Monday, 22 August 2011

பாளையில் நடந்தது என்ன ?விசத்தை பரப்பும் கள்ள போரளிகளுக்கு பதில்


ஒவ்வெரு ஊரிலும் தவ்ஹீத் கொள்கை எதிராகவும் தங்கள் புத்தகங்களை விற்பதற்கு (இயக்கத்திற்கு) ஆள் பிடித்து அவர்களை வைத்து தங்கள் காரியங்களை நிறைவற்றுவது இந்த காரியதறிசிகளுக்கு கை வந்த கலை இத்த கள்ள போரளிகளுக்கு 
ஆம்..இவர்களின் நீண்ட நாட்களின் நோக்கமான திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டையில் உள்ள மிலி;ட்டரி லைன் பள்ளிவாசலில் இயங்கும் முஸ்லீம் மாணவர் விடுதியில் தங்கள் புத்தகங்களை விற்பதற்கு ஆள் சேர்ப்பு ஆனால் கடந்த ஜந்து வருடமாக தவ்ஹீத் சகோதரர்கள் இந்த பள்ளியில் தனி ஜமாஅத் வைத்து தொழுது வந்தனர் இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் எந்த விதமான பிரச்சணைகள் இல்லாமல் சுமுகமாக சென்று கொண்டிருந்தது மேலும் தவ்ஹீத் பிரச்சாரத்தால் இந்த பள்ளியில் நடந்து வந்த மீலாது விழா,பாத்தியா, கந்தூரி திருவிழா, போன்ற பித்அத்கள் நிறுதப்பட்டிருந்தது. ஒரு ஊரில் தவ்ஹீத் வளர்ந்தால் தான் இந்த சுளுளு ;ஜ முன்மாதிரியாக கொண்டு இயஙகும் ஓற்றமை கோஸம் போடும் இந்த காவிகளுக்கு பிடிக்காதல்லவா அதான் 12.08.2011 அன்று வெள்ளிக்கிழமை ஜீம்ஆ பயானிற்கு அந்த பள்ளிவாசலின் செயலாரிடம் நாங்கள் தேனியில் அறிவகம் என்று மாற்றுமததில் இருந்து இஸ்லாத்திற்கு வருபவர்களுக்காக ஓன்று வைத்திருக்கிறோம்? அதற்கு நிதி உதவி திரட்டுவதற்காக இந்த ஜீம்ஆ உரையை எங்களுக்கு தரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

