Sunday, 7 August 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 05) செல்வத்தால் போரிடுதல்.


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 05)
செல்வத்தால் போரிடுதல்.


(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது, மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவது, நீதிக்காக (நாவினால்) குரல் கொடுப்பது ஆகிய நற்செயல்கள் அனைத்தும் "ஜிஹாத்' என்பதை ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களின் மூலம் சென்ற தொடரில் நாம் பார்த்தோம்.

இவை அல்லாமல் நேரடியாகக் களப் போரில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வதும், அந்த யுத்தத்திற்குத் தேவையான தளவாடங்களுக்காக தங்களிடமுள்ள செல்வங்களைச் செலவிடுவதும் "ஜிஹாத்' (அறப்போர்) தான் என்பதை விளக்கும் ஒரு சில வசனங்களை உதாரணத்திற்குக் காண்போம்.

நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்கள் மற்றும் உயிர்களால் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும் அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 4:95)

(படைபலம்) குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்!  நீங்கள் அறிந்தால் இது உங்களுக்குச் சிறந்தது.  (அல்குர்ஆன் 9:41)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போருக்குச் செல்லாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்க மாட்டார்கள். (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன்.  (அல்குர்ஆன் 9:44)

அல்லாஹ்வின் தூதர் (முஹம்மத், தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். "கோடையில் புறப்படாதீர்கள்!'' எனவும் அவர்கள் கூறுகின்றனர். "நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது'' என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?  (அல்குர்ஆன்9:81)

இத்தூதரும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுகின்றனர். அவர்களுக்கே நன்மைகள் உண்டு. அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்9:88)

நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்ப வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அறப்போர் புரிய வேண்டும்; நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது.  (அல்குர்ஆன் 61:11)

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்.  (அல்குர்ஆன் 49:15)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தும், பொருட்களைக் கொண்டும், உயிர்களைக் கொண்டும் இறைவழியில் போரிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு, அவ்வாறு போரிடுவது "ஜிஹாத்' என்றும் கூறுகின்றன.

இந்த வசனங்களில் கூறப்படும் பொருட்கள் - செல்வங்கள் என்பது, போர்க்களத்தின் தேவைக்காக - அதாவது வாகனங்கள், போர்க்கருவிகள், உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக செலவாகும் தொகையைக் குறிக்கக் கூடியது.

ஒரு நாட்டின் அரசாங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட முறையான இராணுவம், இராணுவப் பயிற்சி மையம், இராணுவத் தளவாடங்கள், பாதுகாப்பு அமைச்சகம், இராணுவம் அல்லது பாதுகாப்புத் துறைக்கான முறையான கட்டமைப்பு, அதற்கான செலவினங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும் முறை ஆகியவை இப்போது உள்ளது போல் அக்காலத்தில் கிடையாது.

பெருமானார் (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று, ஜிஹாத் (யுத்தம்) செய்ய முன் வந்தவர்கள் மூன்று வகையினராக இருந்தனர்.  முதல் வகையினர் - யுத்தக் களம் சென்று நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்குத் தேவையான உடல் வலிமையுடன் குதிரைகள், ஒட்டகம், போர்க் கருவிகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான உணவு போன்ற தேவைகளை சுயமாகப் பெற்றிருந்தவர்கள் அல்லது அவற்றைப் பெறுவதற்கான பொருளாதார வசதியைப் பெற்றிருந்தவர்கள்.  இரண்டாவது வகையினர் - போரில் ஈடுபடுவதற்கான உடல் வ-மையை மட்டும் பெற்றிருந்தவர்கள்.

மூன்றாவது வகையினர் - பொருளாதார வசதியை மட்டும் பெற்று, போரில் நேரடியாக ஈடுபடுவதற்கான ஆற்றலைப் பெறாதவர்கள்.  இந்த வகையினர் தங்களிடமிருந்த பொருளாதாரத்தைக் கொண்டு, இரண்டாவது வகையினருக்குத் தேவையான போர் செலவினங்களைச் செய்தனர்.  இந்த முறையில் தான் அக்கால முஸ்லிம்கள் போர் முனைகளைச் சந்தித்தனர்.

இதை ஆர்வமூட்டுகின்ற வகையில் தான் மேற்கண்ட வசனங்கள் அனைத்தும், "பொருட்களாலும், உயிர்களாலும், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (யுத்தம்) செய்யுங்கள்'' என்று இரண்டு வகை நற்செயல்களையும் ஒன்று சேர்த்து, அந்த இரு வழிகளுமே "ஜிஹாத்' தான் என்று கூறுகின்றன.

நாம் இது வரை பார்த்த திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆயுதமேந்திப் போரிட்டு எதிரிகளை வெட்டுவது, கொல்வது போன்ற செயல்கள் மட்டுமே ஜிஹாத் அல்ல என்பதையும், மாறாக அது மேலும் பல நற்செயல்களைக் குறிக்கக் கூடிய ஒரு பொதுவான சொல் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.    

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 04) நீதிக்குக் குரல் கொடுப்போம்.


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 04)
நீதிக்குக் குரல் கொடுப்போம்.

(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

"ஜிஹாத்”என்பதற்கு உழைத்தல்,பாடுபடுதல்,வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி ஆகிய அர்த்தங்கள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் சான்றுகளுடன் இதுவரை பார்த்தோம். 

மேலும் என்னென்ன நற்செயல்களுக்கு "ஜிஹாத்' என்ற வார்த்தை பொருந்தும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஹஜ் செய்வதும் ஜிஹாத்

அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?'' என்று நான் கேட்டேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்'' என்றார்கள்.  நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),  நூல் : புகாரி 1861, 1520, 2784

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸின் மூலம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்படும் ஹஜ்ஜை நிறைவேற்றுவது சிறந்த ஜிஹாத் என்பதை விளங்க முடிகிறது.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார்.  நபி (ஸல்) அவர்கள், "உன் தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றார்களா?'' என்று கேட்டார்கள்.  அதற்கு அம்மனிதர், "ஆம்'' என்று பதிலளித்தார்.  "அப்படியென்றால் அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),  நூல் : புகாரி 3004,5972

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை ஜிஹாத் என்ற வார்த்தையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நியாயத்திற்காக நாவினால் குரல் கொடுப்பதும் ஜிஹாத்.

ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. "ஜிஹாதில் சிறந்தது எது?'' என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),  நூல் : நஸயீ 4138


நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாதில் சிறந்தது எது?'' என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),  நூல் : அஹ்மத் 18074

"ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : அபூதாவூத் 3781

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஆட்சியாளர்களின் தவறுகளையும், அவர்களின் நியாயமற்ற போக்குகளையும் சுட்டிக்காட்டி நாவினாலும், எழுத்துக்களினாலும் தைரியமாக எதிர்ப்பதும் ஜிஹாத் தான் என்பதையும், மேலும் அது தான் சிறந்த ஜிஹாத் என்பதையும் விளங்க முடியும்.

எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை.  அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள்.  அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.  அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள்.  தாம் செய்யாதவற்றை அவர்கள் சொல்வார்கள்.  தமக்குக் கட்டளையிடப் படாதவற்றைச் செய்வார்கள்.  ஆகவே யார் இவர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார்.  யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் ஆவார்.  யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் தாம்.  இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : முஸ்லிம் - 71

மேற்கண்ட ஹதீஸ் முஃமின்களின் பண்பைப் பற்றிக் கூறும்போது கை, நாவு, உள்ளம் ஆகிய மூன்று வழிகளிலும் தீமைக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை ஜிஹாத் என்று குறிப்பிடுகின்றது.

உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),  நூல் : நஸயீ 3141

மேற்கண்ட ஹதீஸ் கை, நாவு, பொருளாதார உதவி ஆகிய மூன்று வழிகளில் தீமைக்கெதிராக போர் புரிவதையும் ஜிஹாத் என்று தான் சொல்கிறது.

இதன்மூலம் அநீதி, அக்கிரமம் போன்ற எத்தகைய தீமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் ஜிஹாத் தான் என்பதைத் தெளிவாக விளங்க முடிகிறது.

மனதைக் கட்டுப்படுத்துவதும் ஜிஹாத்.

தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிட்டவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபுழாலத் பின் உபைத் (ரலி),  நூல் : திர்மிதி 1546

மேற்கண்ட ஹதீஸ் மூலம் தீய எண்ணங்களைக் கொண்டு நம்மை வழிகெடுத்து, இறைவனுக்கு மாறு செய்யக்கூடிய செயல்களை செய்விக்கத் தூண்டும் நமது மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவதும் "ஜிஹாத்' தான் என்பதை விளங்க முடிகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 03) அழைப்புப் பணியும் ஜிஹாதே!


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 03)
அழைப்புப் பணியும் ஜிஹாதே!



(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

"ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்பது மட்டும் பொருளல்ல!  அது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை என்பதைப் பார்த்து வருகின்றோம்.  ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி, அழைப்புப் பணி ஆகிய பொருள்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களைக் கடந்த தொடர்களி்ல் கண்டோம்.

அழைப்புப் பணி செய்வதும் "ஜிஹாத்' தான் என்பதை வலியுறுத்தும் மேலும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன்9:73)

இந்த வசனத்திலும் "போரிடுதல்' என்ற அர்த்தத்தில் "ஜிஹாத்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆனால் இது நேரடியாக ஆயுதமேந்திப் போரிடுவதைக் குறிக்கக் கூடியதல்ல. ஏனென்றால் ஒட்டுமொத்தமாக இறை மறுப்பாளர்கள் எல்லோருடனும் ஆயுதமேந்தி போர் செய்ய அனுமதி கிடையாது. (இதுபற்றி பின்னர் திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் காண்போம்).

மேலும் இந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் - நயவஞ்சகர்களுடனும் போரிடுமாறு நபி (ஸல்) அவர்களை நோக்கி இறைவன் கூறுகின்றான். முனாஃபிக்கீன்களைப் பொறுத்த வரை அவர்கள் இடத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு மாற்றி, மாற்றி பேசக்கூடியவர்களாகவும், முஸ்லிம்களிடம் இரண்டறக் கலந்து வாழ்பவர்களாகவும், போரிலும் கூட முஸ்லிம்களுடன் கலந்து கொள்பவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதை, முனாஃபிக்கீன்களின் தன்மைகள் குறித்த ஏராளமான குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களைக் காண்போம்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே.  நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.(அல்குர்ஆன்2:14)

மேற்கண்ட வசனம் முனாஃபிக்கீன்களின் இரட்டை நிலையைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறது.

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.  (அல்குர்ஆன் 4:142)

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.  (அல்குர்ஆன் 9:54)

மேற்கண்ட வசனங்கள் முனாஃபிக்கீன்களின் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் அல்லாஹ்வையும், ரசூலையும் மறுத்த போதும் உள்ளுணர்வோ, இறையச்சமோ இன்றி அசட்டையாக, மக்களுக்குக் காட்டுவதற்காக தொழுகையில் ஈடுபட்டதையும், இறைவழியில் செலவு செய்ததையும் பற்றி கூறுகிறது.

(முஹம்மதே!) உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச் செய்து அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் "என்னுடன் ஒரு போதும் புறப்படாதீர்கள்! என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள்! நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்!'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:83)

இந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் வேண்டா வெறுப்புடன் முஸ்லிம்களுடன் சேர்ந்து போர் செய்து வந்ததையும், அந்த அடிப்படையிலேயே அவர்கள் போருக்குச் செல்ல அனுமதி கேட்டால், மறுத்து விடுமாறு இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துகிறான். இதிலிருந்து முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களின் அணியில் சேர்ந்து இறை நிராகரிப்பாளர்களுடன் போரிட்டு வந்ததையும், அந்த வழக்கப்படியே அனுமதி கேட்டார்கள் என்பதையும் விளங்க முடிகிறது.

மேலும், முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்டதை அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன. (ஆனால் அவர்கள் போரிட்டது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக அல்ல, மக்களுக்குக் காட்டுவதற்காக என்பது தனி விஷயம்)

முனாஃபிக்கீன்கள் நபி (ஸல்) அவர்களை நேரடியாக எதிர்க்கவில்லை. அவர்கள் மறைமுகமாக இஸ்லாத்திற்கு எதிரான வேலைகளைச் செய்துள்ளனர். எனவே தான் முனாஃபிக்கீன்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஆயுதமேந்தி போரிட்டது கிடையாது.

இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்று விளக்கம் தந்தால், முனாஃபிக்கீன்களுடன் (ஆயுதமேந்தி) போரிடுமாறு இறைவன் இட்ட கட்டளையை நபி (ஸல்) அவர்கள் புறக்கணித்ததாக ஆகிவிடும். (நவூதுபில்லாஹி மின்ஹா)

எனவே முனாஃபிக்கீன்களுடன் ஆயுதமேந்தி நபி (ஸல்) அவர்கள் போரிடாமல் இருந்ததிலிருந்து இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள "ஜிஹாத்' என்பதற்கு குர்ஆனைக் கொண்டு கடுமையான முறையில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்து அவர்களின் தவறான பிரச்சாரங்களை முறியடித்தார்கள் என்றே பொருள்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மூலம் அழைப்புப் பணியில் ஈடுபடுவதும் "ஜிஹாத்' தான் என்பதை விளங்க முடிகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

Tuesday, 19 July 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 02)


.
ஜிஹாதின் அர்த்தங்கள்
(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

"ஜிஹாத்' என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல் என்ற பொருளும், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருளும் உள்ளது என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களை சென்ற இதழில் கண்டோம்.  மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய வசனங்களைக் காண்போம்.

உறுதி.

ஜிஹாத் என்பதற்கு உறுதி என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  அது சம்பந்தமான வசனங்களைக் காண்போம்.

"நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே' என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா? என்று நம்பிக்கை கொண்டோர் (மறுமையில் வியப்புடன்) கூறுவார்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. நஷ்டமடைந்தோரில் அவர்களும் ஆகி விட்டனர்.  (அல்குர்ஆன் 5:53)

"எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன என (முஹம்மதே!) கூறுவீராக! அது நிகழும் போது அவர்கள் நம்ப மாட்டார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?  (அல்குர்ஆன் 6:109)

இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 16:38)

(முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்கின்றனர். "சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!  (அல்குர்ஆன் 24:53)

தங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தால் எந்த ஒரு சமுதாயத்தையும் விட தாங்கள் நேர் வழி பெற்றோர் ஆவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தார்கள். அவர்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்த போது அது அவர்களுக்கு வெறுப்பையும், பூமியில் பெருமையடிப்பதையும், கெட்ட சூழ்ச்சியையும் தவிர (வேறு எதையும்) அதிகமாக்கவில்லை. கெட்ட சூழ்ச்சி அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும். முன்னோர்களின் கதியைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காணமாட்டீர்! அல்லாஹ்வின் நடைமுறையில் எந்தத் திருப்பத்தையும் காண மாட்டீர்.     (அல்குர்ஆன் 35:42,43)

மேற்கண்ட வசனங்கள் அனைத்திலுமே "உறுதியாக'' என்ற பொருள்பட அல்லாஹ்வின் மீது செய்யப்பட்ட சத்தியத்தின் வலிமையைக் காட்டுவதற்கு "ஜஹத' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இடங்களிலெல்லாம் "ஜஹத' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்ற அர்த்தம் செய்தால் "அல்லாஹ்வின் மீது ஆயுதமேந்திப் போரிட்டு'' சத்தியம் செய்தார்கள் என்று விபரீதமான பொருளைத் தந்து விடும். (நவூதுபில்லாஹ்)  அது போல் முன்பு செய்யப்பட்ட உழைப்பு, கட்டாயப் படுத்துதல் போன்ற வார்த்தைகளும் இந்த இடத்திற்குப் பொருந்தாது.  எனவே இந்த வசனங்களின் மூலம் ஜிஹாத் என்பதற்கு "உறுதி' என்ற அர்த்தமும் உள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

அழைப்புப் பணியில் ஈடுபடுதல்.

"ஜிஹாத்' என்பதற்கு "அறப்போர்' என்ற பொருளடங்கிய வசனங்களையும், சத்தியத்தை எடுத்துரைத்து பிரச்சாரப் பணியில் ஈடுபடுவதும் அறப்போர் தான் என்பதற்கான குர்ஆன் வசனங்களையும் காண்போம்.

அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்! இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். (அல்குர்ஆன் 22:78)

இந்த வசனத்தின் மூலம் தஃவா - அழைப்புப் பணி செய்வதும் "ஜிஹாத்' தான் என்பதை தெளிவாக விளங்க முடியும். மேலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தப் பணி எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.

அல்லாஹ்வுக்காக ஜிஹாத் - அறப்போர் செய்ய வேண்டும் என்று கூறும் இறைவன், அதை எவ்விதத்தில் செய்ய வேண்டும் என்பதையும் இந்த வசனத்தில் விளக்குகிறான். நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு சத்தியப் பிரச்சாரம் செய்ததையும், அந்த சத்தியத்தை அறிந்து கொண்டவர்கள் அறியாத மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையும், இதுவே அறப்போர் - ஜிஹாத் செய்யும் விதம் என்பதையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக! (அல்குர்ஆன் 25:52)

இந்த வசனத்திலும் "போரிடுதல்' என்ற அர்த்தத்தில் "ஜிஹாத்' என்ற வார்த்தை இடம் பெறுகிறது. ஆனால் இந்த வசனம் "குர்ஆன் மூலம் போரிடுங்கள்'' என்று சொல்வதிலிருந்து, ஆயுதமேந்திப் போரிடுதல் என்று விளங்க முடியாது.

குர்ஆனைக் கொண்டு கடுமையாகப் போரிட வேண்டும் என்பதற்கு, குர்ஆனில் இறைவன் அருளியுள்ள சத்தியத்தைக் கொண்டு கடுமையான பிரச்சாரம் செய்வது என்பதே பொருள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

Saturday, 16 July 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 01)

(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

ஜிஹாத் - இந்த சொல்லைக் கேட்டாலே ஒரு சாரார் வெறுப்பின் உச்சத்திற்குச் செல்வதையும் மற்றொரு சாரார் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, தங்களையும் தங்கள் சமுதாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் காண முடிகின்றது.

ஜிஹாதைப் பற்றி மேற்கண்ட இரு சாராரும் கொண்டுள்ள கருத்துக்கள் சரியானவை தாமா? இறுதி வேதமான திருமறைக் குர்ஆனும் இறுதித் தூதராகிய பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையும் ஜிஹாத் சம்பந்தமாக என்ன விளக்கமளிக்கின்றன?  ஓர் உண்மை முஸ்லிம் ஜிஹாத் பற்றி எப்படிப் புரிந்து நடக்க வேண்டும்? என்பதை விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு தான் "ஜிஹாத் - ஓர் ஆய்வு'.

