Tuesday, 22 November 2011

போலி ஒற்றுமையும் முறிந்து போன கயிறும் ??



அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.  (அல்குர்ஆன் 3-103)


மேற்க்கண்ட வசனத்தை சில மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர். "ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நீண்ட நாட்களாக மேற்க்கண்ட வசனத்தை தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டுவந்தது. இதற்காக தமிழகத்தில் பல இயக்கங்கள் (போலி) ஒற்றுமையாக நாங்கள் இருக்கிறோம் என்றும் ஆனால் இந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் தான் இந்த ஒற்றுமையை சீர்குழைப்பதாகவும் பேசிவந்தவர்கள்.

திருவாரூர் மாவட்டம், திருவிடைசேரி என்ற ஊரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிய பிறகும் அதை அலட்சியம் செய்தவர்கள், இவர்கள் போலி ஒற்றுமைவாதிகள்  என்பதை நாம் அன்று கூறியதையும் விமர்சித்தவர்கள், தமிழகத்தின் 12 அமைப்புகள், இயங்கள்கள், கழகத்தின் பெயரில் TNTJ-விற்கு எதிராக கண்டன போஸ்டர்கள் அடித்தவர்கள்.... அன்று

ஆனால் இன்று....


திண்டுக்கலில் ம.ம.க குண்டர்கள் தாக்குதல் - எஸ்.டி.பி.ஐ யினர் 3 பேர் படுகாயம்

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரைச் சேர்ந்த 3 நபர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி பிரச்சாரம் முடிவடைந்த நாளிலிருந்து வாக்குப்பதிவு நடைபெறு நாள் வரை யாரும் எந்தவிதமான பிரச்சாரத்திலும் ஈடுபடக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால் இந்த விதிமுறையை மீறி வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் (வார்டு எண் 40 மற்றும் 41) இருந்து கொண்டு வாக்களிக்க வருபவர்களிடம் தங்கள் கட்சிக்கு ஓட்டுபோடுமாறு ம.ம.கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.டி..பி.ஐ கட்சியின் ஷர்ஃபுதீன் அவர்களை நோக்கி எவ்வளவோ எடுத்துக்கூறியும் ம.ம.கவினர் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர்.

வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியது. இறுதியில் ம.ம.கட்சியைச்சேர்ந்த 60 நபர்கள் ஒன்று கூடி ஷர்ஃபுதீனை இரும்பு கம்பிகளைக்கொண்டு கடுமையாக தாக்கினர்.இதனை தடுக்க வந்த ஹுஸைன் மெளலானா மற்றும் இபுராஹீமும் தாக்குதலுக்கு இலக்காணார்கள்.
தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட மூவரும் உடனடியாக திண்டுக்கள் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஷர்ஃபூதீன் படுகாயமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களை மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
(நன்றி நெல்லைPFI)



நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல் வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

"அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடியுங்கள்'' என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக் குர்ஆன், நபி வழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.

"குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்'' என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.

அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.


எனவே இனிமேலாவது இவர்கள் ஒற்றுமை எனும் அல்லாஹ்வுடைய கயிற்றை குர்ஆன், ஹதீஸ் பின்பற்றுவதில் தான் உள்ளது என்பதை உணர்ந்தால் சரி.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More