 நமது சகோதர்கள் மருத்துவமனையில் 




இவர்களின் உள்ளடி வேலையை பற்றி தெரியாத அந்த பள்ளிவாசலின் செயலார் மற்ற நிர்வாகிகளின் அனுமதியில்லாமல் இவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார் தங்களின் காரியத்தை; சாதித்த சந்தத்தோடு சாகுல் ஹமீது sdpi யில் உள்ள இவர் ஜீம்ஆ உறையில் அறிவகத்தை லோசாக உரசிவிட்டு முழுக்க முழுக்க ஆகஸ்டு 15 ற்கு ஆள் சோர்க்கும் உறையை நிகழ்தினார் இதனால் முகம் கருத்த மிலி;ட்டரி லைன் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜீம்ஆவின் இடையில் பேசகூடாது என்று கடைசிவரை மவுனம் காத்தனர் ஜீம்ஆ  முடிந்த பின்னர்  ஜீம்ஆ உறை நிகழ்திய சாகுல் ஹமீதிடம் நீங்கள் அறிவகத்தை பற்றி  பேசுவேன் என்று கூறி போலீஸ் தடைசெஞ்ச ஆகஸ்டு 15 ஜ பற்றி ஏன் பேசுனீர்கள் பிரச்சனைகளை கிளப்பி விட்டுவிட்டீர்களே என்று கூறியிருக்கார்கள். 
இவர்கள் ஜீம்ஆ பயான் இப்படி பேசியிருக்கார்கள் என்பதினை அறிந்த பாளையங்கோட்டை நகர தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அங்கு வந்தனர் பள்ளிவாசல் தலைவரிடம் ஏன் இவர்களை ஜீம்ஆ பயானிற்கு ஏற்றினிர்கள் என்று கேட்டார்கள் (பின்னர் தான் தெரிந்தது பள்ளிவாசல் தலைவரின் அனுமதி இல்லாமால் செயலாலரை அறிவகம் பெயரால்; ஏமாற்றி ஜீம்ஆ பயாணிற்கு கொல்லை புறமாக அறியனையில் ஏறிய இந்த அற்ப அரசியல் வாதிகள்) ஏற்கனவே தனக்கு தெரியாமல் பயானிற்கு sdpi ஜ சேர்ந்தவரை ஜீம்ஆ பயானிற்கு ஏற்றிய கோபத்தில் இருந்த பள்ளிவாசலின் தலைவர் உங்களிடம் சொல்ல தேவையில்லை உங்களை ஊர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் அந்த வெறுப்பை காட்ட அந்த இடத்தில் சல சலப்பு ஏற்பட்டது அப்போது அங்கு பள்ளிவாசலில் படுத்திருந்த ளுனுPஐ ஜ சேர்ந்த சிலர் பொதமக்கள் போன்று தங்களை காண்பித்து மேலும் கங்கை அள்ளிப்போட்டனர்.
பின்னர் காவல் துறையிடம் இதுபற்றிய முதல் புகார்மனு 12..08.2011 அன்று பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்  பள்ளிவாசல் செயலாளரை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டனர் உடனே வராமல் sdpi  யினரை தொடர்பு கொண்டு உங்களால்; தானே பிரச்சனை இப்போழுது என்ன செய்ய என்று கேட்க ஏற்கனவே பல ஊரில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கேதிராக  களமிறங்கி வேலைபார்த்த பயிற்சியை  இங்கே பயன்படுத்தினர். தங்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு திசை திரும்பிவிட்டது என்ற உற்சாகத்தில் பிறகு வருகிறோம் என்று காவல் துறையினரிடம் சொல்ல சொன்னனர்.
அன்று எந்த முடிவும் ஏற்படவல்லை மறுநாள் எப்போதும்; போல பள்ளிவாசலுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் தொழுகைக்காகச் சென்றனர் அப்போது தான் பிரச்சணை பெரிதாகிறது தொழுகும் போது இடஞ்சல் செய்தனர் தொழுது முடித்து வெளியே வரும்போழுது மற்றோரு ஆஆஆமு  அமைப்பை? சேர்ந்த மாநில கரசேவையின் செய்தி தொடர்பாளர் ரீபாய் என்பவன் இவன் மழைக்கு கூட பள்ளிவசல் பக்கம் செல்லாதவன் (சீகரட்,தண்ணி,பெண்) என்று எல்லா கேட்ட பலக்கத்தையும் உட்டுவைக்காதவன் இவன் பள்ளிவாசலில் தொழுதுட்டு வந்த நம் தவ்ஹீத் சகோதரரின் நெஞ்சைப்பிடித்து தள்ளுகிறான் அங்கே தள்ளு முள்ளு ஏற்படுகிறது அப்போழுது பத்துபேர் கம்பியையும்,செருப்பையும் துக்கி தவ்ஹீத் நிர்வாகிகளை தாக்குகறார்கள் இதானால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த ஜந்து பேர் அனுமத்க்கப்பட்டனர்.
இதனிடையில் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு தங்களை தற்காத்து கொள்வதற்காக  காவல் துறைக்கு செல்கிறார்கள் இப்பொழுது இறந்தவன் எல்லாம் எழுந்திரிச்சி வருகிறான் சுன்னத் ஜமாஅத், தமுமுக,MMMK ,MNP,SDPI  என்று எல்லாறும் காவல் நிலையத்திற்கு போக எல்லாரும் இந்த ஊர் மக்கள் என்று வழக்கம் போல் மெஜாரிட்டியை பார்த்து காவல் துறை அவர்களுக்கு சாதகமாகிறது.
மேலும் 
பின்னர் உண்மை நிலையை உணர்ந்த காவல்துறையினர் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர்.
எங்களை நோன்பு நேரத்தில் நம்மைசெயவிடமலும் , பள்ளிவாசலில் தொழுவதை தடுப்பதற்கும், இந்த உண்மை விளக்கத்தை எழுத நேரத்தை செலவிடவைத்ததற்கும் கை கோர்த்த உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் மறுமையில் தீர்பளிக்க அல்லாஹ் போதுமானவன.; 

