முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கு உலகில் இரண்டு பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் நேரடியாக மோதுபவர்கள். உதாரணமாக யூதர்கள், மேற்கத்திய நாடுகளின் அதிகாரம் படைத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்பினர். இவர்களை மிக சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள இயலும்.
இரண்டாவது பிரிவினர் தங்களையும் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களை கருவறுக்கும் செயல்களில் ஈடுபவர்கள். இவர்கள் முஸ்லிம்களை போன்று தங்களை வெளியே காண்பித்துக் கொள்வதால் இவர்களை அடையாளம் காண்பது மிக கடினமாகும். உதாரணமாக எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்பினரை குறிப்பிடலாம். விடியல், மனித நீதி பாசறை, எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ என தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டே செல்வார்கள். பள்ளிப்பருவத்திலுள்ள இளைஞர்களிடத்தில் உணர்ச்சியை தூண்டி வசப்படுத்திக் கொள்வார்கள். பின்னர் முஸ்லிம்களை அழிப்பதற்காக அவர்களை பயன்படுத்துவார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தை கப்பாற்றுவதற்காக அவர்களின் வழிமுறைகளில் சிலவற்றை இங்கு தருகின்றோம்.
- இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு தடை விதிப்பார்கள். அதாவது தவ்ஹீதை சொல்லும் இயக்கங்கள் அழைப்பு பணிக்காக போஸ்டர் ஒட்டும் பொழுது எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினர் இரவோடு இரவாக அதை கிழித்து விடுவார்கள்.
- அதன் மீது தங்களுடைய போஸ்டர்களை ஒட்டுவார்கள்.
- பிற இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் பொதுக்கூட்ட பாதையில் தங்களது இயக்க போஸ்டர்களை ஒட்டி தங்களையும் ஒரு இஸ்லாமிய அமைப்பாக காண்பித்துக் கொள்வார்கள்.
- தவ்ஹீத் முறையில் அதாவது நபிவழியில் தொழுகை நடக்கும் பள்ளிவாசலில் தொழும்போது நாங்களும் தவ்ஹீத்வாதிகள் என்று சொல்வார்கள்.
- சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் கப்ரு வணங்கிகள் தொழுகை நடத்தும் பள்ளிகளில் தொழும் போது தங்களையும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்வார்கள்.
- கடந்த வருட பெருநாள் தொழுகை தமிழகத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட போது சுன்னத் வல் ஜமாஅத், ஜாக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தங்களது கொள்கையின் படி ஒரு நாள் மட்டுமே பெருநாள் கொண்டாடினர். ஆனால் இந்த கொள்கையற்ற கூட்டத்தினரான எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ கூட்டத்தினர் ஒவ்வொரு ஊரிலும் மூன்று நாட்களுமே பெருநாள் கொண்டாடினர். அதாவது ஒவ்வொரு அமைப்பினரிடமும் நாங்கள் உங்களோடு தான் இருக்கிறோம் என்பது போல் காட்டிக் கொள்வதற்காக இதை அவர்கள் கடைபிடித்து வருகின்றனர். மதீனாவில் வாழ்ந்த முனாஃபிக்குகள் செய்த செயலையே இவர்களும் செய்கிறார்கள்.
(தொடரும்)
1 comments:
who is jewish (zionist) u r comparing pfi.but u have no baby sence also. poster matter ur comparing madena shahapa matter. where aur father make salah that majjith if pfi make sallah that matter is munafic matter.what a curuvel mind who make sharpness 2 u,they shoul response 2 allahstop ur nonsence writing.
Post a Comment