ஜிஹாத் பற்றிய இந்த ஆய்வில், முஸ்லிமல்லாதவர்களில் பலர் ஜிஹாதைப் பற்றி ஏன் வெறுக்கின்றார்கள்? அதற்கு அவர்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் என்ன? அவை சரியானவை தாமா? என்பதை அலசவிருக்கின்றோம்.  மேலும் முஸ்லீம்களிலேயே ஜிஹாதைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.  அவை யாவை?  குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எந்தக் கருத்து சரியானது? என்பதை நாம் இன்ஷா அல்லாஹ் காணவிருக்கின்றோம்.

இது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குச் செல்வதற்கு முன், முதலில் ஜிஹாத் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ஆயுதமேந்திப் போரிடுவது தானா? அல்லது ஜிஹாத் என்பதற்கு வேறு பொருளும் உண்டா? என்பதைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் ஜிஹாத் என்ற பதம் பல்வேறு நல்ல அமல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றது.  "ஜஹத' என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது தான் "ஜிஹாத்' எனும் பதம். இதற்கு நேரடி அகராதிப் பொருள் உழைப்பது, பாடுபடுவது என்பதாகும்.  திருக்குர்ஆனின் பல இடங்களில் ஜிஹாத் ஃபீ ஸபீலில்லாஹ் என்று குறிப்பிடுவதன் நேரடி அர்த்தம் அல்லாஹ்வின் வழியில் உழைப்பது, பாடுபடுவது என்பதாகும்.

திருக்குர்ஆனில் ஜிஹாத் என்ற வார்த்தை பல இடங்களில் வெவ்வேறு அர்த்தம் தரக் கூடிய வகையில் இடம் பெற்றுள்ளதை இப்போது பார்ப்போம்.

உழைத்தல் - பாடுபடுதல்.

ஜிஹாத் என்பதற்கு உழைப்பது, பாடுபடுவது என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான்.  அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.(அல்குர்ஆன் 9:79)

மேற்கண்ட வசனத்தில் உள்ள "ஜுஹ்த' என்ற அரபுச் சொல்லுக்கு "உழைப்பு' என்ற பொருள் இடம் பெற்றுள்ளதைக் கவனிக்க வேண்டும்.  இந்த இடத்தில் ஜிஹாதுக்கு வழக்கத்தில் உள்ள அர்த்தத்தைக் கொடுத்தால், "தாராளமாக செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது ஜிஹாதை (போரை) தவிர எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறிக் கேலி செய்கின்றனர்'' என்ற தெளிவற்ற - அர்த்தமற்ற வாசகமாக ஆகி விடும்.  எனவே இதிலிருந்து ஜிஹாத் என்பதற்கு உழைப்பது என்ற பொருள் உள்ளதை அறிய முடிகின்றது.

உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.  (அல்குர்ஆன் 29:6)

மேற்கண்ட வசனத்திலும் உழைப்பவர் என்பதற்கு "ஜாஹத' என்ற வார்த்தையும், உழைக்கிறார் என்பதற்கு "ஜாஹிது' என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது.

நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 29:69)

இந்த வசனத்திலும் "உழைப்போருக்கு' என்பதற்கு, "ஜாஹதூ' என்ற வார்த்தையே இடம் பெறுகின்றது.

மேற்கண்ட வசனங்கள் மூலம் "ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுவது என்பது நேரடிப் பொருளல்ல!  உழைப்பது, பாடுபடுவது என்ற அர்த்தமும் உள்ளதை விளங்க முடிகின்றது.

வற்புறுத்துதல் - கட்டாயப்படுத்துதல்.

"ஜிஹாத்' என்பதற்கு வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  அது சம்பந்தமாக உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.  (அல்குர்ஆன் 29:8)

மேற்கண்ட வசனத்தில் "உன்னை வற்புறுத்தினால்' என்பதற்கு "ஜாஹதாக' என்ற வார்த்தை இடம் பெறுவதைக் கவனிக்க வேண்டும்.  இந்த இடத்தில் ஜாஹதாக என்பதற்கு உன்னை ஆயுதமேந்தினால், உன்னைப் போரிட்டால், உன்னை தியாகம் செய்தால், உன்னைப் பாடுபட்டால் என்ற அர்த்தம் கொடுத்தால் என்ன நிலை ஏற்படும்.  யாருக்காவது ஏதாவது விளங்குமா?  எனவே இந்த வசனத்தி-ருந்து ஜிஹாத் என்பதற்கு வற்புறுத்துதல் என்ற அர்த்தம் உள்ளதை விளங்க முடிகின்றது.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.  (அல்குர்ஆன் 31:15)

இந்த வசனத்திலும் "உன்னைக் கட்டாயப்படுத்தினால்' என்பதற்கு "ஜாஹதாக' என்ற வார்த்தை இடம் பெறுவதைக் கவனிக்க வேண்டும்.  இந்த இடத்திலும் ஜிஹாத் என்பதற்கு மேற்சொன்ன ஏனைய பொருள்களைப் பயன்படுத்த முடியாது என்பதை எளிதாகப் புரிய முடிகின்றது.

எனவே இவ்விரு வசனங்களின் மூலம் "ஜிஹாத்' என்பதற்கு வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற அர்த்தமும் உள்ளதை விளங்க முடிகின்றது.

"ஜிஹாத்' என்பதற்கு மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய திருக்குர்ஆன் வசனங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

Thursday, 14 July 2011

பிரவுன் ஷுகர் கடத்திய SDPI போராளிகள்(?)!



அரசியலை நமதாக்குவோம், தேசத்தைப் போதுவாக்குவோம் என்ற போலி வாக்குறுதிகளுடன் களமிறங்கியிருக்கும் SDPI யின் முக்கியப் பிரமுகர் செய்த கொலை செயல் கேரள முஸ்லிம்களிடையே மட்டுமின்றி காவல் துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய பிரவுன் ஷுகர் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருளைக் கடத்தி தேசத்தைப் பொதுவாக்கியுள்ள்ளார் SDPI யின் முக்கியப் பிரமுகர்.

கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகில் உள்ள பாரப்பட்டி என்னும் ஊரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கேரள போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் குறிப்பிட்ட அந்த இடத்தில் முகாமிட்டிருந்தது காவல்துறை. அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது SDPI முக்கியப் பிரமுகர் ஹாரிஸ் என்பவர் உள்ளிட்ட 4 பேர் அந்தக் காரில் இருந்தனர்.இவர்களின் காரை சோதனை செய்த போலீஸார் அந்த வாகனத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிரவுன் ஷுகர் என்னும் போதைப் பொருள்களை பாக்கெட் பாக்கெட்டுகளாக பறிமுதல் செய்தனர்.சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, இந்தக் குழுவிற்குத் தலைவனாக செயல்பட்ட ஹாரிஸ் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதே காரில் தப்பி ஓடி விட்டார். ஹாரிஸை நோக்கி தேடுதல் வேட்டையை தொடர்ந்த காவல் துறையினர் ஹாரிஸ் தப்பிச் சென்ற காரினை மன்னார்க்காடு என்னும் இடத்தில் கண்டெடுத்தனர். அத்தோடு ஹாரிஸ் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர் கேரள காவல்துறையினர்.கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு ரூபாய் 2 கோடி என மதிப்பிட்டுள்ளது கேரள காவல்துறை. தப்பியோடிய ஹாரிஸ் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிரப்புழா பகுதியில் SDPI யின் சார்பில் 18வது வார்டு உறுப்பினராக நின்றவர் இவர்.இஸ்லாமிய மார்க்கம், இசையை ஷைத்தானின் ஆயுதம் என்று சொல்லும் நேரத்தில் அதையெல்லாம் தூக்கி குப்பையில் எறிந்து விட்டு தங்கள் கட்சிக்கு அதிரடி இசைகளுடன் பாடல்களை உண்டாக்கி இசையை ஹலாலாக்கிய இவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தனர். அதுவும் தமிழகத்தில் மூலைக்கு மூலை, தெருவுக்கு தெரு முஸ்லிம் வேட்பாளரை ஆதரியுங்கள், முஸ்லிம் வேட்பாளருக்கு மட்டும் வாக்களியுங்கள், இஸ்லாமிய ஆட்சி அமைய கரம் கொடுங்கள் என்று சொல்லி விட்டு கேரளத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?கேரள மாநிலம் ஆலுவா என்ற தொகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தத் தொகுதியில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்றவை இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்திய நேரத்தில், அரசியலை நமதாக்குவோம் கோஷம் போட்ட இந்த போலிகள் மட்டும் ராய் அரக்கல் என்ற கிறித்தவ வேட்பாளரை தங்கள் கட்சியின் சார்பாக நிறுத்தி தங்களின் போலி முகத்தை வெளிப்படுத்தினர்.ஒவ்வொரு இடத்திலும் இவர்கள் செய்யும் அடாவடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டு இருக்கும் நேரத்தில், கேரளாவில் பிரவுன் ஷுகர் கடத்திய ஹாரிஸ் என்னும் SDPI யின் முக்கியப் பிரமுகரால் இவர்களின் செல்வாக்கு இப்போது சரிய ஆரம்பித்துள்ளது.இவர்களின் போலி முகமூடிகளை தமிழகத்தில் இருக்கும் இவர்களின் தொண்டர்கள் புரிந்து கொண்டு இவர்களை தமிழகத்திலிருந்து அறவே அப்புறப்படுத்தினால் தான் இஸ்லாமியர்களின் மீது மாற்று மத சகோதரர்களுக்கு இருக்கு கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எஞ்சியிருக்கும் என்பது நிதர்சனம்.    நன்றி : உணர்வு ஜூலை 15 - 21

Saturday, 11 June 2011

ஜிஹாதியம் பேசி வன்முறை வளர்க்கும் சகோதரர்களுக்கும் !தனிமனித வெறுப்பில் வயிறு (இயக்கம்)வளர்க்கும் சகோதரர்களுக்கும்



 
சகோதரர் பீ ஜே ! சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்ததாக !அவதூறு பரப்பி ஆள் சேர்க்கும் இயக்கங்களின் முகத்திரையை கிழிக்கும் முகமாக அவர் அளித்த பதில்களின் இன்னும் சில பகுதிகளைப்பார்ப்போம்.
“சிறைவாசிகள் தொடர்பாக பலவிதமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்த போதும் தமுமுகவில் இருந்த போது தமுமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக நான் பதிலளித்துள்ளேன். அதில் ஒரு பகுதியைத் தான் மேலே பார்த்தீர்கள்.

ஆனால் அதன் பின்னர் சிறைவாசிகளை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த போதும் நான் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் பதில் அளிக்கவில்லை. தனிப்பட்ட சில சந்திப்புகளின் போது இது குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கம் அளித்தது தவிர பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் அது குறித்து நான் விளக்கம் அளிக்கவில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. இது குறித்து நான் பதில் சொல்லப் போனால் தவறுகள் அனைத்தும் சிறைவாசிகள் மீது தான் என்பது உறுதியாகும். இதன் காரணமாக சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் குறைந்து விடக் கூடாது என்று நான் கருதியது தான் அந்தக் காரணம்.

அந்த நிலை இப்போது இல்லை. சிறைவாசிகளில் அதிகமானோர் விடுதலை ஆகி விட்டனர். நான் இது குறித்து விளக்காமல் இருந்தால் பீஜே சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்தார் என்ற பொய் வரலாற்றில் உண்மையாகி விடும். அவ்வாறு ஆகக் கூடாது என்பதாலும், அனைத்தையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அது குறித்து விரிவாக இப்போது விளக்குகிறேன்.
பாஷா அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்த போது அவர்கள் கையெழுத்துப் போட்டு அளித்த சட்டப்பூர்வமான வாக்கு மூலத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு பீஜே தான் பண உதவி செய்தார் என்று கூறி இருந்தனர்.
இப்படி பீஜேயைச் சம்மந்தப்படுத்தி கூறி இருந்தும் பீஜேயை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை? இதில் இருந்து பீஜே அரசாங்கத்தின் உளவாளி என்பது தெரியவில்லையா? என்று பிரச்சாரமும் செய்து வந்தனர்.