(குறிப்பு: இந்த SDPI  சேர்தவர்கள் அவர்களின் BLOGSPOT ல் இந்த சம்பவம் பற்றி பொய்யுறைக்கும் போது வயதானவர்களை தாக்கியதாகவும் அவர்கள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர் உண்மையில் அப்படி அவர்களை தாக்கி அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்தார்கள் என்றால் அதற்கு ஆதாரத்தை பகிங்கரமாக வெளியிடட்டும். இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இது மட்டுமே போதும்

இவர்கள் தான் அபுஜஹீலின் வாரிசுகாளா ?



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.
நூல்: முஸ்லிம் 1619


2.12 கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2494


Sunday, 7 August 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 06) ஜிஹாதும், கிதாலும்.


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 06)
ஜிஹாதும், கிதாலும்.


(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasmin M.I.Sc )


"ஜிஹாத்' என்றாலே முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்கள் அழிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தை என்ற தவறான கருத்து இன்று உலகம் முழுவதும் நிலவி வருகின்றது.  இன்னும் சொல்லப் போனால் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வோர் சிலர் கூட இந்தக் கருத்தைத் தான் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய தவறான கருத்து நிலவுவதற்கு மிக முக்கிய காரணம் மேற்கத்திய ஏதேச்சதிகார சக்திகளின் ஊதுகுழலாய் விளங்கக் கூடிய தகவல் தொடர்பு சாதனங்களும், முஸ்லிம்களிடம் ஜிஹாதைப் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமையும் தான்.  இந்தத் தவறான கருத்துக்கு சாவு மணி அடிக்கின்ற வகையில் திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் அமைந்துள்ளன.

அல்லாஹ்வின் பாதையில் - அவனது திருப் பொருத்தத்தை நாடி செய்யக் கூடிய பல்வேறு நற்செயல்களும், பொதுவாக "ஜிஹாத்' என்ற வார்த்தை வட்டத்திற்குள் வந்தாலும் அந்தந்த செயல்களைக் குறிக்கக் கூடிய நேரடி வார்த்தைகளும் உள்ளன என்று நாம் பார்த்தோம்.  (உதாரணம் : அழைப்புப் பணி (தஃவா), நீதிக்குக் குரல் கொடுப்பது போன்றவை)  

அதே போல் நியாயமான காரணங்களுக்காக அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இட்ட கட்டளையை ஏற்று, ஆயுதமேந்திப் போரிடுவதும், போர்க்களங்களில் எதிரிகளைச் சந்திக்கும் போது அவர்களை வெட்டி வீழ்த்துவதும் அல்லது எதிரிகளால் வெட்டப்படுவதும் "ஜிஹாத்' என்று பொதுவாக அழைக்கப் பட்டாலும் அச்செயல்களுக்குரிய நேரடி வார்த்தை "கிதால்' என்பதாகும்.  அதற்கான சான்றுகளை திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் காண்போம்.

ஆயுதமேந்திப் போரிடுவதற்கும், போரில் எதிரிகளை வெட்டுவதற்கும், அல்லது எதிரிகளால் வெட்டப்படுவதற்கும், திருக்குர்ஆனில் "கிதால்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.  "கிதால்' என்ற வார்த்தையை உள்ளடக்கிய ஏராளமான வசனங்கள் உள்ளன.  உதாரணத்திற்கு சில வசனங்களைக் காண்போம்.

