
Post a Comment