நாங்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்படாததால் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் பிரச்சாரம் செய்து வரலாயினர்.
அப்துன்னாஸர் மதானி எங்களுக்கு உதவினார்; அடைக்கலம் தந்தார் என்று கைது செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தினர் கூறியதால் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஆனால் பீஜே மீது வலிமையாக நாங்கள் குற்றம் சுமத்தி இருந்தும் அவர் ஏன் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்படவில்லை என்ற பிரச்சாரம் என்னுடைய எதிரிகள் மத்தியில் நன்றாக எடுபட்டது.
இது குறித்த விளக்கத்தை நான் இப்போது தெளிவுபடுத்துகிறேன்.
பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் எனக்கு எதிராக அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் என்னை நிச்சயம் வழக்கில் சேர்க்க முடியும்.
ஆனால் தமுமுகவுக்கும் அல்உம்மாவுக்கும்  இருந்த பகை பற்றியும், அல் உம்மா இயக்கத்தினர் தமுமுக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும், தமுமுக கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டிச் சாய்த்தது பற்றியும், எங்களைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது பற்றியும் அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் எதிரி இயக்கத்தின் மீது பழி சுமத்தவே இதைக் கூறுகின்றனர் என்பது அதிகாரிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே தெரிந்து விட்டது. இதனால் எங்களில் யாரையும் அவர்கள் வழக்கில் சேர்க்கவில்லை.

ஆனாலும் அரசாங்கம் பீஜேயையும் தமுமுகவையும் வழக்கில் சேர்க்காமல் எங்கள் குற்றச் சாட்டைக் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற நினைக்கிறது என்று பல முனைகளில் அல்உம்மா தரப்பில் பிரச்சாரம் செய்து வந்ததால் வேறு வழியில்லாமல் இது குறித்து விசாரித்து என்னை வழக்கில் சேர்க்க எஸ்.ஐ.டி (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) முடிவு செய்தனர்.
அதன் படி பீஜே ஜவாஹிருல்லா, ஹைதர் அலி,  பாக்கர் ஆகிய நால்வருக்கு எதிராக நீதி மன்ற அனுமதி பெற்று விசாரனைக்கு அழைத்து வரும் உத்தரவு பெற்றனர். மேலும் தமுமுக அலுவலகம், மற்றும் எனது வீடு ஆகியவற்றைச் சோதனை செய்யும் உத்தரவோடு வந்தனர்.
திடீரென தமுமுக அலுவலகத்தில் ரைடு நடத்தினார்கள். அதே நேரம் எனது வீட்டிலும் ஒரு நாள் முழுவதும் சின்னச் சின்ன துரும்பைக் கூட விடாமல் சோதனை செய்தனர்.
எனது வீட்டில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தமுமுக அலுவலகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சில ஃபைல்களையும், அலுவலகத்தில் இருந்த அனைத்து வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்றனர்.

அத்துடன் எங்கள் நால்வரையும் விசாரணைக்காக கோவை வருமாறு உத்தரவிட்டுச் சென்றனர்.
இதன் அடிப்படையில் இந்த வழக்கில் நிச்சயம் சேர்த்து விடுவார்கள் என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரிந்ததால் குடும்பத்துக்குச் சொல்ல வேண்டிய வஸிய்யத்களைச் செய்து விட்டு மற்ற மூவருடன் கோவை புறப்பட்டேன்.

ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர் ஆகிய மூவர் மீதும் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் சாதாரணமான குற்றத்தையே சுமத்தி இருந்தார்கள். அவர்கள் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என்பது என்று எனக்குத் தோன்றியது.. ஆனால் நான் நிச்சயம் கைது செய்யப்படுவேன் என்று உள்ளுணர்வு சொன்னது. அவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுக்களை என் மீது கூறி இருந்தனர்.

நாங்கள் நால்வரும் நான்கு நாட்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டோம்.
குண்டு வைப்பதற்காக ஒரு துணிப் பையில் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் பீஜே தந்தார். அதை மேலப்பாளையம் புகாரி, (அல்லது முஹம்மது அலி) பீஜே வீட்டுக்குப் போய் வாங்கி வந்தார். அந்தப் பணத்தில் தான் குண்டு வைப்பதற்கான பொருள்களை வாங்கினோம் என்பது பாஷா என் மீது சுமத்திய முதல் குற்றச்சாட்டு, என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றதை புகாரியும் உறுதி செய்துள்ளார். இது பொய் என்பதை நான் தான் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கத் தவறினால் வழக்கில் முதல் குற்றவாளியாகக் கூட நான் சேர்க்கப்படலாம் என்று விசாரனை அதிகாரிகள் தெரிவித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர்.
நான் இது குறித்து கீழ்க்கண்டவாறு விளக்கினேன்.

பாஷா ஜாமீனில் வெளியே வந்து தமுமுக அலுவலகத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் ”நான் அடிக்கடி கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறேன். அப்படி கைது செய்யப்பட்டால் என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. எனவே இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன். அதை உங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபரிடம் கொடுத்து மாதாமாதம் இலாபம் வரும் வகையில் முதலீடு செய்து உதவுங்கள்’’ என்று கூறி பாஷா இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். அதைத் தொழில் அதிபர் அன்வர் பாஷா அவர்களிடம் கொடுத்து வைத்து மாதாமாதம் லாபம் வரும் வகையில் அவருக்கு உதவினேன். திடீரென ஒரு நாள் அந்தப் பணம் உடனே வேண்டும் என்று பாஷா கேட்டு அனுப்பினார். உடனே நான் அன்வர் பாஷாவிடம் நிலைமையை விளக்கி பணத்தைத் திருப்பிக் கேட்ட போது நாளை தருவதாகச் சொன்னார். அதன் படி மறுநாள் புஹாரியை (அல்லது முஹம்மது அலியை) வரச் செய்து அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டேன்.