ஆயுதமேந்திப் போரிடுதல்.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.  (அல்குர்ஆன் 2:190)

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்''என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப் போர்கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?'' என்று அவர் கேட்டார். "எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில்போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அல்லாஹ் அநீதி இழைத்தோரை அறிந்தவன்.  (அல்குர்ஆன் 2:246)

இரண்டு அணியினர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில் உங்களுக்குச் சான்று உள்ளது. ஓர் அணியினர் அல்லாஹ்வின் பாதையில்போரிட்டனர். (ஏக இறைவனை) மறுப்போராக மற்றொரு அணியினர் இருந்தனர். தம்மைப் போல் இரு மடங்காக கண்களால் அவர்களைக் கண்டனர். தான் நாடியோரைத் தன் உதவியின் மூலம் அல்லாஹ் வலுப்படுத்துகிறான். அறிவுடையோருக்கு இதில் பாடம் உள்ளது.  (அல்குர்ஆன் 3:13)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர்செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.  அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். அவர்களை இழிவு படுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான். நம்பிக்கை கொண்ட சமுதாயத்தின் உள்ளங்களுக்கு அவன் ஆறுதல் அளிப்பான். (அல்குர்ஆன் 9:13, 14)

நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர்.(ஏக இறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில்போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப்போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.  (அல்குர்ஆன் 4:76)

"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப் பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.  (அல்குர்ஆன் 22:39)

(ஏக இறைவனை) மறுத்தோர் உங்களுடன் போருக்கு வந்தால், புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் பொறுப்பாளனையோ உதவி செய்பவனையோ காண மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 48:22)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.  அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 60:9)

மேற்கண்ட வசனங்களில் ஆயுதமேந்திப் போரிடுவதற்கு "கிதால்' (சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளவைகள்) என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளதால், ஆயுதமேந்திப் போரிடுவதற்கான நேரடி அரபுச் சொல் "கிதால்' என்பதைத் தெளிவாக விளங்க முடிகின்றது.

போரில் கொல்லுதல், கொல்லப்படுதல்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 2:154)

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக்கொல்லுங்கள்!  (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.  (அல்குர்ஆன் 2:191)

நம்பிக்கை கொண்டோரே! பயணம் மேற்கொண்ட, அல்லது போருக்குச் சென்ற தம் சகோதரர்களைக் குறித்து "அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். கொல்லப்பட்டிருக்கவும்மாட்டார்கள்'' என்று கூறிய (ஏக இறைவனை) மறுத்தோரைப் போல் நீங்கள் ஆகி விடாதீர்கள்! அவர்களின் உள்ளங்களில் கவலையை ஏற்படுத்தவே அல்லாஹ் இதைச் செய்தான். அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.  அல்லாஹ்வின் பாதையில் நீங்கள்கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது.  நீங்கள் இறந்தாலோ, கொல்லப் பட்டாலோ அல்லாஹ்விடமே ஒன்று திரட்டப்படுவீர்கள்.  (அல்குர்ஆன் 3:156-158)

"அவர்கள் நமக்குக் கட்டுப்பட்டு இருந்தால் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள்'' என்று போருக்குச் செல்லாதோர், தம் சகோதரர்கள் பற்றி கூறினர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!'' என்று கூறுவீராக!  அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.  (அல்குர்ஆன் 3:168, 169)

இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.  (அல்குர்ஆன் 4:74)

அவர்கள் உங்களிடமும் அபயம் பெற்று, தமது சமுதாயத்தினரிடமும் அபயம் பெறுவதை விரும்புகின்றனர். கலகம் செய்ய அவர்கள் அழைக்கப்படும் போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் உங்களை விட்டு விலகிக் கொள்ளாமலும், உங்களிடம் சமாதானத்துக்கு வராமலும் இருந்தால் மேலும் தமது கைகளைக் கட்டுக்குள் வைக்கவில்லையானால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்டவுடன் கொல்லுங்கள்! அவர்களுக்கு எதிராக (போரிட) தெளிவான சான்றை ஏற்படுத்தியுள்ளோம்.  (அல்குர்ஆன் 4:91)

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான்.  அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 4:93)

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத், இஞ்சீல், மற்றும் குர்ஆனில் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:111)

அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்படுவோர்,அல்லது மரணிப்போருக்கு அல்லாஹ் அழகிய உணவை வழங்குவான். அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்.   (அல்குர்ஆன் 22:58)

அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.  (அல்குர்ஆன் 33:61)

மேற்கண்ட வசனங்களில் கொலை, கொல்லுதல், கொல்லப்படுதல் என்ற அர்த்தத்தில் "கத்ல்' (சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளவைகள்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வசனங்களிலிருந்து ஆயுதமேந்திப் போரிடுவதற்கும், அந்தப் போரின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் நேரடி வார்த்தை "கத்ல்' என்பதையும், இந்த "கத்ல்' என்ற செயல் "ஜிஹாத்' என்னும் பரந்து விரிந்த சொல்-ல் அடக்கம் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.

"ஜிஹாத்' என்பதன் முழுமையான அர்த்தத்தை விளங்காதவர்கள், அதன் ஏனைய அம்சங்களை விட்டு விட்டு, ஜிஹாதை குறுகிய வட்டத்திற்குள் அடைத்து, ஆயுதமேந்திப் போரிடுவது மட்டும் தான் "ஜிஹாத்' என்ற தவறான சித்திரத்தை வடித்துள்ளனர்.  ஆயுதமேந்திப் போரிடுவதை மட்டும் குறிப்பிடக் கூடியவர்கள் - அத்தகைய போருக்கு அழைப்பவர்கள், "ஜிஹாத்' என்ற வார்த்தைக்குப் பதிலாக "கிதால்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.  இதனால் ஜிஹாத் என்பதற்குத் தவறான வர்ணம் பூசப்படுவதைத் தடுக்க முடியும்.

இதுவரை ஜிஹாத் என்றால் என்ன? என்பதை விரிவாகப் பார்த்தோம்.  ஜிஹாதின் முக்கிய ஓர் அம்சமான ஆயுதமேந்திப் போரிடுதல் பற்றி இனி விரிவாகப் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 05) செல்வத்தால் போரிடுதல்.


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 05)
செல்வத்தால் போரிடுதல்.


(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது, மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவது, நீதிக்காக (நாவினால்) குரல் கொடுப்பது ஆகிய நற்செயல்கள் அனைத்தும் "ஜிஹாத்' என்பதை ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களின் மூலம் சென்ற தொடரில் நாம் பார்த்தோம்.

இவை அல்லாமல் நேரடியாகக் களப் போரில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வதும், அந்த யுத்தத்திற்குத் தேவையான தளவாடங்களுக்காக தங்களிடமுள்ள செல்வங்களைச் செலவிடுவதும் "ஜிஹாத்' (அறப்போர்) தான் என்பதை விளக்கும் ஒரு சில வசனங்களை உதாரணத்திற்குக் காண்போம்.

நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்கள் மற்றும் உயிர்களால் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும் அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 4:95)

(படைபலம்) குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்!  நீங்கள் அறிந்தால் இது உங்களுக்குச் சிறந்தது.  (அல்குர்ஆன் 9:41)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போருக்குச் செல்லாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்க மாட்டார்கள். (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன்.  (அல்குர்ஆன் 9:44)

அல்லாஹ்வின் தூதர் (முஹம்மத், தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். "கோடையில் புறப்படாதீர்கள்!'' எனவும் அவர்கள் கூறுகின்றனர். "நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது'' என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?  (அல்குர்ஆன்9:81)

இத்தூதரும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுகின்றனர். அவர்களுக்கே நன்மைகள் உண்டு. அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்9:88)

நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்ப வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அறப்போர் புரிய வேண்டும்; நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது.  (அல்குர்ஆன் 61:11)

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்.  (அல்குர்ஆன் 49:15)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தும், பொருட்களைக் கொண்டும், உயிர்களைக் கொண்டும் இறைவழியில் போரிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு, அவ்வாறு போரிடுவது "ஜிஹாத்' என்றும் கூறுகின்றன.