பிற்சேர்க்கை
மேலப்பாளையம் புகாரியிடம் அதிகாரிகள் விசாரித்த போது அவர் உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டார். தொழில் செய்வதற்காக பாஷா அவர்கள் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் வாங்கினாரே தவிர குண்டு வெடிப்புக்காக பிஜே கொடுத்த பணம் அல்ல என்று புஹாரி அளித்த வாக்கு மூலமும் என்னைப் பொய் வழக்கில் சேர்க்காததற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.
பாஷா கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் திரும்ப வாங்கினார் என்று அதிகாரியிடம் நான் தெளிவுபடுத்தி எனக்கும் அல்உம்மாவுக்கும் உள்ள கடும் பகை, அவர்களின் கொலை மிரட்டல் காரணமாக எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு அகிய்வற்றையும் எடுத்துக் காட்டினேன். எங்களுக்குள் இவ்வளவு பகை இருக்கும் போது நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினேன்.
என்னிடம் விசாரித்தது போலவே மற்ற மூவரிடமும் தனியாக இன்னொரு டீம் இது குறித்து விசாரனை செய்தது. அவர்களும் நான் கூறியது போலவே கூறினார்கள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.
ஆனால் காவல்துறையினர் இதை முழுமையாக நம்பாமல் இதை மேலும் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். நாங்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது மறுநாள் சென்னைக்குத் தகவல் கொடுத்து அன்வர் பாஷா அவர்களின் அலுவலகத்தின் கணக்குப் புத்தகத்தைச் சோதித்தனர். அதில் பாஷா பணம் முதலீடு செய்த விபரம் அவருக்கு திருப்பிக் கொடுத்த விபரம் ஆகியவை இருந்ததால் நான் சொல்வது முழு உண்மை என்று கண்டு கொண்டனர்.
அன்வர் பாஷா அவர்கள் இந்த விபரத்தை எழுதி வைத்திருக்காவிட்டால் நானும் 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அல்லது சிறைக்குச் சென்றவுடன் அங்கேயே கொல்லப்படிருக்கவும் கூடும். அல்லாஹ் எனக்குச் செய்த மாபெரும் கருணையால சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து நான் தப்பிக்க முடிந்தது.
அடுத்து பாஷாவின் மைத்துனர் ஜுபைர் என்பவர் ஒரு வாக்கு மூலம் கொடுத்திருந்தார். அது இதை விடக் கடுமையானது.
அவரிடம் கைப்பற்றப்பட்ட ஜெர்மன் துப்பாக்கி பற்றி காவல் துறை விசாரித்த போது நான் பீஜேயை 36 தாக்கர் தெருவில் உள்ள உணர்வு அலுவகத்தில் சந்தித்த போது ஐம்பதினாயிரம் ரூபாய் பனமும் இந்த ஜெர்மன் துப்பாக்கியும் கொடுத்தார் என்று பாஷாவின் மைத்துனர் கூறி இருந்தார்.
இது குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பல வகையில் விசாரித்தனர்.
உண்மையில் இது பொய் என்றால் குற்றம் சுமத்தப்பட்ட நான் தான் இதை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று காவல் துறையினர் எதிர்பார்த்தனர்..
இது பொய் என்று என்னால் எப்படி நிரூபிக்க முடியும்? பாஷா மைத்துனர் ஜுபைர் கொடுத்த வாக்கு மூலத்தின் நகலைத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அவர்கள் நகலைத் தந்தனர்.
அவர் பொத்தாம் பொதுவாக இதைக் கூறி இருந்தால் நான் நிச்சயம் பொய் வழக்கில் சிக்கி இருப்பேன்.
ஜுபைர் என்னைச் சந்தித்த மாதத்தையும் வருடத்தையும் குறிப்பிட்டு இருந்தார். (அந்த வருடம் மாதம் இப்போது நினைவில் இல்லை)
அந்த இடத்தில் தான் அல்லாஹ்வின் மாபெரும்  அற்புதம் நிகழ்ந்தது எனலாம்.
புரசைவாக்கம் தாக்கர் தெருவில் தான் உணர்வு அலுவகம் இருந்தது.
பின்னர் இப்ராஹிம் ஷா தெருவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
அலுவலகம் மாற்றப்பட்டு விட்டாலும் நீதி மன்றத்தில் முகவரி மாற்றம் பற்றிய தீர்ப்பு பெற வேண்டும், அது தாமதமானதால் கடைசி பக்கத்தில் 36 தாக்கர் தெரு என்றே போட்டு வந்தோம். இதைப் பார்த்து விட்டுத் தான் ஜுபைர் தாக்கர் தெரு அலுவலகத்தில் என்னைச் சந்தித்ததாகக் கூறி விட்டார். ஆனால் அவர் கூறிய அந்தக் காலத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பே நாங்கள் இப்ராஹீம் ஷா தெருவுக்கு மாறி விட்டோம்.
அதாவது எந்த மாதத்தில் என்னை தக்கர் தெரு அலுவலகத்தில் சந்தித்ததாக பாஷாவின் மைத்துனர் கூறினாரோ அந்த மாதத்தில் உணர்வு அலுவகமே அந்த முகவரியில் இல்லை என்று நான் தெரிவித்தேன்.
எங்களைக் கஸ்டடியில் வைத்துக் கொண்டே சென்னைக்குத் தகவல் கொடுத்து தாக்கர் தெரு முகவரியில் இருந்து உணர்வு எப்போது இடம் மாறியது என்பதை விசாரிக்கச் செய்தனர். அது போல் இப்ராஹீம் ஷா தெருவில் உள்ள உணர்வு அலுவலகத்தில் சென்று சோதித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் பார்த்து நாங்கள் எவ்வளவு காலமாக இந்த முகவரியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.
மறுநாள் நீங்கள் கூறியது உணமை தான் என அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். நான்கு நாட்கள் கோவையில் வைத்து விசாரித்து விட்டு என் மீதும் மற்ற மூவர் மீதும் பொய்யாகத் தான் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் புகார் கூறியுள்ளனர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதி செய்த பின் எங்கள் நால்வரையும் விடுவித்தனர்.
அப்துன்னாஸர் மதானி தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டை அவரால் பொய் என்று நிரூபிக்க முடியாததால் அவர் பல காலம் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு குண்டு வெடிப்பில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதும் இவர்களால் தான் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்.?
அவரைப் போன்ற பெரிய தலைவர்களையும் வழக்கில் சேர்த்தால் பெரும் போர்ராட்டம் நடக்கும் அதனால் தாங்கள் தப்பிக்கலாம் என்று நினைத்து அவரை வழக்கில் இழுத்து விட்டதாக அவர்களைச் சேர்ந்த ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்போது அப்துன் நாஸர் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கும் இது போன்ற ஒருவரின் வாக்கு மூலமே காரணம்.