இந்த வசனங்களில் கூறப்படும் பொருட்கள் - செல்வங்கள் என்பது, போர்க்களத்தின் தேவைக்காக - அதாவது வாகனங்கள், போர்க்கருவிகள், உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக செலவாகும் தொகையைக் குறிக்கக் கூடியது.

ஒரு நாட்டின் அரசாங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட முறையான இராணுவம், இராணுவப் பயிற்சி மையம், இராணுவத் தளவாடங்கள், பாதுகாப்பு அமைச்சகம், இராணுவம் அல்லது பாதுகாப்புத் துறைக்கான முறையான கட்டமைப்பு, அதற்கான செலவினங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும் முறை ஆகியவை இப்போது உள்ளது போல் அக்காலத்தில் கிடையாது.

பெருமானார் (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று, ஜிஹாத் (யுத்தம்) செய்ய முன் வந்தவர்கள் மூன்று வகையினராக இருந்தனர்.  முதல் வகையினர் - யுத்தக் களம் சென்று நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்குத் தேவையான உடல் வலிமையுடன் குதிரைகள், ஒட்டகம், போர்க் கருவிகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான உணவு போன்ற தேவைகளை சுயமாகப் பெற்றிருந்தவர்கள் அல்லது அவற்றைப் பெறுவதற்கான பொருளாதார வசதியைப் பெற்றிருந்தவர்கள்.  இரண்டாவது வகையினர் - போரில் ஈடுபடுவதற்கான உடல் வ-மையை மட்டும் பெற்றிருந்தவர்கள்.

மூன்றாவது வகையினர் - பொருளாதார வசதியை மட்டும் பெற்று, போரில் நேரடியாக ஈடுபடுவதற்கான ஆற்றலைப் பெறாதவர்கள்.  இந்த வகையினர் தங்களிடமிருந்த பொருளாதாரத்தைக் கொண்டு, இரண்டாவது வகையினருக்குத் தேவையான போர் செலவினங்களைச் செய்தனர்.  இந்த முறையில் தான் அக்கால முஸ்லிம்கள் போர் முனைகளைச் சந்தித்தனர்.

இதை ஆர்வமூட்டுகின்ற வகையில் தான் மேற்கண்ட வசனங்கள் அனைத்தும், "பொருட்களாலும், உயிர்களாலும், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (யுத்தம்) செய்யுங்கள்'' என்று இரண்டு வகை நற்செயல்களையும் ஒன்று சேர்த்து, அந்த இரு வழிகளுமே "ஜிஹாத்' தான் என்று கூறுகின்றன.

நாம் இது வரை பார்த்த திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆயுதமேந்திப் போரிட்டு எதிரிகளை வெட்டுவது, கொல்வது போன்ற செயல்கள் மட்டுமே ஜிஹாத் அல்ல என்பதையும், மாறாக அது மேலும் பல நற்செயல்களைக் குறிக்கக் கூடிய ஒரு பொதுவான சொல் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.    

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 04) நீதிக்குக் குரல் கொடுப்போம்.


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 04)
நீதிக்குக் குரல் கொடுப்போம்.

(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

"ஜிஹாத்”என்பதற்கு உழைத்தல்,பாடுபடுதல்,வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி ஆகிய அர்த்தங்கள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் சான்றுகளுடன் இதுவரை பார்த்தோம். 

மேலும் என்னென்ன நற்செயல்களுக்கு "ஜிஹாத்' என்ற வார்த்தை பொருந்தும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஹஜ் செய்வதும் ஜிஹாத்

அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?'' என்று நான் கேட்டேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்'' என்றார்கள்.  நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),  நூல் : புகாரி 1861, 1520, 2784

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸின் மூலம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்படும் ஹஜ்ஜை நிறைவேற்றுவது சிறந்த ஜிஹாத் என்பதை விளங்க முடிகிறது.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார்.  நபி (ஸல்) அவர்கள், "உன் தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றார்களா?'' என்று கேட்டார்கள்.  அதற்கு அம்மனிதர், "ஆம்'' என்று பதிலளித்தார்.  "அப்படியென்றால் அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),  நூல் : புகாரி 3004,5972

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை ஜிஹாத் என்ற வார்த்தையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நியாயத்திற்காக நாவினால் குரல் கொடுப்பதும் ஜிஹாத்.

ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. "ஜிஹாதில் சிறந்தது எது?'' என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),  நூல் : நஸயீ 4138


நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாதில் சிறந்தது எது?'' என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),  நூல் : அஹ்மத் 18074

"ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : அபூதாவூத் 3781

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஆட்சியாளர்களின் தவறுகளையும், அவர்களின் நியாயமற்ற போக்குகளையும் சுட்டிக்காட்டி நாவினாலும், எழுத்துக்களினாலும் தைரியமாக எதிர்ப்பதும் ஜிஹாத் தான் என்பதையும், மேலும் அது தான் சிறந்த ஜிஹாத் என்பதையும் விளங்க முடியும்.

எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை.  அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள்.  அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.  அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள்.  தாம் செய்யாதவற்றை அவர்கள் சொல்வார்கள்.  தமக்குக் கட்டளையிடப் படாதவற்றைச் செய்வார்கள்.  ஆகவே யார் இவர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார்.  யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் ஆவார்.  யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் தாம்.  இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : முஸ்லிம் - 71

மேற்கண்ட ஹதீஸ் முஃமின்களின் பண்பைப் பற்றிக் கூறும்போது கை, நாவு, உள்ளம் ஆகிய மூன்று வழிகளிலும் தீமைக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை ஜிஹாத் என்று குறிப்பிடுகின்றது.

உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),  நூல் : நஸயீ 3141

மேற்கண்ட ஹதீஸ் கை, நாவு, பொருளாதார உதவி ஆகிய மூன்று வழிகளில் தீமைக்கெதிராக போர் புரிவதையும் ஜிஹாத் என்று தான் சொல்கிறது.

இதன்மூலம் அநீதி, அக்கிரமம் போன்ற எத்தகைய தீமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் ஜிஹாத் தான் என்பதைத் தெளிவாக விளங்க முடிகிறது.

மனதைக் கட்டுப்படுத்துவதும் ஜிஹாத்.

தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிட்டவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபுழாலத் பின் உபைத் (ரலி),  நூல் : திர்மிதி 1546

மேற்கண்ட ஹதீஸ் மூலம் தீய எண்ணங்களைக் கொண்டு நம்மை வழிகெடுத்து, இறைவனுக்கு மாறு செய்யக்கூடிய செயல்களை செய்விக்கத் தூண்டும் நமது மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவதும் "ஜிஹாத்' தான் என்பதை விளங்க முடிகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 03) அழைப்புப் பணியும் ஜிஹாதே!


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 03)
அழைப்புப் பணியும் ஜிஹாதே!



(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

"ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்பது மட்டும் பொருளல்ல!  அது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை என்பதைப் பார்த்து வருகின்றோம்.  ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி, அழைப்புப் பணி ஆகிய பொருள்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களைக் கடந்த தொடர்களி்ல் கண்டோம்.

அழைப்புப் பணி செய்வதும் "ஜிஹாத்' தான் என்பதை வலியுறுத்தும் மேலும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன்9:73)

இந்த வசனத்திலும் "போரிடுதல்' என்ற அர்த்தத்தில் "ஜிஹாத்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆனால் இது நேரடியாக ஆயுதமேந்திப் போரிடுவதைக் குறிக்கக் கூடியதல்ல. ஏனென்றால் ஒட்டுமொத்தமாக இறை மறுப்பாளர்கள் எல்லோருடனும் ஆயுதமேந்தி போர் செய்ய அனுமதி கிடையாது. (இதுபற்றி பின்னர் திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் காண்போம்).