ஆனால் நான் நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ்வின் உதவி எனக்கு இருந்ததால் இதில் இருந்தும் நான் தப்பித்தேன். அல்லாஹ்வுக்காகப் போராடப் போவதாகச் சொன்னவர்கள் சம்மந்தமில்லாதவர்கள் மீது பழி போடும் அளவுக்குக் கேவலமாக நடந்து கொண்டனர்.
என் மீது இவர்கள் ப்ழி சுமத்தியதால் தான் என்னையும் சாட்சிகள் பட்டியலில் காவல் துறை சேர்த்தது. எனக்கும் பாஷாவுக்கும் பகை தான் இருந்தது என்பதை நீதி மன்றத்தில் சொல்ல வைத்ததற்கு பாஷாவின் பொய்ப் புகார் தான் காரணம்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீஜே மட்டும் தான் சிறைவாசிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னார் என்று இதையும் பரப்பினார்கள்.
குண்டு வெடிப்பு தொடர்பாக நான் எந்த சாட்சியமும் அளிக்கவில்லை. என் மீது பழி சுமத்தியதால் எனக்கும் இவர்களுக்கும் பகை தான் இருந்தது என்று சொன்னேன். அதுவும் நானாகப் போய் இதைச் சொல்லவில்லை. சிறைவாசிகளின் வழக்கறிஞர் என்னையும் விசாரிக்க வேண்டும் என்று மனு போட்டதன் அடிப்படையில் நீதி மன்றம் எனக்கு சம்மன் அனுப்பியதால் தான் நான் என்னைக் காத்துக் கொள்வதற்காக இவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்ற உண்மையைக் கூறினேன்.
என் மீது பொய்ப் பழியையும் சுமத்திவிட்டு, எனக்குச் சம்மன் அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுவும் போட்டு விட்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக பல முறை நீதி மன்றத்துக்கு என்னை அலைய வைத்து விட்டு, நான் குண்டு வெடிப்பு தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்தும் நான் குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சி கூறியதாகவும் பரப்பினார்கள்.
இதற்காக பாஷா அவர்கள் பிற்காலத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் மற்ற சிலர் இன்னும் திருந்தவில்லை என்பதைக் காண்கிறேன். அவர்களைத் தான் சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.
மீண்டும் நான் உறுதி படக் கூறுகிறேன், நான் எந்தக் காலத்திலும் எந்த மிரட்டலுக்கும் பயப்படக் கூடியவன் அல்ல. தவ்ஹீத்வாதியாக் இருப்பவன் யாருக்கும் பயப்பட மாட்டான். (பார்க்க:www.onlinepj.com - அல் உம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?)
தென்னிந்திய முஸ்லிம்கள் மிகப் பொரும் சோதனைகளை எதிர்நோக்கிய கால கட்டத்தில் அனைத்து முஸ்லிம்களுக்காககவும் ஏன் தாழ்தப்பட்ட இனங்களுக்காகவும் குரல் கொடுக்க ஒரு இயக்கத்தை ஏற்படுத்தினார்,பீஜே.
தமுமுக என்ற இந்த இயக்கத்தின் வளர்ச்சி அப்போது இலங்கை ஜமாஅதே இஸ்லாமியையும் அசைத்தது.அந்தளவுக்கு பீஜே உடைய உரைகள் தாக்கம் செலுத்தின. ஆசிம் அலவி என்பவர் மெஸையாவின் வருகையா என்று அல்ஹஸனாத்தில் கட்டுரை எழுதினார்.அவரது தவறான கருத்துக்களுக்கு இஸமாயில் ஸலபி மறுப்பு எழுதினார்.
அன்று தமுமுகவை விமர்சித்த ஜமாஅதே இஸ்லாமி இன்று போற்றிப் புகழ்கிறது.காரணம் பீஜே என்ற தனி மனிதன் மீது கொண்ட காழ்ப்புணர்வு. அவரது ஆளுமை மவ்தூதியின் தாக்கத்தையும் தாண்டி விகசிக்கின்றமையை இவர்களால் தாங்கமுடியவில்லை.
அதே போல் பீஜே அப்போது தன்மீது பரப்பப்பட்ட அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் தனது பணியை மிகவும் விவேகமாக செய்து கொண்டிருந்தார்.தமுமுக ஆரம்பிக்கப்பட்டது சமுதாய நலன் காக்கவே.சிறைவாசிகள் பற்றி அப்போது அவர் பேசியிருந்தால் அது அவர்களுக்குப் பாதகமாக இருக்கும் என்ற நல்ல நோக்கில் தன் பெயர் பாதிக்கப்டுவதைக் கூட பொருட்படுத்தாமல் அவர் மவுனம் காத்தார். இந்த நிலையில்தான் விடியல் என்ற இக்வான் இயக்கம் சிலரது அவதூறு பரப்பும் பேட்டிகளை சம்பந்தப்பட்ட பீஜேவிடம் எந்தக் கருத்தும்  கேட்காமல் வெளியிட்டு மகிழ்ந்தது.இவர்கள் எந்தளவு நேர்மையான இஸலாமிய ஆட்சிக்காவலர்கள்(?) என்பது இதிலிருந்தே தெரிகிறதல்லவா?
பீஜே அப்போது தன் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதை இவ்வாறு விளக்குகின்றார்.
“இதற்குக் காரணம் இருக்கிறது. இது குறித்து நான் பதில் சொல்லப் போனால் தவறுகள் அனைத்தும் சிறைவாசிகள் மீது தான் என்பது உறுதியாகும். இதன் காரணமாக சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் குறைந்து விடக் கூடாது என்று நான் கருதியது தான் அந்தக் காரணம்.
அந்த நிலை இப்போது இல்லை. சிறைவாசிகளில் அதிகமானோர் விடுதலை ஆகி விட்டனர். நான் இது குறித்து விளக்காமல் இருந்தால் பீஜே சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்தார் என்ற பொய் வரலாற்றில் உண்மையாகி விடும். அவ்வாறு ஆகக் கூடாது என்பதாலும், அனைத்தையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அது குறித்து விரிவாக இப்போது விளக்குகிறேன்.
தொலைநோக்குப் பார்வையும் சமூக அக்கறையும் கொண்ட அவரது மவுனத்திற்கு இந்த அற்ப இயக்கவாதிகள் எத்தகைய அவதூறுகளைப் புணைந்துரைத்துள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் எத்தகைய அபாயகரமானவர்கள் என்பது புலனாகிறது.
பீஜே மீது இத்தனை அவதூறுகளை அள்ளிவீசி பொய்யான தகவல்களை காவல் துறையிடம் கூறி அவரையும் சிறையில் தள்ள இவர்கள் எடுத்த முயற்சிகளை அல்லாஹ் முறியடித்தான். அதை அவர் இதில் நன்றியுடன் நினைவு கூறியுள்ளார்.
மனித திருப்திகளை எதிர்பாராமல் உண்மையை ஊர்வலமாக்குவோருக்கு அல்லாஹ்வின் உதவி நினையாப் புறத்திலிருந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் மார்கக்கத்தை அவனுக்காக ப் பிரசாரம் செய்வோரை அவன் கைவிடுவதில்லை........நன்றி  http://kadayanalluraqsa.com/?p=6205

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More