மேலும் இந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் - நயவஞ்சகர்களுடனும் போரிடுமாறு நபி (ஸல்) அவர்களை நோக்கி இறைவன் கூறுகின்றான். முனாஃபிக்கீன்களைப் பொறுத்த வரை அவர்கள் இடத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு மாற்றி, மாற்றி பேசக்கூடியவர்களாகவும், முஸ்லிம்களிடம் இரண்டறக் கலந்து வாழ்பவர்களாகவும், போரிலும் கூட முஸ்லிம்களுடன் கலந்து கொள்பவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதை, முனாஃபிக்கீன்களின் தன்மைகள் குறித்த ஏராளமான குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களைக் காண்போம்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே.  நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.(அல்குர்ஆன்2:14)

மேற்கண்ட வசனம் முனாஃபிக்கீன்களின் இரட்டை நிலையைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறது.

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.  (அல்குர்ஆன் 4:142)

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.  (அல்குர்ஆன் 9:54)

மேற்கண்ட வசனங்கள் முனாஃபிக்கீன்களின் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் அல்லாஹ்வையும், ரசூலையும் மறுத்த போதும் உள்ளுணர்வோ, இறையச்சமோ இன்றி அசட்டையாக, மக்களுக்குக் காட்டுவதற்காக தொழுகையில் ஈடுபட்டதையும், இறைவழியில் செலவு செய்ததையும் பற்றி கூறுகிறது.

(முஹம்மதே!) உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச் செய்து அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் "என்னுடன் ஒரு போதும் புறப்படாதீர்கள்! என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள்! நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்!'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:83)

இந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் வேண்டா வெறுப்புடன் முஸ்லிம்களுடன் சேர்ந்து போர் செய்து வந்ததையும், அந்த அடிப்படையிலேயே அவர்கள் போருக்குச் செல்ல அனுமதி கேட்டால், மறுத்து விடுமாறு இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துகிறான். இதிலிருந்து முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களின் அணியில் சேர்ந்து இறை நிராகரிப்பாளர்களுடன் போரிட்டு வந்ததையும், அந்த வழக்கப்படியே அனுமதி கேட்டார்கள் என்பதையும் விளங்க முடிகிறது.

மேலும், முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்டதை அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன. (ஆனால் அவர்கள் போரிட்டது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக அல்ல, மக்களுக்குக் காட்டுவதற்காக என்பது தனி விஷயம்)

முனாஃபிக்கீன்கள் நபி (ஸல்) அவர்களை நேரடியாக எதிர்க்கவில்லை. அவர்கள் மறைமுகமாக இஸ்லாத்திற்கு எதிரான வேலைகளைச் செய்துள்ளனர். எனவே தான் முனாஃபிக்கீன்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஆயுதமேந்தி போரிட்டது கிடையாது.

இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்று விளக்கம் தந்தால், முனாஃபிக்கீன்களுடன் (ஆயுதமேந்தி) போரிடுமாறு இறைவன் இட்ட கட்டளையை நபி (ஸல்) அவர்கள் புறக்கணித்ததாக ஆகிவிடும். (நவூதுபில்லாஹி மின்ஹா)

எனவே முனாஃபிக்கீன்களுடன் ஆயுதமேந்தி நபி (ஸல்) அவர்கள் போரிடாமல் இருந்ததிலிருந்து இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள "ஜிஹாத்' என்பதற்கு குர்ஆனைக் கொண்டு கடுமையான முறையில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்து அவர்களின் தவறான பிரச்சாரங்களை முறியடித்தார்கள் என்றே பொருள்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மூலம் அழைப்புப் பணியில் ஈடுபடுவதும் "ஜிஹாத்' தான் என்பதை விளங்க முடிகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More